தூய பரலோக மாதா ஆலயம்
இடம் : பரமன்விளை, படந்தாலுமூடு.
மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை
நிலை : பங்குத்தளம்
கிளைகள் : இல்லை
பங்குத்தந்தை : அருட்தந்தை எக்கர்மன்ஸ்
குடும்பங்கள் : 125
அன்பியங்கள் : 4
ஞாயிறு திருப்பலி : காலை 06.30 மணிக்கு
புதன் மாலை 05.30 மணிக்கு நவநாள், திருப்பலி
வெள்ளி திருப்பலி : மாலை 05.30 மணிக்கு
சனி காலை 06.15 மணிக்கு சிறார் திருப்பலி.
திருவிழா : ஆகஸ்ட் மாதம் 06-ம் தேதி முதல் 15 -ம் தேதி வரையிலான பத்து நாட்கள்.
வரலாறு :
சுமார் 52 வருடங்கள் பாரம்பரியமிக்க ஆலயம்.
ஆரம்பத்தில் திருத்துவபுரம் பங்கின் கிளைப் பங்காக இருந்தது.
பின்னர் களியக்காவிளை பங்கின் கிளையாக இருந்தது.
21-05-2017 அன்று தனிப்பங்காக உயர்த்தப்பட்டது.
பங்கின் முதல் பங்குத்தந்தையாக அருட்பணி சர்ஜின் ரூபஸ் அவர்கள் பொறுப்பேற்று, இப்பங்கினை சிறப்பாக வழிநடத்தி வந்தார்கள்.
தற்போது அருட்தந்தை சர்ஜின் ரூபஸ் அவர்கள் பிலாவிளை பங்கிற்கு மாற்றம் பெற்று சென்றுள்ளார்.
அருட்தந்தை எக்கர்மான்ஸ் அவர்கள் 21-05-2019 அன்று இப்பங்கின் இரண்டாவது பங்குத்தந்தையாக பொறுப்பேற்றுள்ளார்கள்.
வழித்தடம் :
நாகர்கோவில் - திருவனந்தபுரம் நெடுஞ்சாலையில், படந்தாலுமூடு சந்திப்பிலிருந்து IMP Theater செல்லும் சாலையில் வரும் போது வலப்புறம் இவ்வாலயம் அமைந்துள்ளது.