798 புனித அந்தோனியார் ஆலயம், குலசேகரன் புதூர்

      

புனித அந்தோனியார் ஆலயம்

இடம்: குலசேகரன் புதூர், 629 302

மாவட்டம்: கன்னியாகுமரி

மறைமாவட்டம்: கோட்டார்

மறைவட்டம்: தேவசகாயம் மவுண்ட்

நிலை: பங்குத்தளம்

குடும்பங்கள்: 40

பங்குத்தந்தை: அருட்பணி. மார்க்கோனி ரவிச்சந்திரன்

ஞாயிறு திருப்பலி காலை 08:00 மணி

செவ்வாய் மாலை 06:00 மணி புனித அந்தோனியார் நவநாள் திருப்பலி

திருவிழா: ஜூன் 13 ஆம் தேதியை மையமாகக் கொண்ட பத்து நாட்கள்

வரலாறு:

குலசேகரன் புதூர் ஊரானது இராஜாவூர் பங்கின் ஒருபகுதியாக இருந்தபோது 1934 ஆம் ஆண்டு மே மாதம் 05 ஆம் தேதி புனித அந்தோனியார் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் நடைபெற்று வந்தது.‌ செங்கல் சூளை வைத்து ஆலய கட்டுமானத் தேவைக்கான செங்கல்கள் தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 1935 ஆம் ஆண்டு ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றது. அப்போது 15 கத்தோலிக்க குடும்பங்கள் மட்டுமே இங்கு வசித்து வந்தன.‌ அந்நாட்களில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது.

பின்னர் 1945 ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஆரல்வாய்மொழி பங்கின் கிளைப் பங்காக குலசேகரன் புதூர் மாற்றப் பட்டது. அப்போது செவ்வாய்க்கிழமை மாலை புனித அந்தோனியார் நவநாள் திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது. 

1935 இல் கட்டப்பட்ட ஆலயத்தை புதியதாக மாற்ற 15.03.1976 அன்று கோட்டார் மறைமாவட்ட ஆயர் மேதகு ஆரோக்கிய சாமி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, மக்களின் நிதியுதவி மற்றும் மறைமாவட்ட ஒத்துழைப்புடன் பணிகள் நிறைவு பெற்று 22.11.1977 அன்று அர்ச்சிக்கப்பட்டது.

1986 ஆம் ஆண்டு ஆரல்வாய்மொழி பங்கிலிருந்து குலசேகரன் புதூர், இராமபுரம் ஆகியவை பிரிக்கப்பட்டு, இராமபுரம் பங்காக உயர்த்தப்பட்டது.  அதுமுதல் இராமபுரத்தின் கிளைப் பங்காக குலசேகரன் புதூர் மாற்றப் பட்டது. இது முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 08:30 மணிக்கு திருப்பலியும், செவ்வாய்க்கிழமை மாலை ஜெபமாலை புகழ்மாலை புனித அந்தோனியார் நவநாள் திருப்பலியும் நிறைவேற்றப்பட்டு வந்தது.

அருட்பணி. இலாரன்ஸ் பணிக்காலத்தில் பங்குத்தந்தை இல்லம் 1998 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

அருட்பணி. சீசர் பணிக்காலத்தில் திரு. தளவாய் சுந்தரம் அவர்களின் நன்கொடையில் 2004 ஆம் ஆண்டு கலையரங்கம் ஒன்று கட்டப்பட்டது.

அருட்பணி. டென்சிங் பணிக்காலத்தில் ஆலயம் அழகுற புதுப்பிக்கப்பட்டு 04.05.2010 அன்று மந்திரித்து திறந்து வைக்கப்பட்டது.

2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் அருட்பணி. ஜான் அமலநாதன் அவர்கள், குலசேகரன் புதூர் பங்குப்பணியாளர் இல்லத்தில் தங்கி பணிபுரிந்து வந்தார். 15.05.2017 அன்று மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் குலசேகரன் புதூர் தனிப் பங்காக உயர்த்தப்பட்டது. அருட்பணி. ஜான் அமலநாதன் அவர்கள் முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்று வழிநடத்தினார். 

இராமபுரம் பங்குத்தந்தையர் பட்டியல்:

1. அருட்பணி.‌ பர்ணபாஸ்

2. அருட்பணி. தாமஸ்

3. அருட்பணி. இலாரன்ஸ்

4. அருட்பணி. சீசர்

5. அருட்பணி. வென்சஸ்லாஸ்

6. அருட்பணி. டென்சிங்

7. அருட்பணி. ஜான் அமலநாதன்

குலசேகரன் புதூர் தனிப் பங்காக உயர்ந்த பின்னர் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:

1. அருட்பணி. ஜான் அமலநாதன் (2017 முதல் 2022 ஜூன் வரை)

2. அருட்பணி. மார்க்கோனி ரவிச்சந்திரன் (2022 ஜூன் முதல்...)

வழித்தடம்: நாகர்கோவில் அப்டா மார்க்கெட் -வெள்ளமடம். வெள்ளமடத்தில் இருந்து வலதுபுறமாக 2கி.மீ சென்றால் குலசேகரன்புதூரை அடையலாம்.

சுசீந்திரம் -தேரூர் -குலசேகர்புதூர்

Location map: https://g.co/kgs/H2c9PF

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. மார்க்கோனி ரவிச்சந்திரன் அவர்கள்.