867 தூய கார்மேல் அன்னை ஆலயம், நெல்லிமரத்துப்பட்டி

         

தூய கார்மேல் அன்னை ஆலயம்

இடம் : நெல்லிமரத்துப்பட்டி, கம்பைநல்லூர்

மாவட்டம் : தருமபுரி

மறைமாவட்டம் : தருமபுரி

மறைவட்டம் : தருமபுரி

நிலை : பங்குத்தளம்

பங்குத்தந்தை : அருட்பணி. S. இராஜப்பா

குடும்பங்கள் : 40

அன்பியங்கள் : 3

திருவழிபாட்டு நேரங்கள் : 

ஞாயிறு : காலை 08.30 மணிக்கு திருப்பலி

திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி : மாலை 06.00 மணிக்கு செபமாலை மற்றும் மாலை 06.30 மணிக்கு திருப்பலி

புதன் : காலை 06.30 மணிக்கு அருட்சகோதரிகளுக்கு திருப்பலி

திருவிழா: ஜூலை 16 ஆம் தேதி

பங்கின் மண்ணின் மைந்தர்கள் : 

1. அருட்சகோதரி. அருள் பிரான்சிஸ் மேரி, FSM

2. அருட்சகோதரி. ஹேமலதா மேரி, FSM

3. அருட்சகோதரி. அந்தோணியம்மாள், MSI

வழித்தடம்: தருமபுரியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் திப்பம்பட்டியிலிருந்து கம்பைநல்லூர் வழியாக 29 கி.மீ தொலைவில் நெல்லிமரத்துப்பட்டியில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

Location Map : https://maps.app.goo.gl/W87hYNVg8xAfWiY1A

ஆலய வரலாறு :

கௌவல்லி மிட்டாவில் இருந்த கம்பைநல்லூர், பழைமையான கிறிஸ்துவ ஊராகும். கி.பி.1774 ஆம் ஆண்டிலிருந்தே கிறிஸ்துவர்கள் இங்கு இருந்துள்ளனர். ஆற்றுக்கு தெற்கே நடுத்தெரு என்றும் பின்னர், கீழ்த்தெரு என்றும் உள்ளது. இங்குதான் பழைய நெல்லிமரத்துப்பட்டி இருந்தது. கிராமத்தலைவன் இவற்றை எடுத்துக்கொண்டு சாலைக்கு பக்கத்தில் வேறு இடம் அளித்தார். பழைய கோவிலின் பொருட்களைக் கொண்டு புதிய ஆலயம் ஒன்று கட்டப்பட்டது. சப்பாத்தி முள்ளு சாமியார் என்றழைக்கப்பட்ட அருட்திரு. செவாலியே அவர்கள் சிறிய அறை ஒன்றை கட்டினார். 

கௌவல்லி மிட்டா தலைவரின் உறவினர்களான, சூசை மற்றும் ஏசுவடியான் என்பவர்கள் பழைய கிறிஸ்துவர்கள் ஆவார்கள். இவர்கள் விவசாயம் செய்து வாழ்ந்து வந்தனர். மேல்தெருவில் வாழ்ந்தவர்கள் நெசவாளர்கள். மழையின்மை, நெசவுத்தொழில் சரிவு ஆகியவற்றின் காரணமாக எலத்தகிரி, எடப்பாடி, சின்னப்பம்பட்டி, அத்திப்பாக்கம் மற்றும் கொரட்டாம்பட்டி ஆகிய ஊர்களில் குடியேறினர். 

கி.பி.1833 ஆம் ஆண்டிற்கு பிறகு சென்னை பூந்தமல்லியிலிருந்து சில நெசவாளர்கள் முத்தையால்பேட்டை, சேலம், எலத்தகிரி மற்றும் கம்பைநல்லூரில் குடியேறினர். கி.பி.1838 ஆம் ஆண்டில் அருட்திரு. பிரிக்கோ அடிகளாருக்கு உதவி குருக்கள் பலர் இருந்தனர். அவர்களில் ஒருவர் தான் அருட்திரு. மாரியோன் தெபிரசியாக். இவர் தனது நாட்குறிப்பில் நெல்லிமரத்துப்பட்டி வந்து பணியாற்றி சென்றதை எழுதி வைத்துள்ளார். 1845-1853 காலகட்டத்தில் அருட்திரு. குயோன் மகிமைநாதர் அவர்கள் வேதியர்கள் உதவியுடன் கம்பைநல்லூரிலும் பணியாற்றியுள்ளார். எஞ்சியுள்ளவர்கள் நெல்லிமரத்துப்பட்டியிலேயே தங்கி வாழ்ந்து வருகிறார்கள். 

நெல்லிமரத்துப்பட்டியில் அன்னையின் பெயரில் புதிய ஆலயம் கட்டப்பட்டு, 29.10.2001 அன்று தருமபுரி மறைமாவட்ட ஆயர் மேதகு ஜோசப் அந்தோணி இருதயராஜ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. இப்பகுதியானது எலத்தகிரி மற்றும் தருமபுரி ஆகிய பங்குகளின் கிளைப்பங்குகளாக செயல்பட்டு வந்தது. தருமபுரி மறைமாவட்ட ஆயர் அவர்களால் நெல்லிமரத்துப்பட்டி ஆலயமானது 15.10.2009 அன்று தனிப்பங்காக உருவாக்கப்பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. M. அருள்சாமி அவர்கள் நியமிக்கப்பட்டார்.

அருட்பணி. M. ஆல்பர்ட் வில்லியம் அவர்களின் அவர்களின் முயற்சியால் ஆலயம் மற்றும் பலிபீடம் புதுப்பிக்கப்பட்டு, புதிய கோபுரம் கட்டப்பட்டு, அருட்பணி. இராஜப்பா பணிக்காலத்தில் தருமபுரி மறைமாவட்ட ஆயர் மேதகு லாரன்ஸ் பயஸ் துரைராஜ் அவர்களால் 07.10.2021 அன்று அர்ச்சிக்கப்பட்டது.

Bathelamite Sisters Congregation :

Bathelamite Sisters Congregation - லிருந்து தருமபுரி மறைமாவட்டத்தில் பணி செய்ய தலைமை அருட்சகோதரி அவர்களால், 15.12.2009 அன்று அன்றைய ஆயர் மேதகு ஜோசப் அந்தோணி இருதயராஜ் அவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்று மேதகு ஆயர் அவர்களால் 23.12.2009 அன்று அனுமதி அளிக்கப்பட்டு, அருட்சகோதரிகளுக்கு நெல்லிமரத்துப்பட்டியில் பணியாற்ற இடமும் வழங்கப்பட்டது. 

மேலும், அருட்சகோதரிகளால் Sacred Heart புதிய பள்ளிக்கூடமும், Sacred Heart தங்கும் இல்லமும் கட்டப்பட்டு, 23.05.2012 அன்று மேதகு ஆயர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அன்றையிலிருந்து இவ்வூரில் அருட்சகோதரிகளால் பங்குப்பணியும், ஆன்மீகப்பணியும் மற்றும் கல்விப்பணியும் நடைபெற்று வருகிறது.

பங்கில் உள்ள பக்தசபைகள் : 

1. பங்குப்பேரவை

2. மரியாயின் சேனை 

3. பாடற்குழு

4. பீடச்சிறுவர்கள் குழு

பங்கில் செயல்படும் அன்பியங்கள்: 

1. அந்தோணியார் அன்பியம்

2. அன்னை தெரசாள் அன்பியம்

3. அமலோற்பவ அன்னை அன்பியம் 

பங்கில் உள்ள கல்வி நிறுவனம் மற்றும் இல்லம் : 

1. Sacred Heart Matriculation School 

2. Sacred Heart Convent (Bathelamite Sisters)

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் : 

1. அருட்பணி. M. அருள்சாமி (2009-2014)

2. அருட்பணி. R. டோமினிக் ராஜா (2015-2018)

3. அருட்பணி. M. ஆல்பர்ட் வில்லியம் (2018-2021)

4. அருட்பணி. S. இராஜப்பா (2021- தற்போது வரை...)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்பணி. S. இராஜப்பா அவர்கள்.

தகவல்கள் சேகரிப்பில் உதவி: சகோதரர். ஜான்பீட்டர், சேலம் மறைமாவட்டம்.

ஆலய புகைப்படங்கள்: திரு. ஏசுதாஸ், கிருஷ்ணகிரி.