இடம் : அல்லிகொண்டாப்பட்டு, 606811.
மாவட்டம் : திருவண்ணாமலை
மறைமாவட்டம் : வேலூர்
மறைவட்டம் : திருவண்ணாமலை
நிலை : பங்குத்தளம்
கிளைப்பங்குகள் :
1. தூய இருதய ஆண்டவர் ஆலயம், இருதயபுரம்
2. புனித அந்தோணியார் ஆலயம், அந்தோணியார்புரம்
3. புனித வனத்து சின்னப்பர் ஆலயம், ஜான்பால் நகர்.
பங்குத்தந்தை : அருட்பணி. N. ஆரோக்கியதாஸ்
குடும்பங்கள் : 600
அன்பியங்கள் : 19
ஞாயிறு காலை 06.00 மணி மற்றும் காலை 08.00 மணிக்கும் திருப்பலி.
நாள்தோறும் காலை 06.00 மணிக்கு திருப்பலி.
மாதத்தின் முதல் புதன் மாலை 06.30 மணிக்கு திருஜெபமாலை, புனித அருளானந்தர் நவநாள், திருப்பலி, திருப்பண்ட ஆசீர்வாதம்.
சனி மாலை 06.00 மணிக்கு திருஜெபமாலை, இடைவிடா சகாய மாதா நவநாள், திருப்பலி.
திருவிழா : பெப்ரவரி மாதம் 04 ஆம் தேதி.
மண்ணின் இறையழைத்தல்கள் :
1. அருள்பணி. A. சவரிராயன், SVD
2. அருள்பணி. L. ஜெயசீலன் USA (VD)
3. அருள்பணி. A. அந்தோணி, வேலூர்
4. அருள்பணி. A. லூர்து சேவியர், வேலூர்
5. அருள்பணி. S. அந்தோணி, CMF
6. அருள்பணி. A. அருள்ராஜ், OFM
7. அருள்பணி. A. C. ஜான்பீட்டர், வேலூர்
8. அருள்பணி. M. ஜூலியன் பிரகாஷ், SSS
9. அருள்பணி. L. பால் வேளாங்கண்ணி, வேலூர்
10. அருள்பணி. ஜான்பால், SJ
11. அருள்பணி. அமல்ராஜ், குவனேலியன் சபை
12. அருள்பணி. ரிஷார், குவனேலியன் சபை
13. அருள்பணி. பிரான்சிஸ் சேவியர், SVD
14. அருள்பணி. பென்சிகர், MMI
15. அருள்சகோதரர். I. M. அருளப்பன், SHJ
16. அருள்சகோதரி. A. பிரிஸ்கா மேரி, SSA
17. அருள்சகோதரி. A. மங்களமேரி, SCB
18. அருள்சகோதரி. A. சிமியோனா, S.Sp.S
19. அருள்சகோதரி. A. மேரி ஸ்டெல்லா, SSA
20. அருள்சகோதரி. S. மேரி, SCB
21. அருள்சகோதரி. S. ஜெஸிந்தா, FIHM
22. அருள்சகோதரி. C. தவமரி, SAT
23. அருள்சகோதரி. C. சகாயமேரி, FMM
24. அருள்சகோதரி. M. சில்வர்ட், MC (ஆரோக்கியமேரி)
25. அருள்சகோதரி. A. ஜூலியட் மரியா, SABS
26. அருள்சகோதரி. A. மேரி இம்மாகுலேட், FIHM
27. அருள்சகோதரி. C. புஷ்பராணி, S.Sp.S
28. அருள்சகோதரி. B. ரோசி, FIHM
29. அருள்சகோதரி. L. குளோரி, FIHM
30. அருள்சகோதரி. A. மேரி கிளாரா, SAT
31. அருள்சகோதரி. G. ஜெபமாலைமேரி, FMM
32. அருள்சகோதரி. இம்மாகுலேட், FIHM
வழித்தடம் :
சென்னை -திருவண்ணாமலை -மண்ணூர்பேட்டை வழி -தச்சம்பட்டு புதூர் பேருந்து நிறுத்தம்.
திருவண்ணாமலை -திருக்கோவிலூர் (மணலூர்பேட்டை வழி)
பேருந்து நிறுத்தம் : தச்சம்பட்டு புதூர்.
Location map :
St.John De Britto Church
Allikondapattu, Tamil Nadu 606811
https://g.co/kgs/WMQHeP
வரலாறு :
திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை -மணலூர்பேட்டை வழி திருக்கோவிலூர் சாலையில் தச்சம்பட்டு புதூர் என்னும் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, உள்ளே வரும் போது தச்சம்பட்டு தாங்கல் என அழைக்கப்பட்ட, கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் அதிகமாக வாழும் அழகிய ஊர் தான் அல்லிகொண்டாப்பட்டு.
இயேசுவின் 12 சீடர்களில் ஒருவரான புனித தோமையார் கி.பி 52 -ம் ஆண்டில் கிறிஸ்தவ மறையை பரப்ப இந்தியா வந்தார். பின்னர் அவர் சென்னை வந்து நற்செய்தி அறிவித்து, கி.பி 68 -ல் ஈட்டியால் குத்தப்பட்டு மறைசாட்சியானார்.
புனித தோமையாரைத் தொடர்ந்து 1542 -ல் இந்தியா வந்த இயேசு சபையின் புனித பிரான்சிஸ் சவேரியார் தமிழகத்தில் மறைப்பரப்பு பணியாற்றி ஏராளமான மக்களுக்கு கிறிஸ்துவின் அன்பை உணரச் செய்து, நற்செய்தி பணியாற்றார்.
புனித சவேரியாரின் வழியைப் பின்பற்றி ஜான் டி பிரிட்டோ (புனித அருளானந்தர்) கி.பி 1673 -ல் கோவா வந்து, அங்கிருந்து தமிழகத்தின் கோவை, சத்தியமங்கலம், தருமபுரி, செங்கம், வேலூர், செஞ்சி, திருவண்ணாமலை, திருக்கோவிலூர், சிதம்பரம், தஞ்சாவூர், மதுரை, இராமநாதபுரம் நகரங்களில் திருமறையை பரப்பி, 1673 ல் சிவகங்கை மாவட்டம் ஓரியூரில் தலைவெட்டப்பட்டு, வேத சாட்சியானார்.
புனித அருளானந்தர் (ஜான் டி பிரிட்டோ) திருவண்ணாமலை, திருக்கோவிலூருக்கு இடையே வேட்டவலம், தண்டரை, ஜமீன்கூடலூர் ஆகிய இடங்களில் தங்கி வேதம் போதித்த காலங்களில் (1673-75) அல்லிகொண்டாப்பட்டு மக்கள் திருமறையில் இணைந்தனர்.
அல்லிகொண்டாப்பட்டு ஆலயமானது பாண்டி மறைமாவட்டத்தின் கீழ், 1911 -ம் ஆண்டு முதல் 1937 -ம் ஆண்டு வரை ஈருடையாம்பட்டு பங்கின் கீழும்,
பின்னர் 1938 -ம் ஆண்டு முதல் 1958 -ம் ஆண்டு வரை அத்திப்பாக்கம் பங்குடனும் இருந்தது.
24.11.1959 அன்று தனிப்பங்காக (வேலூர் மறைவட்டம்) உயர்த்தப் பட்டது. பெருமணம், தலையாம்பள்ளம், கச்சிராப்பட்டு, மூஞ்சிராம்பட்டு, சோவூர், நரியாப்பட்டு, இருதயபுரம், அந்தோணிபுரம், நவம்பட்டு, ஜான்பால் நகர் ஆகியவை இதன் கிளைப் பங்குகளாக விளங்கின.
அல்லிகொண்டாபட்டின் கிளைப் பங்குகளாக இருந்த பெருமணம் 01.01.1974 அன்று தனிப்பங்கானது.
24.95.2005 ல் தலையாம்பள்ளம் தனிப் பங்கானது.
ஆலயங்கள் :
தொடக்க காலகட்டத்தில் ஒரு ஓலைகுடிசை ஆலயம் கட்டப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்தது.
அதன்பிறகு இடைப்பட்ட காலகட்டத்தில் ஓடு வேய்ந்த ஆலயம் கட்டப்பட்டது. இவ்விரண்டு
பழைய ஆலயங்களும் இடிக்கப்பட்டு, தற்போது உள்ள புதிய ஆலயமானது மக்களின் ஒத்துழைப்புடன், பங்குத்தந்தையின் வழிகாட்டுதலுடன் அழகுற கட்டப்பட்டு, 30.05.2006 அன்று செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் மேதகு நீதிநாதன் அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.
ஆலய பொன் விழா விழா (1959-2009) 2010 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் வேலூர் மறைமாவட்ட ஆயர் மேதகு பெ. சௌந்தரராஜூ, SDB அவர்கள் தலைமையில் சிறப்பாக கொண்டாடப் பட்டது.
அல்லிகொண்டாப்பட்டு தனிப்பங்காக ஆனதன் 60 -வது ஆண்டு நினைவாக பங்குத்தந்தை அருள்பணி. N. ஆரோக்கிய தாஸ் அவர்களின் முயற்சி மற்றும் மக்களின் ஒத்துழைப்புடன், புதிய கொடிமரம் மற்றும் புனித அருளானந்தரின் திருப்பண்டம் ஆகியவை வைக்கப்பட்டு 26.01.2019 அன்று பேரருள்பணி. ஜோ. லூர்துசாமி அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.
பங்கின் வைரவிழா 04.02.2020 அன்று மேதகு ஆயர். சௌந்தரராஜூ அவர்கள் தலைமையில் சிறப்பாக கொண்டாடப் பட்டு, பங்குவிழாவுடன் வைரவிழா நிறைவு செய்யப்பட்டது.
பங்கில் உள்ள துறவற சபை & மருத்துவமனை:
தூய இருதய மரியன்னை சபை இல்லம், தூய அருளானந்தர் மருத்துவமனை 21.06.1972 முதல் இங்கு செயல்பட்டு வருகிறது.
பங்கின் பள்ளிக்கூடம் :
R.C.M தொடக்கப்பள்ளி 01.07.1939 அன்று துவக்கப்பட்டு, நடுநிலைப்பள்ளியாக 01.06.2001 ல் தரம் உயர்த்தப்பட்டது.
பங்கில் உள்ள பங்கேற்பு அமைப்புகள் :
1. அன்பியங்கள்
2. காரியக்காரர்கள்
3. மரியாயின் சேனை
4. புனித வின்சென்ட் தே பவுல் சபை
5. பீடச்சிறுவர்கள்
6. மகளிர் குழுக்கள்
7. திருஇருதய சபை (முதியவர்கள்)
8. மறைக்கல்வி
9. இளையோர் இயக்கம்
10. பாடகற்குழு
11. சிறார் இயக்கம்
12. விவசாய சங்கம்
13. கோல்பிங் இயக்கம்.
14. புனித அருளானந்தர் நற்பணி மன்றம்.
பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:
1. அருள்திரு. மார்ட்டின் (Poineer) (1959)
2. அருள்திரு. காந்திநாதர் (Poineer) (1959)
3. அருள்திரு. A. மாகே, MEP (Poineer) (1959-1969)
4. அருள்திரு. R. C. ராஜா, MEP (Poineer) (1961 மூன்று மாதங்கள்)
5. அருள்திரு. L. பெனித்தோ (உ. பங்குத்தந்தை) (1966-1968)
6. அருள்திரு. D. ஸ்தனிஸ்லாஸ் (1969-1970) (Active P. P)
7. அருள்திரு. S. வேளாங்கண்ணி (1970-1976)
8. அருள்திரு. R. அருள் ( உ. பங்குத்தந்தை) (1971)
9. அருள்திரு. M. இராயப்பா (உ. பங்குத்தந்தை) (1972)
10. அருள்திரு. துரைசாமி நாரலா (1977-1980)
11. அருள்திரு. M. ஜான்சன் (உ. பங்குத்தந்தை)
12. அருள்திரு. D. அமல்ராஜ் (1981-1984)
13. அருள்திரு. R. சூசைரெஜிஸ் (உ. பங்குத்தந்தை)
14. அருள்திரு. A. அக்டேவியஸ் (1985-1986)
15. அருள்திரு. R. ஜேம்ஸ் வின்சென்ட் (1987-1994)
16. அருள்திரு. P. ஜான்போஸ்கோ (1995-2001)
17. அருள்திரு. A. குழந்தையேசு (2002-2005)
18. அருள்திரு. D. மரியஜோசப் (2006-2013)
19. அருள்திரு. N. ஆரோக்கிய தாஸ் (2013 முதல் தற்போது வரை..)
செம்மண் புனிதராம் மறைசாட்சி புனித அருளானந்தர் ஆலயம் வாருங்கள்.. புனிதரின் பரிந்துரையால் இறைவனின் ஆசீர் பெற்றுச் செல்லுங்கள்.. 🙏🙏🙏🙏🙏
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருள்பணி. N. ஆரோக்கிய தாஸ்.