புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம்
இடம் : திட்டவிளை, தொலையாவட்டம்.
மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை.
மறை வட்டம் : வேங்கோடு
நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனித அந்தோணியார் ஆலயம், புல்லாணி.
குடும்பங்கள் : 80
அன்பியங்கள் : 2
பங்குத்தந்தை : அருட்பணி ஷாஜி
இணைப்பங்குத்தந்தை : அருட்பணி லிதின்.
ஞாயிறு திருப்பலி : காலை 07.30 மணிக்கு.
திருவிழா : செப்டம்பர் மாதத்தில் ஐந்து நாட்கள்.
வழித்தடம் :
முள்ளங்கினாவிளையிலிருந்து தொலையாவட்டம் செல்லும் சாலையில் கிள்ளியூர் பேருந்து நிலையத்திற்கு சற்று முன்பாக வலப்புறம் செல்கின்ற சாலையில் திட்டவிளையில் இவ்வாலயம் அமைந்துள்ளது.
திட்டவிளை வரலாறு :
திட்டவிளை ஊரிலுள்ள மக்கள் காலம் குறிப்பிட முடியாத அளவுக்கு, பல ஆண்டுகளுக்கு முன்னர் கிறிஸ்தவர்களாக இருந்துள்ளனர். இவ்வூர் இலவுவிளை பங்கின் கிளைப் பங்காக இருந்த புல்லாணி புனித அந்தோணியார் ஆலயத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
பல ஆண்டுகளுக்கு முன்னர் திட்டவிளை ஊரின் நடுவில் ஒரு சிலுவை நாட்டி இறைவனை வழிபட்டு வந்தனர். கொள்ளை நோய் பரவிய காலத்திலிருந்து தூய மிக்கேல் அதிதூதர் குருசடி என மாற்றப்பட்டது.
11.06.2002 அன்று இலவுவிளை பங்குத்தந்தை அருட்பணி. இராபர்ட் பென்னி அவர்கள் முதல் திருப்பலி நிறைவேற்றி, அன்று முதல் தூய மிக்கேல் அதிதூதர் ஆலயமென அறிமுகப்படுத்தி கிளைப் பங்காக ஆவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்.
அருட்பணி. வர்க்கீஸ் அவர்கள் இலவுவிளை பங்குத்தந்தையாக இருந்த போது, 04.04.2004 முதல் இலவுவிளையின் கிளைப் பங்காக உயர்த்தப் பட்டது.
புல்லாணி தனிப்பங்காக ஆன போது, திட்டவிளை அதன் கிளைப் பங்காக மாற்றப்பட்டது.
பின்னர் குருசடியின் அருகே ஆலயம் கட்டப்பட்டு அர்ச்சிக்கப் பட்டது.