அமலமரி தூதுவர்கள் சபை (MMI)

   

அமலமரி தூதுவர்கள் சபை

ஆங்கிலத்தில்: Missionaries of Mary Immaculate 

சுருக்கமாக: MMI

சபையின் நிறுவனர்: அருட்பணி. J. E. அருள்ராஜ் OMI/ MMI

சபை துவக்கப்பட்ட ஆண்டு: 1998

சபையின் பாதுகாவலர்: தொழிலாளரான புனித சூசையப்பர்

சபையின் பாதுகாவலி: புனித அமலோற்பவ மாதா

சபையின் தலைமையிடம்: புதுடெல்லி, மீரட் மறைமாவட்டம்

மொத்த மறைமாநிலங்கள்: 4

1. இந்தியா 

2. கிழக்கு ஆப்பிரிக்கா (தான்சானியா, சாம்பியா, மலாவி)

3. மத்திய ஆப்பிரிக்கா (எத்தியோப்பியா, தெற்கு சூடான், மத்திய ஆப்பிரிக்க குடியரசு)

4. இணை மறைமாநிலம் பிரேசில் 

5. பிரதிநிதித்துவம் (Delegation) ஜெர்மனி, அமெரிக்கா, உரோம், பப்புவா நியூகினி

இந்திய மறைமாநில தலைமை இடம்: புனித தோமையார் மலை, சென்னை

இந்தியாவில் உள்ள குருமடங்கள்: 6

1. காஞ்சிபுரம், மதுரமங்கலம் (முதல் வருடம் மற்றும் இரண்டாம் வருட குருமாணவர்கள்)

2. பெங்களூரு (முதல் மற்றும் இரண்டாம் வருட குருமாணவர்கள்)

3. பூனா, மஹாராஷ்டிரா (முதல் மற்றும் இரண்டாம் வருட குருமாணவர்கள்)

4. தொழுபேடு, திண்டிவனம் (3-வது வருட குருமாணவர்கள்)

5. பழஞ்சூர், சென்னை (இறையியல் மற்றும் தத்துவயியல்)

6. நாகலாந்து, திமாப்பூர் (முதுகலைப் படிப்பு)

வெளிநாடு(1): தான்சானியா

மொத்த மறைப்பரப்பு பணியாளர்கர்கள் (Fathers): 272

அருட்சகோதரர்கள்: 175+

சபையின் பெயர்க்காரணம்: அமலமரி தூதுவர்கள் சபையின் (MMI) நிறுவனரான அருட்பணி. J. E. அருள்ராஜ் அவர்கள் அமலமரி தியாகிகள் சபையின் (OMI), குருவானவராக விளங்கினார். இந்தியாவில் உள்ள அருட்பணியாளர்கள் வேதபோதக (மறைப்பரப்பு) பணிக்காக அயல்நாடுகளில் சென்று தூதுவர்களாக பணிபுரிய வேண்டும் என்பதற்காக, தம்மால் புதிதாக துவக்கப்பட்ட சபைக்கு, அமலமரி தூதுவர்கள் சபை எனப்பெயரிட்டார்.

சிறப்புப் பணிகள்: மறைப்பரப்பு - சிறப்பாக குருக்கள் சென்று பணிசெய்ய தயங்குகின்ற இடத்தில் பணிபுரிவது (Difficult Mission), பங்குப்பணி, சமூகப்பணி, கல்விப்பணி

சபையின் நோக்கம்: ஏழைகளுக்கு சேவை செய்வதில் கடவுளை அன்பு செய்தல்... LOVING GOD IN SERVING THE POOR

சபை துறவிகள் அடையாளங்கள்:

வெள்ளை நிற அங்கி, கருப்பு நிற இடுப்பு கச்சை, சிறிய சிலுவை

சபையின் வரலாறு:

அமலமரி தூதுவர்கள் மறைவேத போதக சபையானது (MMI), அருட்பணி. J. E. அருள் ராஜ் அவர்களால், 1998 ஆம் ஆண்டு பிரேசிலின் காம்போ கிராந்தே மறைமாவட்டத்தில் துவக்கப்பட்டது.

அமலமரி தூதுவர்கள் சபை துவங்குவதற்கான உத்வேக விதையை காம்போ கிராந்தாவின் முன்னாள் பேராயர் மேதகு. டோம் விக்டோரியோ பவனெல்லோ, SDB அவர்கள் விதைத்தார். ஆயரின் அறிவுறுத்தலின்படி,  லத்தீன் அமெரிக்க நாடுகளில் நற்செய்தி அறிவிப்புப்பணி காலத்தின் தேவை என்பதை உணர்ந்து, ஒரு துறவற சபையை நிறுவுவதற்கான அவரது முயற்சிகள் 1990 ஆம் ஆண்டிலேயே துவங்கியது. தூய ஆவியாரின் வழிநடத்துதலின்படி, அது நடைமுறைபடுத்தப்பட பல ஆண்டுகள் ஆனது. இறுதியாக 1998 ஆம் ஆண்டில், இறைவனின் அருளால், Missionaries of Mary Immaculate (MMI) (அமலமரி தூதுவர்கள் சபை) நிறுவப்பட்டது.

அக்டோபர் 12, 2006 அன்று, பிரேசில் நாட்டிலுள்ள காம்போ கிராந்தே மறைமாவட்ட  திறந்தவெளி திருப்பலியின் போது மறைமாவட்ட சபையாக அங்கீகரிக்கப்பட்டது. மேலை நாடுகளிலிருந்து மறைவேத போதகர்கள் இந்தியாவுக்கு வந்து நற்செய்தியை அறிவித்தார்கள். ஆனால் MMI சபையானது மேலை நாடுகளுக்கு நற்செய்தியை அறிவிக்க இந்தியாவிலிருந்து ஆர்வமுள்ள குருக்களை அனுப்பி கொண்டிருக்கிறது. எந்த நேரத்திலும் எந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்று அழைப்பு வந்தவுடனே செல்லக்கூடிய மறைவேத போதகர்கள் இந்த சபையில் இருப்பது முக்கிய அம்சமாகும். சாதாரண குருக்களாக இருப்பதோடு முடிந்து விடாமல் மறைவேத போதகப் பணியாளர்களாகத் தங்களை இனங்கண்டு கொள்கிறார்கள். உலகின் கடைசி எல்லை வரைக்கும் சென்று நற்செய்தியை அறிவியுங்கள் என்ற வார்த்தையின்படி சிறப்பான பணியை செய்து வருகிறது. இந்த மறைப்பரப்பு பணியின் நோக்கம் முக்கியமாக இந்தியாவிலிருந்து வந்ததால் பெரும்பாலான துறவற பயிற்சி இல்லங்கள் இந்தியாவில் இருக்கிறது.

சபைக்கு சொந்தமான தத்துவ இயல் மற்றும் இறை இயல் கல்லூரிகள் சிறப்பாக சென்னை -மயிலை உயர் மறைமாவட்டத்தில் உள்ள பழஞ்சூரில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. SDM, SDR அருட்சகோதரர்களும், DMI அருட்சகோதரிகளும் படிக்கிறார்கள். வாரத்தின் இறுதி நாட்களில் பங்கு அனுபவமும், வாரநாட்களில்  ஆன்மீகத்திலும் சிறப்புக்கவனம் செலுத்தி, பயிற்சி வழங்கப்படுகிறது.  

அமலமரி தூதுவர் சபை (MMI), மறைந்த திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் மற்றும் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் இவர்களால் வலியுறுத்தப்பட்ட "புதிய நற்செய்தி" (New Evangelization) சிந்தனை மற்றும் ஆன்மீகத்தை உள்வாங்கியுள்ளது. இச்சபை குருக்கள் கடினமான மற்றும் தொலைதூர பங்கு ஆலயங்களில் மறைமாவட்ட ஆயர் பராமரிப்பில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர். அவர்கள் லத்தீன் அமெரிக்க நாடுகள் போன்ற இடங்களில் ஏற்பட்டுள்ள, ஆன்மீகத் தொய்வு உணர்வை மீண்டும் உயிர்ப்பிக்க புதிய நற்செய்திப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தான்சானியா, சாம்பியா, மலாவி, எத்தியோப்பியா மற்றும் தெற்கு சூடான் போன்ற ஆப்பிரிக்க நாடுகளிலும் நற்செய்திப் பணியை மேற்கொண்டுள்ளனர். தங்களுடைய உயிரைக் கூட பொருட்படுத்தாமல் நற்செய்திப் பணியை பகிரங்கமாக அறிவிக்கும் நோக்கத்தோடு, பயிற்சி அளிக்கப்பட்டு பணிபுரிந்து வருகிறார்கள் என்பதற்கு தெற்கு சூடான் நற்செய்திப் பணி சிறந்த எடுத்துக்காட்டு.

இன்றுவரை, அமலமரி தூதுவர்கள் சபையினர் 13 நாடுகளில் சேவை செய்து வருகின்றனர். பெரும்பாலும் ஆப்பிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்கா மற்றும் இந்தியாவில் தொலைதூர கிராமங்களில் பணியாற்றி வருகின்றனர். இது இறைவனின் இறையாட்சிப் பணியை வைராக்கியத்துடன் செய்வதுடன், கஷ்டங்களையும் போராட்டங்களையும் கிறிஸ்தவ மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளது. அமலமரி தூதுவர்கள் சபையின் முதன்மை இல்லம் இப்போது பிரேசிலில் இருந்து இந்தியாவின் மீரட்டிற்கு மாற்றப்பட்டுள்ளது.

பங்குப் பணிகள்:

பங்குப் பணிகளையும் செய்து MMI சபை, தமிழ்நாட்டிலும் பல பங்குகளில் சிறப்பாக பணியாற்றி வருகிறது.

1. சென்னை-மயிலை உயர்மறைமாவட்டம்: 

அன்னை வேளாங்கண்ணி ஆலயம், மேல்மாநகர். 

புனித சந்தியாகப்பர் ஆலயம், பொன்னேரி.

2. செங்கல்பட்டு மறைமாவட்டம்:

அன்னை வேளாங்கண்ணி ஆலயம், நந்தம்பாக்கம். 

3. தஞ்சாவூர், மறைமாவட்டம்:

புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், ஏகணிவயல்.

புனித சூசையப்பர் ஆலயம், கோட்டைக்காடு.

4. கோயம்புத்தூர் மறைமாவட்டம்:

புனித ஆசீர்வாதப்பர் ஆலயம், ஆசீர்புரம். 

5. கோட்டாறு மறைமாவட்டம்:

ஆரல் ஆரோக்கிய அன்னை ஆலயம், ஆரல்வாய்மொழி. 

6. திருச்சி மறைமாவட்டம்:

வியாகுல அன்னை ஆலயம், நாஞ்சூர்.

7. மதுரை உயர் மறைமாவட்டம்:

புனித இஞ்ஞாசியார் ஆலயம், நக்கனேரி, இராஜபாளையம்.

8. திண்டுக்கல் மறைமாவட்டம்:

புனித இராயப்பர் சின்னப்பர் ஆலயம் குஜிலியம்பாறை. 

கல்விப்பணிகள்:

இருளில் வாழ்ந்தால் வாழ்வு இருண்டு விடும். ஒளியில் வாழ்ந்தால் வாழ்வு பிறருக்கும், ஒளியாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு, எந்த இடத்தில் கல்வி தேவை என்பதை உள்ளூர உணர்ந்து, 2 பள்ளிக் கூடங்களையும் ஒரு பொறியியல் கல்லூரியையும் நடத்தி வருகிறது.

1. Loyola International Residential School, Chennai.

2. Christ the King School, Coimbatore.

3. St. Joseph College of Engineering, Sriperumbudur, Chennai.

MMI துறவற பயிற்சி: 

விருப்பநிலை: முதலாம் ஆண்டு (ஒரு வருடம்)

விருப்பநிலை: இரண்டாம் ஆண்டு (+11, +12 நிறைவு செய்திருந்தால் மட்டுமே இந்த நிலையில் வர இயலும்)

நவதுறவு: ஓர் ஆண்டு

மெய்யியல் பட்டப் படிப்பு: மூன்று ஆண்டுகள்

களப்பணி: ஓர் ஆண்டு

இறையியல் பட்டப் படிப்பு: மூன்றரை ஆண்டுகள்

உயர் படிப்பு: இரண்டு ஆண்டுகள்

திருத்தொண்டர்: களப்பணி

குருத்துவ அருள்பொழிவு: 

அன்னையின் வழியில் : உலகின் எல்லா நாடுகளுக்கும் சென்று நீயும் ஒரு அமல மரி தூதுவர் துறவியாக மாறி இயேசுவுக்கு சான்று பகர விருப்பமா......!

தொடர்புக்கு: 044 22315746

சபையின் வரலாறு மற்றும் தகவல்கள்:

அமலமரி தூதுவர்கள் சபையின் மறைமாநிலத் தலைவர் 

அருட்பணி. கிங்ஸ்லி, MMI

மற்றும் மறைமாநிலத் தலைவரின் வழிகாட்டலில் 

அருட்பணி. சகாயராஜ், MMI, 

அருட்பணி. ஜான் மில்லர், MMI