இடம் : தாழையான்கோணம், வேம்பனூர் அஞ்சல்.
மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : கோட்டார்
நிலை : பங்குத்தளம்
கிளைகள் : இல்லை
பங்குத்தந்தை : அருட்பணி ஜான் தமஸ்க்.
குடும்பங்கள் : 52
அன்பியங்கள் : 3
ஞாயிறு திருப்பலி : காலை 06.30 மணிக்கு
புதன், வெள்ளி, சனி மாலை 06.00 மணிக்கு ஜெபமாலை 06.30 மணிக்கு திருப்பலி.
மாதத்தின் முதல் சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு அன்னையின் நவநாள், திருப்பலி, குணமளிக்கும் நற்கருணை ஆசீர் தொடர்ந்து அன்பின் விருந்து.
திருவிழா : ஆகஸ்ட் மாதம் 06-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரையிலான பத்து நாட்கள்.
பேருந்து வழித்தடம் :
நாகர்கோவில் - திங்கள்சந்தை 12 H, 12AV
நாகர்கோவில் - பட்டரிவிளை 12E.
பேருந்து நிறுத்தம் ; தாழையான்கோணம்
தக்கலை - நாகர்கோவில் - 11A, பேருந்து நிறுத்தம் ; பெரும்செல்வவிளை.
வரலாறு :
தாழையான்கோணம் பங்கு 1940 -ஆம் ஆண்டில் உருவாவதற்கு முன்பாக, தற்போது ஆலயம் இருக்கும் இடத்தில் ஒரு குருசடியும், தற்போது கல்லறைத்தோட்டமாக பயன்படுத்தும் இடத்தில் மற்றொரு குருசடியும் மக்களின் விசுவாசத்தை வளர்க்கும் விதமாக இருந்தன.
வழக்கமாக மக்கள் திருமுழுக்கு போன்ற திருவருட்சாதனங்களைப் பெற காரங்காடு மற்றும் முளகுமூடு ஊர்களுக்கு சென்றார்கள்.
இரண்டு குருசடிகளிலும் மாலையில் செபிக்கும் வழக்கமும், அவ்வப்போது குறிப்பாக புனித சவேரியார் தினமாகிய டிசம்பர் 03-ஆம் தேதியும், குருத்து ஞாயிறின் போதும் ஏறத்தாழ 30 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் உணவு பரிமாறிக் கொள்ளும் பழக்கமும் இருந்து வந்திருக்கிறது.
1940 -ஆம் ஆண்டிற்கு பின் மேதகு ஆயர் ஆஞ்ஞிசாமியின் ஆணையின்படி சரல் தனிப்பங்காக உயர்த்தப்பட்டது. இப்பகுதி மக்களின் விசுவாச வாழ்வை வளர்க்கின்ற வகையில் தாழையான்கோணம் சரல் பங்கின் கிளைசபையாக அங்கீகரிக்கப் பட்டது. தற்போது ஆலயம் இருக்கும் பகுதியில் இருந்த குருசடியின் முன்பாக, ஓலைக்கூரை ஜெபவீடு கட்டி தூய அலங்கார மாதாவிற்கு அர்ப்பணிக்கப் பட்டது.
மாதத்திற்கு ஒரு முறை சரல் பங்குத்தந்தை இந்த ஜெபவீட்டில் திருப்பலி நிறைவேற்றி வந்தார்கள். இவ்வேளைகளில் பலர் தாராள உள்ளத்துடன் ஆலயத்திற்கும் கல்லறைத் தோட்டத்திற்கும் நிலம் நன்கொடையாகவும், விலைக்கும் கொடுத்தனர்.
அருட்தந்தை வர்கீஸ் அவர்களின் பணிக்காலத்தில் ஆலய கட்டுமானப் பணிக்காக வரையறுக்கப்பட்டு, அருட்தந்தை அகஸ்டின் பெர்னாண்டோ பணிக்காலத்தில் ஆலயப் பணிகள் நிறைவு பெற்று, 1966-ஆம் ஆண்டு புனித பரலோக மாதாவிற்கு நேர்ந்தளிக்கப்பட்டது.
இக்காலகட்டத்தில் பங்குத்தந்தை தங்குவதற்காக ஒரு எளிமையான அறைவீடு கட்டப்பட்டது. அருட்தந்தை உபால்டு ராஜ் பணிக்காலத்தில் புதிய அறைவீடு ஆலயத்தின் தெற்குப் பக்கம் கட்டப்பட்டது. ஏற்கனவே கட்டிய அறைவீட்டை நோயாளிகள் தங்குவதற்காக பயன்படுத்தினர்.
1986-ல் சடையால்புதூர் தனிப்பங்காக உயர்த்தப்பட்டது. ஒற்றையால்குடி, தாழையான்கோணம் மற்றும் கொடுப்பைக்குழி ஆகியன இதன் கிளைப்பங்காக கொண்டு அருட்தந்தை வின்சென்ட் ராஜ் முதல் பங்குத்தந்தையானார். அன்று முதல் திங்கள், வெள்ளி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் திருப்பலி நிறைவேற்றப் பட்டது. ஆலயத்தின் மணிக்கூண்டு, பீடம் மாற்றி அமைக்கப்பட்டது.
அருட்தந்தை சாலமோன் பணிக்காலத்தில் கொடிமரம் வைக்கப்பட்டு, ஆலயத்தில் ஒலிப்பெருக்கி வசதி செய்யப்பட்டது.
2001-ல் அருட்தந்தை பால் செல்லையன் பணிக்காலத்தில் அன்பியங்கள் துவக்கப்பட்டு, இரண்டு அன்பியங்களாக செயல்பட்டு வந்தன. இக்காலகட்டத்தில் புதிய ஆலயம் கட்ட அடிக்கல் அருட்தந்தை பால் செல்லையன் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
அருட்தந்தை அருள் ஜோசப் பணிக்காலத்தில் பாலர் சபை, சிறுவழி இயக்கம், மரியாயின் சேனை, இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டன.
அருட்தந்தை அருள் ஜோசப் பணிக்காலத்தில் ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று 06-06-2004 அன்று கோட்டார் மறை மாவட்ட ஆயர் மேதகு லியோன் அ தர்மராஜ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
அருட்தந்தை பெஞ்சமின் பணிக்காலத்தில் ஆலய கோபுரங்கள் அமைக்கப்பட்டு 06-08-2009 அன்று கோட்டார் மறை மாவட்ட முதன்மைப் பணியாளர் அருட்பணி மரிய தாசன் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
2011 -இல் கலையரங்கம் கட்டப்பட்டது. கத்தோலிக்க சேவா சங்கம் தொடங்கப்பட்டது. 2013 -இல் ஆலயத்தை சுற்றிலும் மதிற்சுவர் கட்டப்பட்டதுடன், புதிய அழகிய கொடிமரம் (06-08-2013) அமைக்கப்பட்டது. 06-08-2014 -இல் பங்கின் பவளவிழா மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
பங்கில் பணியாற்றிய அருட்தந்தையர்கள்:
சரல் பங்கின் கிளைப் பங்காக இருந்த போது
1. Fr லோப்பஸ் அடிகள் (1940-1942)
2. Fr பீட்டர் லாசர் கிறிஸ்டியன் அடிகள் (1942-1944)
3. Fr அந்தோணிமுத்து அடிகள் (1944-1947)
4. Fr J. அகுஸ்தீன் அடிகள் (1947-1948)
5. Fr ஸ்தனிஸ்லாஸ் அடிகள் (1948-1954)
6. Fr வர்கீஸ் அடிகள் (1954-1957)
7. Fr ஸ்டீபன் அடிகள் (1957- 1961)
8. Fr J. அகுஸ்தீன் அடிகள் (1961-1971)
9. Fr உபால்டு ராஜ் அடிகள் (1971-1981)
10. Fr ஞானப்பிரகாசம் அடிகள் (1981-1983)
சடையால்புதூர் பங்கின் கிளையாக இருந்த போது :
1. Fr வின்சென்ட் ராஜ் (1983- 1988)
2. Fr சாலமோன் (1988-1900)
3. Fr அலோசியஸ் பென்சிகர் (1900)
4. Fr வர்கீஸ் (1900-1902)
5. Fr பொ. வின்சென்ட் (1902)
6. Fr சேவியர் ராஜா (1992-1993)
7. Fr மோத்திலால் (1993)
8. Fr இன்னசென்ட் (1993-1996)
9. Fr ஜோசப் பெர்னார்ட் ரொசாரியோ (1996)
10. Fr ஜோசப் ரொமால்டு (1996)
11. Fr ஜோசப் ராஜ் (1996-1997)
12. Fr மரிய செல்வராஜ் (1997)
13. Fr மெல்கியாஸ் (1997-2000)
14. Fr செல்லையன் (2000-2003)
15. Fr அருள் ஜோசப் (2003-2006)
16. Fr பெஞ்சமின் (2006-2013)
17. Fr ஆன்றனி ஜெயா (2013-2015)
18. Fr பிரபுதாஸ் (2015)
19. Fr சூசை (2015-2016)
பங்குமக்களின் அயராத உழைப்பு மற்றும் முயற்சியால் 16-05-2016 அன்று தனிப்பங்காக உயர்த்தப்பட்டது.
அருட்தந்தை சூசை அவர்கள் முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்று 2019 மே மாதம் வரை சிறப்பாக வழிநடத்தினார். தொடர்ந்து தற்போது அருட்தந்தை ஜாண் தமஸ்க் அவர்கள் பொறுப்பேற்று தாழயான்கோணம் தலத்திருச்சபையை வளர்ச்சிப் பாதையில் அழைத்து செல்கின்றார்.
பதிவு : புனித காணிக்கை மாதா ஆலயம் மாதாபுரம், குமரி மாவட்டம், குழித்துறை மறை மாவட்டம், மின்னஞ்சல் : joseeye1@gmail.com
https://www.facebook.com/permalink.php?story_fbid=2458786984355946&id=2287910631443583&__tn__=K-R