355 புனித தோமையார் ஆலயம், கேஜி கண்டிகை

  

புனித தோமையார் ஆலயம்

இடம்: கேஜி கண்டிகை

மாவட்டம் : திருவள்ளூர்
மறைமாவட்டம் : சென்னை - மயிலை உயர் மறைமாவட்டம்.

மறைவட்டம் : அல்போன்சாபுரம்

பங்குத்தந்தை : அருட்பணி ஜூட் பிரகாசம் (மறைவட்ட அதிபர்)
இணை பங்குத்தந்தை : அருட்பணி அடைக்கலராஜ் MMI

நிலை : பங்குத்தளம்

கிளைப் பங்குகள் : 8

1.தூய சகாய மாதா ஆலயம், தாடூர்
2. புனித குழந்தை தெரசாள் ஆலயம், நொச்சிலி
3. புனித குழந்தை தெரசாள் ஆலயம், செறுக்கனூர்
4. புனித அந்தோணியார் ஆலயம், TV கண்டிகை
5.புனித சூசையப்பர் ஆலயம், சிறுகுமி
6. EN கண்டிகை, ஆலயம் இல்லை
7. புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், CGN கண்டிகை
8. தூய லூர்து அன்னை ஆலயம், சின்ன நாகபூண்டி.

குடும்பங்கள் : 313 (கிளைகள் சேர்த்து)

அன்பியங்கள்: 12

திருப்பலி :

ஞாயிறு திருப்பலி : காலை 07.30 மணிக்கு
காலை 09.00 மணிக்கு : நொச்சிலி.
காலை 10.30 மணிக்கு : TV கண்டிகை.

செவ்வாய்க்கிழமை மாலை 07.00 மணிக்கு : EN கண்டிகை

புதன்கிழமை மாலை 07.00 மணிக்கு : சிறுகுமி

வியாழக்கிழமை மாலை 07.00 மணிக்கு : CGN கண்டிகை

வெள்ளிக்கிழமை மாலை 07.00 மணிக்கு : செறுக்கனூர்

சனிக்கிழமை மாலை 07.00 மணிக்கு : தாடூர்

திருவிழா : ஜூலை மாதம் 3 -ஆம் தேதி.

மண்ணின் இறையழைத்தல்கள் :
1. Fr David OMI
2. Fr James (Sevvapet Parish Priest) Madras-Mylapore
3. Fr Lourdusamy SMA
4. Fr David Maria Sekvam SDB

1.Sis Rejina S. S
2.Sister Clavia SSJ

வழித்தடம் :-
திருத்தணியில் இருந்து ஆர்கே பேட்டை செல்லும் வழி.

பங்கு ஆலயத்திலிருந்து கிளைப்பங்குகளின் தூரம் :
1. தாடூர் - 5 கி.மீ
2. செறுக்கனூர் - 5 கி.மீ
3. EN கண்டிகை - 2 கி.மீ
4. சிறுகுமி -5 கி.மீ
5. CGN கண்டிகை - 4 கி.மீ
6. நொச்சிலி -8 கி.மீ
7. TV கண்டிகை -12 கி.மீ
8. சின்ன நாகபூண்டி -23 கி.மீ

வரலாறு:

கேஜி கண்டிகை ஒரு அழகிய சிறு கிராமம். முதன் முதலில் ஜோசப் எம் பரம்பட் என்னும் கேரளாவைச் சேர்ந்த என்ற அருட்தந்தை தான் இப்பகுதியில் தனது மறைப்பரப்பு பணியை ஆரம்பித்தார்.

இவர் வேலூரில் பங்குத்தந்தையாக இருந்தவர். பிறகு திருத்தணியில் தங்கி கேஜி கண்டிகைக்கு மறைப்பணி ஆற்றினார். அருட்தந்தை வந்த போது இப்பகுதி மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்பட்டது. அருட்தந்தையின் வழிகாட்டுதலில் மக்கள் மெல்ல மெல்ல முன்னேற்றம் பெற்றனர்.

கல்வி மிக முக்கியம் என்று நினைத்ததால், இப்பகுதியில் இருந்து செய்யாறு, திருப்பத்தூர், காட்பாடி, போந்தூர், போன்ற 12 விடுதிகளுக்கு படிக்க சிறுவர் சிறுமியர்களை அனுப்பி வைத்தார்.

இதன்பிறகு அருட்தந்தை இப்பகுதியிலேயே தங்க ஆரம்பித்தார். கேஜி கண்டிகைக்கு அரசு பள்ளியை கொண்டு வந்தார். 1961ல் ஆண்களுக்கான போடிங்கை(விடுதி) ஆரம்பித்தார். இப்போது பெண்கள் விடுதியும், JM Parampet nursery and Primary school, ஆங்கிலப் பள்ளியும் கட்டினார்.

தற்போது இப்பள்ளி மற்றும் விடுதிகள் பராமரிப்புபக்காக இரண்டு அருட்சகோதரர்கள் மற்றும் திருஇருதய அருட்சகோதரிகள் மூன்று பேரும் உள்ளனர்.

1971-இல் கேஜிகண்டிகையில் ஆலயம் கட்டப் பட்டது.

அருட்பணி பரம்பெட் அவர்கள் தமது தன்னலமற்ற சேவை, ஆன்மீகத் தொண்டு இவற்றால் கேஜி கண்டிகையை ஒரு சிறந்த நிலைக்கு அழைத்துச் சென்றார். இதனால் இம்மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்று வாழும் புனிதர் எனப் போற்றப் பட்டார். அருட்பணி பரம்பெட் அவர்கள் புனித குழந்தை தெரசாள் மீது மிகுந்த விசுவாசம் கொண்டவர். ஆதலால் கேஜி கண்டிகையின் இரண்டு கிளைப்பங்கு ஆலயங்களைக் கட்டி அதனை புனித குழந்தை தெரசாவிற்கு அர்ப்பணித்தார்.

KG கண்டிகை, திருத்தணி, பாண்டறவேடு, தெக்களூர் ஆகிய நான்கு பங்கு ஆலயங்களை உருவாக்கி வாழ்வித்து, அவற்றின் கீழ் பல கிளைப்பங்குகளையும் உருவாக்கி, இவையனைத்து மக்களுக்காக தன்னையே தியாகமாக தந்திட்டவர் அருட்தந்தை J. M பரம்பெட் அவர்கள் என்பது வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும் என்பது குறிப்பிடத் தக்கது.

புனித குழந்தை தெரசாவின் நாளில் 01-10-1989 அன்று அருட்தந்தை பரம்பட் அவர்கள் மரணமடைந்தார். மக்கள் அனைவரும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அவரது உடல் இவ்வாலய வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

தற்போது ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 1 ஆம் தேதி அருட்தந்தை பரம்பெட் அவர்களின் நினைவு நாளில், அவரால் வாழ்வின் பல்வேறு நிலைகளில் வளர்ச்சி பெற்ற அனைவரும் கேஜி கண்டிகை வந்து அஞ்சலி செலுத்துவார்கள்.

இவ்வாலயம் படிப்படியாக உயர்ந்து 8 கிளைப்பங்குகள் உருவாக்கப்பட்டது.

அருட்பணி பாஸ்கல் அவர்களின் பணிக்காலத்தில் 1987-இல் 13 வணிக வளாக கடைகள் கட்டப்பட்டன.

ஞானஜோதி மஹால் என்ற பெயரில் சமூகநலக்கூடம் (மண்டபம்) அருட்பணி P சார்லஸ் பணிக்காலத்தில் 1995 -ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.

சார்லஸ் நர்சரி மற்றும் உயர்நிலைப்பள்ளி அருட்பணி சார்லஸ் பணிக்காலத்தில் 1997 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.

மேலும் அருட்பணி சார்லஸ் அவர்கள் வணிக வளாகத்தில் 28 கடைகளை கட்டினார்.

அருட்பணி ரோச் சின்னப்பா அவர்களின் பணிக்காலத்தில் ஆலயத்தின் முன்புறம் இருந்த கெபி இடமாற்றம் செய்யப்பட்டு புதிதாக ஆலய பக்கவாட்டில் கட்டப்பட்டது. மேலும் 12 வணிகவளாக கடைகள் கட்டப்பட்டன. இத்துடன் வணிகவளாக கடைகளின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்தது.

கேஜி கண்டிகையிலிருந்து ஒரு கி.மீ தூரத்தில், ஆலயத்திற்கு சொந்தமான இடத்தில் சிறைப்பணி மையம் அமைக்கப்பட்டு, தமிழக ஆயர் பேரவைக்கு கொடுக்கப்பட்டது. அதனை 2016 -ஆம் ஆண்டு முதல் SDM சபை அருட்தந்தையர்கள் 8 பேர் நிர்வகித்து வருகின்றனர்.

பங்கில் பணிபுரிந்த பங்குத்தந்தையர்கள் :

1. Fr J. M Parampet (1950-1989)
2. Fr Maria Amalraj (1977-1982)
3. Fr Pascal (1982-1990)
4. Fr Francis Michael (1990-1991)
5. Fr Charles P (1991-1999)
6. Fr L. Balasamy (1999-2000)
7. Fr S. Kanikairaj (2000-2004)
8. Fr Roch Chinnappa (2004-2011)
9. Fr M. Balasamy (2011-2012)
10. Fr H. Thanga Kumar (2012-2015)
11. Fr Sesu Arul Prakasam (2015-2016)
12. Fr Jude Prakasam (2016 -----)

தகவல்கள் : பங்குத்தந்தை அருட்பணி ஜூட் பிரகாசம் அவர்கள். மனமார்ந்த நன்றிகள் அருட்தந்தை அவர்களே..!