393 புனித சவேரியார் ஆலயம், வட்டவிளை


புனித சவேரியார் ஆலயம்.

🏵இடம் : வட்டவிளை, பாகோடு அஞ்சல், 629168

🍇மாவட்டம் : கன்னியாகுமரி
🍇மறை மாவட்டம் : குழித்துறை
🍇மறை வட்டம் : திரித்துவபுரம்

🌷நிலை : கிளைப்பங்கு
🌷பங்கு : புனித காவல்தூதர் ஆலயம், மேல்புறம்

💐பங்குத்தந்தை : அருட்பணி ஆல்பின் விஜய்

🌳குடும்பங்கள் : 165
🍀அன்பியங்கள் : 8

🔥ஞாயிறு திருப்பலி : காலை 10.00 மணிக்கு

🔥வெள்ளிக்கிழமை திருப்பலி : மாலை 06.00 மணிக்கு

🎉திருவிழா : டிசம்பர் மாதம் கடைசி வாரத்தில் மூன்று நாட்கள். இவ்வருடம் டிசம்பர் 27, 28, 29 ஆகிய தேதிகளில்.

💐மண்ணின் மைந்தர் : அருட்பணி எட்வின் ராஜ்

👉வழித்தடம் : மார்த்தாண்டம் -குழித்துறை - கழுவன்திட்டை - வட்டவிளை. இறங்குமிடம் பிளாக் ஆபீஸ்.

👉பேருந்துகள் மார்த்தாண்டத்திலிருந்து 86, 86C, 85K, 86 E, 85D.

வரலாறு :
**********
✝️வட்டவிளை தூய சவேரியார் ஆலயம், திரித்துவபுரம் மறைவட்ட முதன்மைப் பணியாளராக பணியாற்றிய, அருட்பணி எப்ரேம் கோமஸ் அவர்களின் கடும் முயற்சியால் 1948-ல் ஒரு சிறு ஓலைக் கூரை ஆலயமாக அமைக்கப்பட்டது.

💐தொடர்ந்து அருட்பணி எப்ரேம் கோமஸ் அவர்களால் புதிய ஆலயம் கட்டுவதற்கு 84 சென்ட் நிலம் வாங்கப்பட்டது. பல்வேறு சவால்கள் மத்தியிலும் 1953 ல் ஆலய கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, பணிகள் நிறைவு பெற்று 1956 ல் அர்ச்சிக்கப் பட்டது.

🍀திரித்துவபுரம் பங்கின் கிளையாக செயல்பட்டு வந்த வட்டவிளை 1975 ம் ஆண்டு பிரிக்கப்பட்டு, மேல்புறம் பங்கின் கிளைப்பங்காக மேதகு ஆயர் ஆரோக்கியசாமி அவர்களால் அறிவிக்கப்பட்டு செயல்படத் துவங்கியது.

🌳திரித்துவபுரம் பங்கின் கிளைச்சபையாக இருந்த போது
💐அருட்பணி இன்னாசென்ட்
💐அருட்பணி தொபியாஸ்
💐அருட்பணி அந்தோணிமுத்து
💐அருட்பணி தனிஸ்லாஸ்
💐அருட்பணி வென்சஸ்லாஸ்
💐அருட்பணி சூசை ஆகியோர் பங்கின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து பல்வேறு வளர்ச்சி காரியங்களை செய்தனர்.

🌳22-05-1975 ல் மேல்புறம் பங்கின் கிளையாக ஆனது முதல்
🌷அருட்பணி H. ஜெயசந்திரா
🌷அருட்பணி P. K செல்லையா
🌷அருட்பணி M. X இராஜமணி
🌷அருட்பணி R. அந்தோணிமுத்து
🌷அருட்பணி ஹென்றி
🌷அருட்பணி V. மரிய அல்போன்ஸ்
🌷அருட்பணி B. வில்சன்
🌷அருட்பணி அலோசியஸ்
🌷அருட்பணி S. மரிய அற்புதம்
🌷அருட்பணி S. மரிய மார்ட்டின்
🌷அருட்பணி G. அல்போன்ஸ்
🌷அருட்பணி A. ஜோக்கிம்
🌷அருட்பணி ச. மரிய இராஜேந்திரன் ஆகியோர் சிறப்பாக பணியாற்றி பங்கை வளர்ச்சிப் பாதையில் வழி நடத்தினார்கள்.

🌺அருட்பணி ச. மரிய இராஜேந்திரன் அவர்களின் பணிக்காலத்தில் 29-04-2001 அன்று 'மகிழ்' சமூகக்கூடம் அடிக்கல் போடப்பட்டு அனைவரின் ஒத்துழைப்புடன் பணிகள் நிறைவு பெற்று 29-08-2004 அன்று கோட்டார் மறை மாவட்ட ஆயர் மேதகு லியோன் அ தர்மராஜ் அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.

🌷தொடர்ந்து அருட்பணி ஜோசப் ராஜ் மற்றும்
அருட்பணி மரிய செல்வராஜ் சிறப்பாக பணியாற்றினார்கள்.

🌺 2007 ல் பொறுப்பேற்ற அருட்பணி ஜெனிபர் எடிசன் அவர்களின் பணிக்காலத்தில் தூய சவேரியார் குருசடி கட்டப்பட்டு 26-08-2012 அன்று அர்ச்சிக்கப் பட்டது.

💐2013 ம் ஆண்டு முதல் பங்குத்தந்தையாக பணியாற்றிய அருட்பணி பிரைட் சிம்சராஜ் அவர்கள் பங்கினை அனைத்து நிலைகளிலும் சிறப்பாக வழிநடத்தினார்.

💐தற்போதைய பங்குத்தந்தை அருட்பணி ஆல்வின் விஜய் அவர்கள் பங்கு மக்களை ஒருங்கிணைத்து, ஆன்மீகப் பாதையில் சிறப்பாக வழிநடத்தி வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்கிறார்.

👉தகவல்கள் : பங்குத்தந்தையின் வழிகாட்டுதலுடன் அருட்பணிப் பேரவை நிர்வாகி.