இடம் : சாலைக்கிராமம், இளையான்குடி தாலுகா, 630710
மாவட்டம் : சிவகங்கை
மறைமாவட்டம் : சிவகங்கை
மறைவட்டம் : பரமக்குடி
பங்குத்தந்தை : அருள்திரு. மா. ரமேஷ்
நிலை : பங்குத்தளம்
கிளைப்பங்குகள் : 35
ஆலயம் உள்ள கிளைப்பங்குகள் : 18)
1. புனித செபஸ்தியார் ஆலயம், அய்யம்பட்டி
2. புனித செபஸ்தியார் ஆலயம், நன்னியாவூர்
3. புனித செபஸ்தியார் ஆலயம், நகரமங்கலம்
4. புனித அந்தோனியார் ஆலயம், பரத்தவயல்
5. புனித அந்தோனியார் ஆலயம், நகரம்
6. புனித வியாகுல மாதா ஆலயம், தெற்கு கீரனூர்
7. புனித லூர்து மாதா ஆலயம், முத்தூர்
8. புனித ஆரோக்கிய மாதா ஆலயம், சாத்தனூர்
9. புனித செபமாலை மாதா ஆலயம், சீவலாதி
10. புனித அருளானந்தர் ஆலயம், களத்தூர்
11. புனித அருளானந்தர் ஆலயம், பனிதிவயல்
12. புனித சூசையப்பர் ஆலயம், புதுக்கோட்டை
13. புனித சூசையப்பர் ஆலயம், மரக்கான் குடியிருப்பு
14. புனித சூசையப்பர் ஆலயம், நல்லூர்
15. புனித அடைக்கல அன்னை ஆலயம், ஞானசமுத்திரம்
16. புனித அடைக்கல அன்னை ஆலயம், நரிப்பொட்டல்
17. புனித அடைக்கல அன்னை ஆலயம், கட்டனூர்
18. உலக இரட்சகர் ஆலயம், அரியாங்கோட்டை
(ஆலயம் இல்லா கிளைக் கிராமங்கள் : 17)
19. வண்டல்
20. மாடக்கோட்டை
21. மஞ்சள்பட்டணம்
22. கோடனூர்
23. தென்கடுக்கை
24. பஞ்சனூர்
25. ஆரம்பக்கோட்டை
26. வாதவனேரி
27. தேவர்சமுத்திரம்
28. வடகடுக்கை
29. இராதாப்புளி
30. கோபாலபட்டணம்
31. அ. கச்சான்
32. வருந்தி
33. குயவர்பாளையம்
34. வடக்கு சாலைக்கிராமம்
35. கல்வெளிப் பொட்டல்
குடும்பங்கள் : 512 (கிளைப்பங்குகள் சேர்த்து)
அன்பியங்கள் : 5
வழிபாட்டு நேரங்கள் :
ஞாயிறு திருப்பலி காலை 08.30 மணி
கிளைப்பங்கு மாலை 06.30 மணி
அதிகமான கிளைக் கிராமங்கள் இருப்பதால் எல்லா கிளைக் கிராமங்களிலும் ஞாயிறு திருப்பலி நடைபெறுவதில்லை. மாறாக அன்பியங்களும் கிளைக்கிராம மக்களும் ஞாயிறு திருப்பலியை சுழற்சி முறையில் சிறப்பித்து வருகின்றனர்.
மாதத்திற்கு ஒருநாள் கிளைக் கிராமங்களில் தவறாமல் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மேலும் கிளைக்கிராமங்களில் குடும்பங்கள், தனிநபர்கள் தேவைக்கேற்ப திருப்பலிகள் நிறைவேற்றப் படுகின்றது.
செவ்வாய் மாலை 06.30 மணி புனித அந்தோனியார் நவநாள் திருப்பலி
சனி மாலை 06.30 மணி தூய சகாயமாதா நவநாள் திருப்பலி
மாதத்தின் முதல் வெள்ளி மாலை 06.00 மணிக்கு திருஇருதய தேர்பவனி செபமாலை, திருப்பலி, நற்கருணை ஆசீர்
மூன்றாவது சனி மாலை 06.00 மணி செபமாலை, குணமளிக்கும் வழிபாடு, நற்கருணை ஆராதனை, திருப்பலி
சிறப்பு வழிபாடுகள் :
திருவருகைக் காலம் முதல் ஞாயிறு : நற்கருணை வழிபாடு திருப்பலி
2ம் ஞாயிறு : மறைப்பரப்பு ஞாயிறு விவிலிய விழா, விவிலிய போட்டிகள்
3ம் ஞாயிறு : வாருங்கள் மகிழ்ச்சியோடு ஆராதிப்போம்
அரை நாள் தியானம்
4ம் ஞாயிறு : ஒப்புரவு அருட்சாதன வழிபாடு.
திருவிழா : மே மாதம் கடைசி ஞாயிறு நிறைவடையும் வகையில் பத்து நாட்கள்.
மண்ணின் இறையழைத்தல்கள் :
அருட்பணியாளர்கள் : 15
அருட்சகோதரிகள் : 25
வழித்தடம் : பரமக்குடி -R.S மங்கலம்
காரைக்குடி -பரமக்குடி
வழி சாலைக்கிராமம்.
Location map : https://g.co/kgs/sfdXR4
வரலாறு :
சிவகங்கை மறைமாவட்டத்தில் உள்ள மிகப் பழைமையான ஆலயங்களில் ஒன்றான சாலைக்கிராமம் தூய சகாய அன்னை ஆலய வரலாற்றைக் காண்போம்....
Rev. Fr. Canoz அவர்களால் 1854 -ம் ஆண்டு ஒரு வேதியர் உதவியுடன், சாலைக்கிராமத்தில் முதன் முதலில் இறைப்பணி ஆரம்பிக்கப்பட்டது. அப்போது பிரிவினை சபைகளின் ஆதிக்கம் இங்கு அதிகமாக இருந்தது. எனினும் தலித் மற்றும் பிற சமூகத்தினர் பிரிவினை சகோதரர்களை எதிர்த்து நின்று, இங்கு வேதியர் பணிபுரிய உதவி புரிந்தனர்.
Rev. Fr. Favreux, SJ அவர்கள், 1855 -ம் ஆண்டு சாலைக்கிராமத்திற்கு வருகை புரிந்து இறைப்பணியை தொடங்கி வைத்தார்.
Rev. Fr. Laroche அவர்கள் புனித அருளானந்தரை பாதுகாவலராகக் கொண்டு, சாலைக்கிராமத்தில் நற்செய்தியை அறிவித்தார். தொடர்ந்து சூராணம் பங்கின் கிளைப் பங்காக சாலைக்கிராமம் செயல்பட்டு வந்தது.
1911 -ம் ஆண்டு சூராணம் பங்கிலிருந்து பிரிக்கப்பட்டு, சாலைக்கிராமம் தனிப் பங்காக உயர்த்தப் பட்டது. Rev. Fr. Vincent Vignon, SJ அவர்கள் முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார். அப்போது புனித அருளானந்தர் பெயரில் செயல்பட்டு வந்த ஆலயமானது இயேசுவின் திருஇருதய ஆலயமாக மாற்றப்பட்டு செயல்பட்டு வந்தது. (தூய சகாய அன்னை ஆலயம் என எப்போது மாற்றப்பட்டது என்ற குறிப்புகள் கிடைக்கவில்லை.)
1919 -ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சாலைக்கிராமத்தின் கீழ் 62 கிளைப் பங்குகள் இருந்தன.
1974 -1980 ஆண்டு கால கட்டத்தில் அருட்பணி. மரிய பங்கிராஜ் அவர்கள் 18 கிளை கிராமங்களில் ஆலயங்கள் கட்டினார்.
20.06.1999 அன்று சாலைக்கிராமத்திலிருந்து பிரிந்து, கொம்படிமதுரை தனிப் பங்கானது.
சாலைக்கிராமத்தின் கிளைப் பங்காக இருந்த கோட்டையூரில் சிவகங்கை மறைமாவட்ட பாதுகாவலரான புனித அருளானந்தர் அவர்களால் தடியத்தேவருக்கு திருமுழுக்கு வழங்கப் பட்டது. இதுவே அவரது விசுவாச வாழ்விற்கு அடித்தளமாகவும், ஆணிவேராகவும் இருந்தது.
பின்னர் சாலைக்கிராமத்தில் இருந்து பிரிந்து 30.05.2013 அன்று கோட்டையூர் தனிப் பங்கானது.
ஆலயம் :
Rev. Fr. Bertrand அவர்கள் தமது நாட்குறிப்பில் 1838 -ம் ஆண்டில் மண்சுவரால் ஆன சிறிய ஆலயம் சாலைக்கிராமத்தில் கட்டப்பட்டது என்று எழுதியுள்ளார்.
மண்சுவர் ஆலயமானது இடிக்கப்பட்டு, பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் Rev. Fr. Fevreux, SJ அவர்கள் 1856 -ம் ஆண்டு ஒரு ஆலயத்தைக் கட்டினார்.
1874 -ம் ஆண்டு இவ்வாலயமானது, தாய்ப்பங்கான சூராணம் ஆலயத்தைப் போல கலைநயத்துடன் அழகுற வடிவமைக்கப்பட்டு, Rev. Fr. Fevreux அவர்களால் மதுரை மறைப்பரப்பு பணித்தளத்தின் நிதி மற்றும் கிறிஸ்தவ மக்களின் உழைப்பாலும் ரூ.1668 செலவில் கட்டி முடித்தார்.
அருள்பணி. Pignol அவர்களால் ஆலயம் புதுப்பிக்கப்பட்டது. மக்கள் அமர்ந்து திருப்பலியில் பங்கேற்கும் விதமாக ஆலயத்தின் இருபுறமும் சிலுவை வடிவில் கட்டப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டது.
அருள்பணி. அந்தோனிசாமி அவர்களின் பணிக்காலத்தில் பழைய ஆலயம் இடிக்கப்பட்டு, 26.02.2006 அன்று புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் நிறைவு பெற்று 19.05.2007 அன்று மேதகு ஆயர் செ. சூசை மாணிக்கம் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.
அருள்பணி. அமலன் அவர்களால் ஆலயத்திற்கு புதிதாக கோபுரம் கட்டப்பட்டது. மேலும் ஆலயத்தின் மேற்கூரை மாற்றியமைக்கப்பட்டு 24.05.2017 அன்று மேதகு ஆயர் செ. சூசை மாணிக்கம் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.
பங்குத்தந்தை இல்லம் :
Rev. Fr. Favreux, SJ அவர்களால் மக்களின் துணையுடன் 1856 -ம் ஆண்டு பங்குத்தந்தை இல்லம் கட்டப்பட்டது.
Rev. Fr. Papaya, SJ அவர்களால் பங்குத்தந்தை இல்லம் 1939 -ம் ஆண்டு புதுப்பிக்கப் பட்டது.
பழைய பங்குத்தந்தை இல்லமானது அகற்றப்பட்டு, அருள்பணி. மரிய பங்கிராஜ் அவர்களால் புதிய பங்குத்தந்தை இல்லம் கட்டப்பட்டு 11.03.1978 அன்று மேதகு ஆயர் ஜஸ்டின் திரவியம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
அருள்பணி. அகுஸ்தின் அவர்களால் பங்குத்தந்தை இல்லத்தோடு இணைந்த பங்கு அலுவலகம் கட்டப் பட்டது.
அருள்பணி. அமலன் அவர்கள் மறைமாவட்ட உதவியுடன் 2014 -ம் ஆண்டு பங்குத்தந்தை இல்லத்தை புதுப்பித்தார்.
பங்கு பாதுகாவலி திருவிழா :
முதலில் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர் அருள்பணி. இக்னேஷியஸ் சேவியர் பணிக்காலத்தில் மாற்றியமைக்கப்பட்டு மே மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை கொடியேற்றப்பட்டு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
தவக்கால திருயாத்திரை :
ஆண்டுதோறும் நரிப்பொட்டல் ஆலயத்திற்கு, பங்கு ஆலயத்தில் இருந்து மற்றும் கிளைக்கிராமங்களிலும் உள்ள இறைமக்கள் செபமாலை செபித்து திருயாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள்.
சிறப்புத் திருவிழாக்கள் :
விவிலிய விழா
இயேசுவின் கண்மணிகள் விழா
ஒவ்வொரு நாளும் மாலை 06.30 மணிக்கு செபமாலை செபிக்கப் படுகிறது.
ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி மாதாவின் விண்ணேற்பு பெருவிழா கொடியேற்றப்பட்டு சிறப்பாக கொண்டாடப் படுகிறது. தூய மரியன்னை நடுநிலைப் பள்ளி ஆசிரியப் பெருமக்களால் திருப்பலி சிறப்பிக்கப் படுகின்றது.
பங்கில் உள்ள பங்கேற்பு அமைப்புகள் :
1. மரியாயின் சேனை
2. புனித வின்சென்ட் தே பவுல் சபை
3. இளைஞர் மன்றம்
4. இயேசுவின் கண்மணிகள்.
பங்கில் உள்ள அன்பியங்கள் :
1. சகாய மாதா
2. லூர்து மாதா
3. ஆரோக்கிய மாதா
4. வியாகுல மாதா
5. குழந்தை இயேசு
பங்கில் பணிபுரியும் அமலவை அருட்சகோதரிகள்:
1. அருட்சகோதரி. அ. லூயிஸ் குழந்தை தெரஸ்
2. அருட்சகோதரி. ஜெயமேரி
3. அருட்சகோதரி. மரிய செல்வி
பங்கின் பள்ளிக்கூடம் :
தூய மரியன்னை நடுநிலைப் பள்ளி
தூய மரியன்னை நடுநிலைப் பள்ளி நிர்வாகம்:
மேதகு ஆயர் செ. சூசை மாணிக்கம் (மேலாளர்)
அருள்திரு. மா. ரமேஷ் (தாளாளர்)
அருள்சகோதரி. அ. லூயிஸ் குழந்தை தெரஸ் (தலைமையாசிரியை)
மேலும் பள்ளியில் 25 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் சிறப்புற பணியாற்றி வருகின்றனர்.
பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் :
1. Rev. Fr. V. Vignon, SJ (1911-1919)
2. Rev. Fr. G. Aranault, SJ (1920)
3. Rev. Fr. Michael George, SJ (1921)
4. Rev. Fr. Dioudonat, SJ (1922-1933)
5. Rev. Fr. Maria Selvarayan, SJ (1934-1936)
6. Rev. Fr. A. Devasagayam, SJ (1937)
7. Rev. Fr. K. V. Paul, SJ (1938)
8. Rev. Fr. Papaya, SJ (1939-1942)
9. Rev. Fr. S. Vethamuthu (1943)
10. Rev. Fr. P. K. Matheu (1944)
11. Rev. Fr. S. Vethamuthu (1945)
12. Rev. Fr. S. Vethamuthu (1946)
ev. Fr. De Sousa Blasius
13. Rev. Fr. Aricat (1947)
ev. Fr. D. G. Diravium
14. Rev. Fr. G. Pignol (1948-1962)
15. Rev. Fr. Jos M. Arulsamy (1963-1964)
16. Rev. Fr. P. Amalraj (1964-1967)
17. Rev. Fr. M. Berchmans (1967-1972)
18. Rev. Fr. A. Arulappar (1972-1974)
19. Rev. Fr. Maria Pancras (1974-1980)
20. Rev. Fr. Alphone Nathan (1980-1984)
21. Rev. Fr. G. Vincent Amalraj. (1984-1988)
22. Rev. Fr. L. Amalraj (1988-1992)
23. Rev. Fr. Prabhakaran (1992-1995)
24. Rev. Fr. John Kennedy, SJ (1995-1997)
25. Rev. Fr. I. Augustine (1997-2003)
26. Rev. Fr. D. Antony Samy (2003-2007)
27. Rev. Fr. Jesudasan C.Ss.R (2007-2008)
28. Rev. Fr. V. Ignatious Xavier (2008-2012)
29. Rev. Fr. Thatheus, OFM Cap (2012-2014)
30. Rev. Fr. A. Amalan, M.L,J.U.D (2014-2019)
31. Rev. Fr. M. Ramesh (2019....)
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருள்திரு. மா. ரமேஷ்