844 புனித வியாகுல அன்னை ஆலயம், பூங்காநகர்

             

புனித வியாகுல அன்னை ஆலயம்

இடம்: பூங்காநகர், சென்னை -2

மாவட்டம்: சென்னை

மறைமாவட்டம்: சென்னை -மயிலை உயர்மறைமாவட்டம்

மறைவட்டம்: எழும்பூர்

நிலை: கிளைப்பங்கு

பங்கு: புனித அந்தோனியார் ஆலயம், பூங்காநகர்

பங்குத்தந்தை அருட்பணி. K. J. வர்க்கீஸ் ரொசாரியோ

குடும்பங்கள்: 200

அன்பியங்கள்: 7

ஞாயிறு திருப்பலி காலை 08:00 மணி

திருவிழா:

செப்டம்பர் மாதம் 13,14,15 தேதிகளில்.

மண்ணின் இறையழைத்தல்

அருட்பணி. சதீஷ், சென்னை -மயிலை உயர்மறைமாவட்டம் 

வரலாறு:

ஆங்கிலேயர்களால் பூங்காநகரில் 1804 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஆலயம் தான் தற்போது இருக்கும் வியாகுல அன்னை அருட்தலம். 

ஆங்கிலேயர் ஆட்சிக்கால கவர்னர்களின் மெய்க்காப்பாளர்கள் இறந்த பிறகு, பூங்காநகரில் உள்ள இந்த கல்லறை வளாகத்தில் தான் அடக்கம் செய்வார்கள். 

இந்த கல்லறைத் தோட்டத்தில் உயிர்ப்பின் சாட்சியமாக இவ்வாலயம் அமைந்து, வியாகுல அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்டது. நமது சென்னை பட்டினத்தில் வியாகுல அன்னைக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட முதல் ஆலயம் இதுவேயாகும். 

பழம் பெருமை வாய்ந்த சென்னை உயர்மறை மாவட்டத்தின் பேராலயமாக இருந்த, புனித மரியன்னை பங்கோடு இணைந்த இவ்வாலயம் மக்களின் அருள்தரும் இடமாக விளங்குகிறது. சென்னை பாரிமுனையில் தற்பொழுது இருக்கும் புனித அந்தோனியார் திருசுரூபம் இங்கு தான் மக்களின் வணக்கதிற்காக வைக்கப்பட்டது. மக்கள் கூட்டம் பெருகவே அதனை பாரிமுனை ஆலயத்தில் வைக்கப்பட்டது.

பூங்காநகர் புனித அந்தோனியார் ஆலயம் தனிப்பங்கானபோது, வியாகுல மாதா ஆலயம் அதன் கிளைப் பங்காக ஆனது.

பழைமையாக இருந்த ஆலயத்தை அருட்தந்தை. தாமஸ் வாரிகாட்,

அருட்தந்தை. ரேமண்ட் பீட்டர்,

அருட்தந்தை. விக்டர் ரமேஷ்,

அருட்தந்தை. இர்வின் தேவமணி,

அருட்தந்தை. K.J. வர்கீஸ் ரொசாரியோ ஆகியோர்களின் முயற்சியால், திருப்பயணிகள் ஜெபிக்கும் தலமாக உயர்ந்துள்ளது..

பழைமையான ஆலயமானது விரிவாக்கம் செய்யப்பட்டு, அருட்பணி. C. விக்டர் ரமேஷ் பணிக்காலத்தில் செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் மேதகு A. நீதிநாதன் முன்னிலையில், சென்னை -மயிலை உயர்மறைமாவட்ட பேராயர் மேதகு A. M. சின்னப்பா அவர்களால் 01.11.2012 அன்று, அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது. 

மீண்டும் அருட்பணி.‌ K. J. வர்க்கீஸ் ரொசாரியோ அவர்களின் வழிகாட்டலில் ஆலயமானது அழகுற புதுப்பிக்கப்பட்டு, சென்னை -மயிலை உயர்மறைமாவட்ட பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோனிசாமி அவர்களால், 19.12.2021 அன்று அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.

சிறப்புகள்:

1. திறன்மேடை (The Stage of Talents) கட்டப்பட்டு, இம்மேடை மாற்றுத்தறனாளிகளுக்கும், திருநங்கைகளுக்கும் அர்ப்பணிக்கப்பட்டது.

26.02.2023 அன்று சென்னை -மயிலை உயர்மறைமாவட்ட பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோனி சாமி அவர்களால் திறன்மேடை திறந்து மந்திரித்து வைக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளும், திருநங்கைகளும் பங்கேற்று திறந்து வைத்தனர்.

2. தூய லூர்து மாதா கெபி அமைக்கப்பட்டு, சென்னை -மயிலை உயர்மறைமாவட்ட பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோனி சாமி அவர்களால், 26.02.2023 அன்று மந்திரித்து திறந்து வைக்கப்பட்டது.

3. 33 அடி உயர புண்ணியங்களின் கோபுரம் (The Tower of Virtues) கட்டப்பட்டு, 26.02.2023 அன்று பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோனி சாமி அவர்களால் மந்திரித்து திறந்து வைக்கப்பட்டது. இந்தக் கோபுர உச்சியில் உலக இரட்சகர் சுரூபமும், கீழ்த்தளத்தில் புனித ஆரோக்கிய அன்னை சுரூபமும், நமது இறைவிசுவாசத்தை ஆழப்படுத்தும் இறை செய்திகளைத் தாங்கிய ஒவ்வொரு தளங்களும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது தனிச் சிறப்பாகும்.

4. ஆலய மணி கோபுரம் நிறுவப்பட்டு, 26.02.2023 அன்று பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோனி சாமி அவர்களால் மந்திரித்து திறந்து வைக்கப்பட்டது.

5. கல்லறைத்தோட்ட நுழைவாயில் புதிதாக அமைக்கப்பட்டு, 26.02.2023 அன்று பேராயர் ஜார்ஜ் அந்தோனி சாமி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இவையனைத்தும் பங்குத்தந்தை அருட்பணி.‌ K. J. வர்க்கீஸ் ரொசாரியோ அவர்களின் முயற்சியால், மக்களின் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பங்கில் உள்ள கெபிகள்:

புனித ஆரோக்கிய அன்னை கெபி

புனித லூர்து அன்னை கெபி

புனித வியாகுல அன்னை கெபி

உயிர்த்த ஆண்டவர் கெபி.

தவக்காலங்களில் வெள்ளிக்கிழமை அன்று நடைபெறுகின்ற திருச்சிலுவை பாதையின் போது, சென்னையின் பல பங்கு ஆலயங்கள் மற்றும் பல பகுதிகளில் இருந்து பல்வேறு மக்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற வருவார்கள். வியாகுல அன்னையிடம் தொடர்ச்சியாக ஏழு வாரங்கள் அகல் விளக்கேற்றி வேண்டினால், அனைத்து அற்புதங்களும் நடக்கும் என்பது இறைமக்களின் நம்பிக்கை.

சென்னையில் தவக்கால புனிதப் பயணம் செல்பவர்கள், தவறாமல் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய ஆலயங்களில் ஒன்றுதான் பூங்கா நகர் வியாகுல அன்னை அருட்தலம்..

பங்கேற்பு அமைப்புக்கள்:

1. பீடப் பணியாளர்கள்

2. மறைக்கல்வி

3. இளைஞர் இளம் பெண்கள் இயக்கம்

பாடகர் குழுவினர்

Church Facebook I'd: https://www.facebook.com/groups/933305190053280/?ref=share

Church YouTube links: https://youtube.com/@vyakulamatha2076

வழித்தடம்: சென்னை சென்ட்ரல் -பூங்காநகர் 5நிமிட நடைபயணம் (பல்லவன் டிப்போ அருகில்)

Location map: https://g.co/kgs/N8CTh8

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தையின் வழிகாட்டலில் ஆலய உறுப்பினர் திரு. ராம்குமார் அவர்கள்.