இடம் : ஆலன்விளை
மாவட்டம் : கன்னியாகுமரி
மறைமாவட்டம் : குழித்துறை
மறைவட்டம் : காரங்காடு
நிலை : பங்குத்தளம்
கிளைப்பங்குகள் :
1. தூய தஸ்நேவிஸ் அன்னை ஆலயம், மேல ஆலன்விளை
2. தூய சூசையப்பர் ஆலயம், குருந்தன்கோடு
பங்குத்தந்தை : அருட்பணி. அ. பிரைட் சிம்ச ராஜ்
குடும்பங்கள் : 342
அன்பியங்கள் : 14
வழிபாட்டு நேரங்கள் :
ஞாயிறு திருப்பலி காலை 09.00 மணிக்கு.
வாரநாட்களில் திருப்பலி : காலை 06.15 மணிக்கு
புதன் மாலை 06.15 மணிக்கு சகாய மாதா நவநாள் திருப்பலி.
திருவிழா : பெப்ரவரி 11 ஆம் தேதியை மையமாகக் கொண்ட பத்து நாட்கள்.
மண்ணின் இறையழைத்தல்கள்:
1. அருட்பணி. S. தாமஸ் மத்தியாஸ் (late)
2. அருட்பணி. S. கிறிஸ்து தாஸ்
3. அருட்பணி. A. விக்டர் அருளப்பன்
4. அருட்பணி. V. பெனிட்டோ
5. அருட்சகோதரி. M. அல்போன்சா
6. அருட்சகோதரி. M. வெர்ஜின்
7. அருட்சகோதரி. S. ஞானசெல்வம்
8. அருட்சகோதரி. F. செல்வராணி
9. அருட்சகோதரி. S. சிறியபுஷ்பம்
10. அருட்சகோதரி. V. ஸ்டெல்லா
11. அருட்சகோதரி. P. பிரதிபா
12. அருட்சகோதரி. P. பாக்கியம்
13. அருட்சகோதரி. V. கரோபின் மேரி.
வழித்தடம் : திங்கள்நகர் -ஆசாரிபள்ளம் சாலையில், குருந்தன்கோடு சந்திப்பிலிருந்து இடது புறமாக இரட்டைக்கரைசானல் சாலையில் ஒரு கி.மீ தூரத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது.
Location map :
St. Lourdhu Annai Church,
Karankadu Post, Alanvilai, Tamil Nadu 629809
https://maps.google.com/?cid=12038800734795292509
வரலாறு :
குமரி மாவட்டத்தில் இயற்கை எழில் சூழ்ந்த, பல்சமய மக்களும் தோழமையுடன் வாழும் ஆலன்விளை கிராமத்தில் அமைந்துள்ள தூய லூர்து அன்னை ஆலய வரலாற்றைக் காண்போம்.
கோட்டாறு மறைமாவட்டம் மற்றும் குழித்துறை மறைமாவட்டங்களின் மிகப் பழைமையான பங்காக கருதப்படும் காரங்காடு புனித ஞானப்பிரகாசியார் ஆலயத்தின் கிளைப் பங்காக பல ஆண்டுகளாக ஆலன்விளை இருந்து வந்தது.
பழைமையான கத்தோலிக்க கிறிஸ்தவர்களாகிய ஆலன்விளை மக்கள் நாள் திருப்பலி மற்றும் ஞாயிறு திருப்பலியில் பங்கேற்கவும், திருவருட்சாதனங்களை பெறுவதற்கும், காரங்காட்டிற்கு நடந்தே சென்று வந்தனர்.
மேல ஆலன்விளையில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு உள்ள ஆங்கிலேய பாரம்பரியத்தைச் சேர்ந்த தூய தஸ்நேவிஸ் மாதா குருசடி ஒன்றும் உள்ளது. வடக்கன்குளம் கட்டிட கலைஞர்களால் கட்டப்பட்ட பழைமையான குருசடி பழைய கல்லறைத் தோட்டத்தில் இருந்தது.
கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே, ஆலன்விளையில் ஆலயம் அமைக்கும் எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்தது. மண்ணின் மைந்தரும், காரங்காடு பங்கின் முதலானவருமான அருட்பணி. தாமஸ் மத்தியாஸ், சகோதரி. ரெஜினாள், திரு. ஆல்பர்ட் ஆசிரியர் மற்றும் பங்கு மக்களின் துணையுடன் தற்போதைய ஆலயம் கட்டப்பட்டுள்ள இடத்தை தேர்வு செய்து ஓலைக்கூரையும், பனை ஓலையால் ஆன சுவர்களையும் கொண்ட ஆலயம் ஒன்றை 1962 ஆம் ஆண்டில் கட்டினார்கள்.
காரங்காடு பங்குத்தந்தை அருட்பணி. S. ஜோசப் அடிகளாரின் பணிக்காலத்தில் 04.09.1963 ல் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப் பட்டது. மக்களின் அயராத உழைப்பு, நன்கொடை, சகோதரி. ரெஜினாள் அவர்களின் விடாமுயற்சி ஆகியவற்றால் ஓடு வேய்ந்த ஆலயம் கட்டப்பட்டு 23.08.1964 அன்று மேதகு ஆயர் ஆஞ்ஞிசாமி அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.
காரங்காடு பங்குத்தந்தை அருட்பணி. ஜோசப் பணிக்காலத்தில் 26.06.1968 அன்று ஆலன்விளை தனிப்பங்காக உயர்த்தப் பட்டது. முக்கலம்பாடு, மாவிளை, குருந்தன்கோடு ஆகியன ஆலங்கோட்டின் கிளைப்பங்குகள் ஆயின. அருட்பணி. ஜோக்கிம் அவர்கள் முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார்கள்.
பங்கின் வளர்ச்சி:
ஆலன்விளை தனிப்பங்காக ஆனது முதல் வேகமாக முன்னேறத் துவங்கியது.
அருட்பணி. ஜோக்கிம் பணிக்காலத்தில், மக்களின் ஒத்துழைப்புடன் ஆலன்விளை -ஆசாரிவிளை சாலை உருவாக்கப்பட்டது.
தொடர்ந்து அருட்பணி. மத்தியாஸ் அவர்கள் ஆன்மீகப் பாதையில் சிறப்பாக வழி நடத்தினார்.
அருட்பணி. A. மரியதாஸ் பணிக்காலத்தில், அப்போதைய குருக்கள் இல்லத்தின் ஒருபகுதியாகிய மினி சென்டர் கட்டிடம் கட்டப்பட்டது. ஆலய முன்புறம் மதில்சுவர் கட்டப்பட்டது. கலையரங்கம் மற்றும் ஆலய பீடம் புதுப்பிக்கப் பட்டது.
அருட்பணி. A. பீட்டர் ஜாண் பணிக்காலத்தில் டோமினிக் சாவியோ மன்றம் ஏற்படுத்தப் பட்டது. தெற்கு ஆலன்விளை தூய மிக்கேல் அதிதூதர் குருசடியானது, ஆலன்விளை ஆலய நிர்வாகத்திடம் ஒப்படைக்கப் பட்டது.
பழைய கல்லறை தோட்டத்தில் உள்ள உத்தரிய மாதா குருசடி புதிதாக மாற்றியமைக்கப் பட்டது.
அருட்பணி. A. அல்போன்ஸ் பணிக்காலத்தில் இளைஞர் இயக்கம் தோற்றுவிக்கப் பட்டது.
அருட்பணி. R. ஆன்றனி பணிக்காலத்தில் பழைய கல்லறைத் தோட்டத்தில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது.
அருட்பணி. C. M. வென்சஸ்லாஸ் பணிக்காலத்தில் அன்பியங்கள் வழியாக பங்கு அருட்பணிப் பேரவைக்கு உறுப்பினர்களை தேர்வு செய்யும் முறையும், நிதிக்குழு, தணிக்கைக்குழு ஆகியனவும் உருவாக்கப்பட்டது.
02.08.1998 ல் பங்குத்தந்தை இல்லம் கட்டப்பட்டது. நிலங்கள் வாங்கப் பட்டன.
தற்போது உள்ள ஆலயத்திற்கு 08.09.1997 அன்று மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. பழைய ஆலய கோபுரம் இடிக்கப்பட்டு புதிய ஆலய கட்டுமானப் பணிகள் ஆரம்பமானது.
அருட்பணி. K. மரியதாஸ் பணிக்காலத்தில், அனைவரின் ஒத்துழைப்புடன் ஆலயம் கட்டப்பட்டு 17.02.2001 அன்று மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. நிலங்கள் வாங்கப் பட்டன. பல்வேறு சபைகள், இயக்கங்கள் உருவாக்கப்பட்டன.
மேல ஆலன்விளை தஸ்நேவிஸ் மாதா குருசடியில் 17.12.2000 அன்று முதல் முறையாக திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
அருட்பணி. P. சுரேஷ்குமார் பணிக்காலத்தில், 12.06.2006 ல் தூய லூர்து அன்னை கெபிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் நிறைவு பெற்று 07.10.2006 அன்று அர்ச்சிக்கப் பட்டது. 04.11.2007 அன்று ஆலன் அன்னை கம்யூனிட்டி ஹால் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, மக்களின் நிதியுதவியுடன் கட்டுமானப் பணிகள் நடந்து வந்தது.
அருட்பணி. ஆன்றனி ஜெகன் அஸ்வின் பணிக்காலத்தில், ஆலன் அன்னை கம்யூனிட்டி ஹால் பணிகள் நிறைவு பெற்று 08.09.2009 அன்று திறந்து வைக்கப்பட்டது. மக்களின் பங்களிப்புடன் வெங்கல கொடிமரம் நிறுவப்பட்டு, 03.02.2012 அன்று அர்ச்சிக்கப் பட்டது.
தூய லூர்து அன்னை ஆலய உருவாக்கத்தின் 50 ஆம் ஆண்டு நிறைவு விழா நினைவுச் சின்னமாக, ஆலயத்தின் முன்புறம் அன்னையின் சுரூபம் வைக்கப்பட்டு, இருபுறமும் படிக்கட்டுகளுடன் கூடிய அழகிய குருசடி கட்டப்பட்டு 08.02.2013 அன்று அர்ச்சிக்கப் பட்டது.
ஆலன் அன்னை கம்யூனிட்டி ஹாலுக்கு செல்ல அழகிய நுழைவுவாயில் அபைக்கப் பட்டது.
தெற்கு ஆலன்விளை தூய மிக்கேல் அதிதூதர் குருசடி கூரை வடிவமைக்கப்பட்டது.
ஆலன் அன்னை நிதி நிறுவனக்குழு ஏற்படுத்தப்பட்டு, அதன் வாயிலாக தங்க நகை அடகு பிடிப்போர் நிதி நிறுவனம் துவக்கப் பட்டது.
அருட்பணி. S. காட்வின் செல்வ ஜஸ்டஸ் பணிக்காலத்தில், ஆலய பீடம் மரத்தால் அழகுற வடிவமைக்கப்பட்டது. நிலங்கள் வாங்கப் பட்டன. ஆலன் அன்னை அடகு பிடிப்போர் நிறுவனம், ஆலன் அன்னை நிதி நிறுவனமாக தரம் உயர்த்தப்பட்டது. ஆலன் அன்னை அகாடமி தொடங்கப் பட்டது.
தற்போது அருட்பணி. பிரைட் சிம்ச ராஜ் அவர்கள் 27.05.2018 முதல் பங்குத்தந்தையாக பணியாற்றி வருகிறார். நிலம் வாங்கி அதில் ஒருவருக்கு வீடு கட்டி கொடுக்கப் பட்டது. பங்கு வளர்ச்சிக் குழுவின் நிதியுதவியால்
பங்குத்தந்தை இல்லம் புதிதாக கட்டப்பட்டு 20.01.2019 அன்று மேதகு ஆயர் ஜெறோம் தாஸ் அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது. செட்டிவிளையில் இரண்டு ஏக்கர் நிலமும் நான்காயிரம் சதுர அடியில் இரண்டு மாடிக் கட்டிடமும் பங்கு வளர்ச்சிக்குழு மற்றும் நிதி நிறுவனக்குழுவின் முழு பங்களிப்புடன் ஆலயத்திற்கு வாங்கப்பட்டது. அதில் தற்போது கல்விக் குழுவால் மெழுகுவர்த்தி தயாரிப்பு நடைபெற்று வருகிறது.
ஆலன்விளை தனிப் பங்காக ஆனதன் பொன்விழா 30.06.2019 அன்று குழித்துறை மறைமாவட்ட ஆயர் மேதகு ஜெறோம் தாஸ் அவர்கள் தலைமையில், மண்ணின் மைந்தர்கள், பங்கு மக்களின் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
பங்கில் உள்ள பங்கேற்பு அமைப்புகள் :
1. பங்கு அருட்பணிப் பேரவை
2. ஆலன் அன்னை நிதி நிறுவனம்
3. பங்கு வளர்ச்சிக்குழு
4. மறைக்கல்வி மன்றம்
5. கத்தோலிக்க தொழிலாளர் நல இயக்கம்
6. கத்தோலிக்க சேவா சங்கம்
7. இளைஞர் இயக்கம் (பெண்கள்)
8. இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம்
9. சிறுவழி இயக்கம்
10. பாலர்சபை
11. பாடகற்குழு
12. கிறிஸ்தவ வாழ்வு சமூகம்
13. பெண்கள் இயக்கம்
14. கல்விக்குழு
15. வழிபாட்டுக்குழு
16. ஆலன் அன்னை அகாடமி
17. குழந்தைகள் பாராளுமன்றம்
18. மரியாயின் சேனை
19. பீடச்சிறார்
20. அன்பிய ஒருங்கிணையம்
21. அடித்தள முழுவளர்ச்சி சங்கம்
22. சபை -சங்க ஒருங்கிணையம்
23. இயேசுவின் திருஇருதய சபை.
பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:
1. அருட்பணி. A. ஜோக்கிம் (26.06.1968 -06.08.1970)
2. அருட்பணி. மத்தியாஸ் (06.08.1970-31.05.1974)
3. அருட்பணி. A. மரியதாஸ் (31.05.1974-03.05.1982)
4. அருட்பணி. A. பீட்டர் ஜாண் (03.05.1982-20.12.1986)
5. அருட்பணி. எட்வின் (20.12.1986-28.05.1987)
6. அருட்பணி. A. அல்போன்ஸ் (28.05.1987-27.05.1989)
7. அருட்பணி. R. ஆன்றனி (27.05.1989-14.11.1992)
8. அருட்பணி. C. M. வென்சஸ்லாஸ் (14.11.1992-08.06.1999)
9. அருட்பணி. K. மரியதாஸ் (08.06.1999-29.05.2004)
10. அருட்பணி. P. சுரேஷ்குமார் (29.05.2004-19.05.2009)
11. அருட்பணி. C. ஆன்றனி ஜெகன் அஸ்வின் (19.05.2009-16.03.2014)
12. அருட்பணி. G. பிரபு (16.03.2014-14.06.2015)
13. அருட்பணி. S. காட்வின் செல்வ ஜஸ்டஸ் (14.06.2015-27.05.2018)
14. அருட்பணி. A. பிரைட் சிம்ச ராஜ் (27.05.2018 முதல் தற்போது வரை...)
தகவல்கள் : பங்குத்தந்தை அருட்பணி. A. பிரைட் சிம்ச ராஜ் அவர்கள்.
வரலாறு : ஆலய பொன்விழா மலரிலிருந்து எடுக்கப்பட்டது.
புகைப்படங்கள் : ஆலன்விளை மண்ணின் மைந்தர் அருட்பணி. வ. பெனிட்டோ அவர்கள்.