476 புனித கித்தேரியம்மாள் ஆலயம், கே.கே.பட்டி


புனித கித்தேரியம்மாள் ஆலயம்

இடம்: கே.கே.பட்டி (Kona Kollai Patti)

மாவட்டம்: புதுக்கோட்டை
மறைமாவட்டம்: தஞ்சாவூர்
மறைவட்டம்: புதுக்கோட்டை.

கிளைப்பங்குகள் :

1.புனித அடைக்கல மாதா ஆலயம், ரெகுநாதபுரம்

2. புனித அந்தோணியார் ஆலயம், கறம்பக்குடி

3. புனித அந்தோணியார் ஆலயம், தென்நகர்

4. புனித செபஸ்தியார் ஆலயம், நடுப்பட்டி

5. புனித சின்னப்பர் ஆலயம், எம். கே. விடுதி, நால்ரோடு.

மொத்த குடும்பங்கள்: 325
மொத்த அன்பியங்கள்: 10

பங்குத்தந்தை: அருட்பணி. ஆரோ சேசுராஜ்

திருப்பலி நடைபெறும் நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி: காலை 07.00 மணிக்கு ரெகுநாதப்புரத்தில் நடைபெறும்.

காலை 08.30 மணிக்கு கே.கே.பட்டியில் நடைபெறும்.

வார நாட்கள் திருப்பலி: திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் காலை 06.30 மணிக்கு திருப்பலி நடைபெறும்.

புதன், சனி ஆகிய நாட்களில் மாலை 06.30 மணிக்கு திருப்பலி நடைபெறும்.

பங்கின் திருவிழா: ஆண்டுதோறும் மே – 21-ம் தேதி கொண்டாடப்படும்.

மண்ணின் மைந்தர்கள்:
1. அருட்பணி. P. சேவியர் பாக்கியம், SDB
2. அருட்பணி. A. பிலிப் ஆரோக்கியராஜ், smm.

மண்ணின் அருட்சகோதரர்கள்:
1. அருட்சகோதரர் I. அருண் சகாயராஜ் SDB
2. அருட்சகோதரர். I. பல்த்தசார் sommscan
3. அருட்சகோதரர். A. ஜார்ஜ் sommscan
4. அருட்சகோதரர். A. லியோ தாஸ் MMI
5. அருட்சகோதரர். I. ரெக்ஸ் SDB
6. அருட்சகோதரர் P. பிரவின் குமார்
7. அருட்சகோதரர். C. ஜார்ஜ்
8. அருட்சகோதரர். L. ஜார்ஜ்.

கே.கே.பட்டி மண்ணின் அருட்சகோதரிகள்:
1. Sr. ஸ்டெல்லா மேரி SAT
2. Sr. S. ஏஞ்சல் SAI
3. Sr. S. கிளாடிஸ் மேரி SAT
4. Sr. S ஸ்டெல்லா FMA
5. Sr. K. கேத்திரின் CSJ
6. Sr. I. ஜெசி விமலாராணி SAT
7. Sr. A. செந்னிலாமேரி FIHM
8. Sr. Aமதலேன் CSJ
9. Sr. புளோரா SAT
10. Sr. கித்தேரியம்மாள் SAT
11. Sr. I. செசிலி லிகொரியா SAT
12. Sr. ஜோஸ்பின் புளோர SCCG
13. Sr. S. தயவு மேரி SAT
14. Sr. S. அந்தோணியம்மாள் SCCG
15. Sr. S. அந்தோணியம்மாள் SCCG
16. Sr. K. மேரி புஷ்பா SAC
17. Sr . J. அமல ரூபி FMM.

ரெகுநாதபுரம் மண்ணின் அருட்சகோதரிகள்:
1. Sr. வில்லியம் SAT
2. Sr. மதலை SAT
3. Sr. ஏஞ்சல் SAT
4. Sr. வைரமேரி SAC
5. Sr. T. லில்லி புஷ்பமேரி DMI
6. Sr. கிறிஸ்டி DMI
7. Sr. ஸ்டெல்லாமேரி SAT
8. Sr. ஆரோக்கிய மேரி SAT
9. Sr. ஆரோக்கிய மேரி FBS
10. Sr. விக்டோரிய SAT
11. Sr. செபஸ்தியம்மாள் SAT
12. Sr. ஹெர்பர்ட் ஜெயசெட்டி SAT
13. Sr. நிர்மலா SAT
14. Sr. மார்க்ரெட் மேரி CSJ
15. Sr. செசிலி SAC
16. Sr. லீமா ரோஸ்மேரி SAT.

தென்நகர் மண்ணின் அருட்சகோதரி:
Sr. S. ஆரோக்கியமேரி CSJ.

வழித்தடம் :
தஞ்சாவூரிலிருந்து, கறம்பகுடி -க்கு செல்லும் சாலையில், வாண்டான் விடுதி பேருந்து நிறுத்தத்தில் இருந்து 2கி.மீ தூரம் வந்தால் கே. கே பட்டியை அடையலாம். மற்றும் கந்தர்வகோட்டையிலிருந்து, பட்டுக்கோட்டைக்கு செல்லும் சாலையில் எம்.கே. விடுதி நால்ரோடு பேருந்து நிறுத்தத்தில் இருந்து 4கி.மீ தூரம் வந்தால் கே. கே. பட்டியை அடையலாம்.

Location map : https://maps.app.goo.gl/4kF7puhKNkS1MK7r9

பங்கில் பணி புரிந்த பங்குத்தந்தையர்கள்:

1. அருட்தந்தை. S. M. அந்தோணி ராஜ் (1987-1994)
2. அருட்தந்தை. J. தேவநேசன் (1994-1995)
3. அருட்தந்தை. S. ஜோசப் செல்வராஜ் (1995-1997)
4. அருட்தந்தை. S. செங்கோல் (1997-1999)
5. அருட்தந்தை. S. செபாஸ்டின் பெரியண்ணன் (1999);
6. அருட்தந்தை. Dr. L. சகாய ராஜ் (1999-2002);
7. அருட்தந்தை. S. மரிய ஜோசப் ஜெரால்டு (2002-2003)
8. அருட்தந்தை. M. L. ஜான் பீட்டர் (2003-2005)
9. அருட்தந்தை. திமோத்தி (2006-2007)
10. அருட்தந்தை. A. பால்ராஜ் (2007-2008);
11. அருட்தந்தை. R. K. சாமி (2008-2011)
12. அருட்தந்தை K. நெப்போலியன் ஆல்பர்ட் (2011-2015)
13. அருட்தந்தை A. சக்கரியாஸ் (2015-2016);
14. அருட்தந்தை. A. தாமஸ் பெர்நாண்டோ (2016-2017)
15.அருட்தந்தை. ஆரோ சேசுராஜ் (2017……

கே.கே.பட்டியின் வரலாறு:

கோணக்கொல்லைப் பட்டி என்ற இந்த ஊரின் பெயருக்கு ஒரு காரணம் உண்டு. முன்னோர்கள் முதன்முதலாக குடியேறி வாழ ஆரம்பித்தபோது அவர்கள் விவசாயத்திற்கென்று பயன்படுத்திய நிலத்தின் பெயர் கோணக் கொல்லையாம். இப்பெயர்தான் பின்பு ஊரின் பெயராக மாறி கோணக்கொல்லைப் பட்டி என்று அழைக்கப்பட்டு, பிறகு கே.கே.பட்டியாக அழைக்கப்படுகின்றது.

இப்பகுதிக்கு அஸ்திவாரமாக அமைந்தவர்கள் காராரன் வெள்ளாளன் என்பவர்கள்தான். இவர்கள் பஞ்சம் மற்றும் பசியால் சிரமப்பட்டதன் காரணமாக இந்த ஊரை விட்டே வெளியேறி விட்டனர்.

எனினும், இன்றைய சந்ததியினரின் முன்னோர்கள் சுமார் 300 ஆண்டுகளுக்கு பின்பு வடபகுதியில் இருந்து வந்தனர். இவர்களும் கூட பஞ்சத்தாலும், கடும் உழைப்பாலும் அவதிப்பட்டனர். பிறகு கரடுமுரடான நிலங்களை சரி செய்து விவசாயம் செய்ய ஆரம்பித்தனர்.

இந்நிலையில் தான் வீரமாமுனிவரால் தமிழகத்திற்கு அறிமுகமான அஞ்சா நெஞ்சம் படைத்த, எதையும் தைரியத்தோடு துணிந்து செயல்படுத்திய அன்னை கித்தேரியை மூதாதையர் தங்களின் பாதுகாவலியாகவும், வழிகாட்டியாகவும் தேர்வு செய்தனர்.

இம்மக்கள் தங்களின் பாதுகாவலிக்கு ஒரு ஆலயம் எழுப்ப எண்ணினர். இருப்பினும், வசதியின்மையின் காரணமாக குடிசை கோவிலைத்தான் கட்டினர். பிறகு பசியும் பட்டினியும் ஓரளவுக்கு மாறி மக்கள் நிதானமாக செயல்பட்டனர்.

பிறகு கி.பி 1909-ல் அன்னைக்கு ஒரு கோவில் கட்ட ஆரம்பித்தனர். ஆனால் நிதி பற்றாக் குறையின் காரணமாக பாதியில் வேலைகள் தடைப்பட்டன. ஏறக்குறைய 43 ஆண்டுகளுக்குப் பிறகு 1956-ல் அந்த ஆலயத்தை மீண்டும் எழுப்பி 1959-ல் கட்டி முடித்தனர். அன்று முதல் இன்று வரை மக்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

கி.பி 1987-ல் தஞ்சையின் மறைந்த முன்னாள் ஆயர் மேதகு டாக்டர். பாக்கியம் ஆரோக்கியசாமி அவர்களால் தாய்ப்பங்கான கோட்டைக்காட்டிலிருந்து கே.கே.பட்டி ஒரு தனிப்பங்காக அறிவிக்கப்பட்டது. இப்பங்கின் முதல் பங்கு குருவாக பணி புரிந்தவர் அருட்தந்தை. S. M. அந்தோணிராஜ். அருட்தந்தை அவர்கள் பங்கின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு செயல்பட்டார்.

கி.பி 2002 ஆம் ஆண்டு அருட்தந்தை. Dr. L. சகாயராஜ் அவர்கள் தற்போது உள்ள ஆலயத்தை, வானளாவிய உயர்ந்த கோபுரங்களுடன் அழகுற கட்டி முடித்தார்.

பல பக்த சபைகள் ஆரம்பிக்கப்பட்டு இன்று ஆன்மீகத்திலும், கல்வியிலும், சமுதாய வாழ்விலும் K. K பட்டி ஒரு முன் மாதிரி பங்காக இருக்கின்றது.

ஜீவன் ஜோதி நிறுவனங்கள் :

Sisters of charity - சபை அருட்சகோதரிகளால் Evangelization 2000 என்ற நோக்கோடு 18.05.1992 ஆம் ஆண்டு அப்போதைய பங்குதந்தை அருட்பணி. S. M. அந்தோணிராஜ் அவர்களால் K. K. பட்டி கிராமத்திற்கு அழைக்கப்பட்டு, மக்களின் அன்றைய தேவையை உணர்ந்து உருவாக்கப்பட்டது தான் ஜீவன் ஜோதி பள்ளி. இந்த ஜீவன் ஜோதி பள்ளியானது சிறு துளி வெள்ளம் போல வளர்ந்து, இன்று ஜீவன் ஜோதி நர்சரி, ப்ரைமரி மற்றும் ஜீவன் ஜோதி உயர் மேல் நிலைப்பள்ளியாக தமிழ் மற்றும் ஆங்கில வழியில் கல்வி கற்றுக் கொடுப்பதோடு, ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு முன்னுரிமை அளித்து மக்களின் நலனிலும் முழு அக்கறை காண்பித்து இச்சபையின் குறிகோளான, “இறைவனின் இரக்கமிக்க அன்பை” தொடர்ந்து வெளிபடுத்திக் கொண்டு இருக்கிறது.

ரெகுநாதபுரம் கல்லூரிகள்:

புதுக்கோட்டை மாவட்டம், கே.கே.பட்டி பங்கின் கிளைப்பங்காம் இயற்கை எழில் சூழ்ந்துள்ள ரெகுநாதபுரம் கிராமத்திற்கு பெருமை சேர்ப்பது தொன்போஸ்கோவின் சலேசிய அருட்சகோதரிகளால் நடத்தப்படும் பெண்களுக்கான இரு கல்லூரிகள், “அக்ஸீலியம் கல்வியியல் கல்லூரி மற்றும் அக்ஸீலியம் கலை மற்றும் அறிவியியல் கல்லூரிகள்”;. 2005-2006 ஆண்டில் 57 மாணவிகளைக் கொண்டு தொடங்கப்பட்ட கல்வியியல் கல்லூரி, 1057 பட்டதாரி ஆசிரியைகள் மற்றும் பேராசிரியைகளையும் உருவாக்கியுள்ளது.

கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2007-2008 ஆம் ஆண்டில் 3 மாணவிகளைக் கொண்டு தொடங்கப்பட்டு, 7 இளங்கலை மற்றும் முதுகலை பாடப்பிரிவுகளில் 1278 மாணவிகளால் கலைகட்டுகிறது. இந்த உயர் கல்வி நிறுவனங்களால் இச்சுற்றுவட்டார இளம்பெண்கள் பட்டதாரிகளாக குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் கல்வியாலும், பண்பாலும் அழகு சேர்க்கின்றனர். நல்லாயன் இயேசுவின் ஆசீரும், வழிநடத்துதலும், அன்னை சகாயத்தாயின் பாதுகாப்பும், அரவணைப்பும் எப்போதும் இந்நிறுவனத்தில் தங்கி துணைசெய்வதாக.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்பணி. ஆரோ சேசுராஜ் அவர்கள்.