485 புனித மார்ட்டீனார் ஆலயம், காரிப்பட்டி

புனித மார்ட்டீனார் ஆலயம்

இடம் : காரிப்பட்டி, காரிப்பட்டி அஞ்சல், 636106

மாவட்டம் : சேலம்
மறைமாவட்டம் : சேலம்
மறைவட்டம் : சேலம்

நிலை : கிளைப்பங்கு
பங்கு : தூய ஆவியார் ஆலயம், அக்ரஹாரம்

பங்குத்தந்தை : அருட்பணி. பிலவேந்திரம்

குடும்பங்கள் : 40
அன்பியங்கள் : 2

ஞாயிறு : காலை 10.30 மணிக்கு திருப்பலி.

திருவிழா : நவம்பர் மாதத்தில் புனித மார்ட்டீனார் திருவிழா

வழித்தடம் : அக்ரஹாரத்திலிருந்து ஒன்றரை கி.மீ தொலைவில் காரிப்பட்டி உள்ளது.

Location map : Karipatti Tamil Nadu 636106

வரலாறு

காரிப்பட்டி என்னும் சிற்றூரில் உள்ள புனித மார்ட்டீனார் ஆலயமானது, கி.பி.1983 முதல் அக்ரஹாரத்தின் கிளைப்பங்காக செயல்பட்டு வருகிறது.

காரிப்பட்டி மக்களின் வேண்டுதலுக்கிணங்க அன்றைய பங்குத்தந்தை அருட்பணி. ஆரோக்கியசாமி அவர்களின் பணிக்காலத்தில் முதல் ஆலயமானது கட்டப்பட்டு, 15.11.1983 அன்று மேதகு ஆயர் ஜார்ஜ் மோசர் ( ரோட்டன்பர்க் மறைமாவட்டம்) அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு, பேரருட்பணி. முகி பச்சேரி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

மேலும் இந்த ஆலயம் பழுதடைந்ததால், இன்றைய பங்குத்தந்தை அருட்பணி. பிலவேந்திரம் அடிகளாரின் முயற்சியால், காரிப்பட்டி மக்களின் ஒத்துழைப்புடன் புதிய ஆலயம் கட்டப்பட்டு வருகிறது.

இவ்வாலயம் சிறப்புற கட்டி முடிக்கப்பட இறைவனிடம் ஜெபிப்போம்.

தகவல்கள் : பங்குத்தந்தை அருட்பணி. பிலவேந்திரம் அவர்கள்.