764 புனித சந்தியாகப்பர் ஆலயம், புதுப்பட்டி

  

புனித சந்தியாகப்பர் ஆலயம்

இடம்: புதுப்பட்டி, 621307

மாவட்டம்: திருச்சி

மறைமாவட்டம்: திருச்சி

மறைவட்டம்: மணப்பாறை

நிலை: கிளைப்பங்கு

பங்கு: புனித சவேரியார் ஆலயம், மலையடிப்பட்டி

பங்குத்தந்தை: அருட்பணி. ஜேம்ஸ்

குடும்பங்கள்: 320

மாதத்திற்கு ஒருமுறை திருப்பலி நடைபெறும்

திருவிழாக்கள்:

புனித சந்தியாகப்பர் திருவிழாவானது ஆண்டுதோறும் ஆடி மாதம் 9,10 தேதிகளில் நடைபெறுகிறது. 

தை மாதம் (ஜனவரி) புனித அந்தோணியார் திருவிழாவும் நடைபெறும்.

மண்ணின் இறையழைத்தல்:

Sr. பிலிப் (குழந்தை தெரஸ்), குளூனி

Location map:

St. James Church P.Puthuppatty

H9GR+79R, Pudupatti, Tamil Nadu 621307

https://maps.app.goo.gl/VpLNAwT3Dh1JQ8vc6

வரலாறு:

புனித சக்தி நிறை சந்தியாகப்பர் அருள் வழங்கும் புண்ணிய பூமியாம் புதுப்பட்டி நீண்ட காலமாக இயேசுவின் வழியை பின்பற்றி வாழும் கிறிஸ்தவ மக்கள் நிறைந்த ஊராகும்.

ஆலய தொடக்கமும், வளர்ச்சியும்:

புதுப்பட்டியில் உள்ள புனித சந்தியாகப்பர் ஆலயம் கி.பி.1925 ஆம் ஆண்டு கட்டப்பட்டிருக்கலாம் என்று முன்னோர்களால் கூறப்பட்டு வருகிறது.

ஆலயத்தின் வளர்ச்சி நிலைகள்:

ஆலயத்தின் முன்புறமுள்ள மண்டபம் கி.பி.1990-ல் கட்டப்பட்டது. அதே ஆண்டில் இரதங்கள் நிறுத்துவதற்கு கற்காரை கட்டடம் ஒன்று கட்டப்பட்டது. மிகச்சிறிதாக இருந்த மருகிருதம்மாள் ஆலயமானது இடிக்கப்பட்டு 2008 ஆம் ஆண்டு மணிக்கூண்டு அமைக்கப்பட்டு, புதுப்பொலிவுடன் கட்டப்பட்டு திருச்சி மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோணி டிவோட்டா அவர்கள் தலைமையில், மலைப்பட்டி பங்குத்தந்தை அருட்பணி. லூயிஸ் பிரிட்டோ முன்னிலையில் அர்ச்சிக்கப்பட்டது.

2011 ஆம் ஆண்டு ஊரின் முகப்பில் புனித வீரசந்தியாகப்பர் குருசடியானது திருச்சி மறைமாவட்ட முதன்மை குரு அருட்பணி. தாமஸ் பால்சாமி தலைமையில், பங்குத்தந்தை அருட்பணி. ஜேம்ஸ் செல்வநாதன் முன்னிலையில் அர்ச்சித்து புனிதப்படுத்தி மக்களின் வழிபாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டது. 

2013 ஆம் ஆண்டு புனித மருகிருதம்மாள் நாடக மேடை கட்டப்பட்டு, ஆலய முன்புறம் அழகுற அமைக்கப்பட்டுள்ளது.

2014 ல் கொடிமரமானது உயரமான கருங்கல் கிரானைட் மேடையுடனும், இரும்பு கிரில் கேட் பாதுகாப்புடனும் கட்டி முடிக்கப்பட்டது.

தற்போது பழைய ஆலயம் மிகவும் பழுதுபட்டு உள்ளதால், பழைய ஆலயம் அமைந்துள்ள இடத்தில் புதிய ஆலயம் அமைக்க பங்குத்தந்தை அருட்பணி. ஜேம்ஸ் அவர்களால் 16.05.2022 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது.

நாடகமும், அன்னதானமும் :

ஆடி மாதம் புனித மருகிருதம்மாள் சரித்திர நாடகம், அன்னதானமும் நடைபெறும்.

புதுமைகள் :

திண்டுக்கல் அருகே யாகப்பன்பட்டி என்ற இடத்தில் வாழும் மக்களுக்கு ஆபத்து வருவதை கனவில் எச்சரித்து, அவர்களது உயிரையும் உடைமையையும் காப்பாற்றி இருக்கிறார் புனித சந்தியாகப்பர்.

நடைபெறும் வழிபாடுகள்:

ஞாயிறுதோறும் மறைக்கல்வி வகுப்புகள், மாதந்தோறும் அன்பிய கூட்டங்கள், மாதம் ஒரு திருப்பலி , கிறிஸ்துமஸ் மற்றும் புனித வார நிகழ்ச்சிகள் அனைத்துமே புதுப்பட்டியில் நடைபெறும்.

ஜல்லிக்கட்டு:

ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகைக்குப் பின்னர் பிப்ரவரி மாதத்தில் புதுப்பட்டியில் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

தகவல்கள்: மலையடிப்பட்டி மண்ணின் மைந்தர்கள் அருட்பணி. ஜோசப் அற்புதராஜ், OFM Cap  மற்றும் அருட்பணி. ஸ்டீபன் கஸ்பார் (திண்டுக்கல் மறைமாவட்டம்)

புகைப்படங்கள் மற்றும் தகவல்: பங்குத்தந்தை அருட்பணி. ஜேம்ஸ் அவர்கள்