542 புனித விண்ணரசி மாதா ஆலயம், கொக்கராயன்பேட்டை

  

புனித விண்ணரசி மாதா ஆலயம்

இடம் : கொக்கராயன்பேட்டை

மாவட்டம் : நாமக்கல்

மறை மாவட்டம் : சேலம்

மறை வட்டம் : திருச்செங்கோடு

நிலை : கிளைப்பங்கு

பங்கு : தூய தமத்திருத்துவ ஆலயம், SPB.காலனி

பங்குதந்தை : அருள்பணி. த. ஜான் கென்னடி

குடும்பங்கள் : 23

அன்பியம் : 1

ஞாயிறு திருப்பலி : மாலை 07.00 மணிக்கு 

வியாழன் மாலை 07.00 மணிக்கு நவநாள் திருப்பலி.

திருவிழா : ஆகஸ்ட் 15 ஆம் தேதி. 

வழித்தடம் :

திருச்செங்கோட்டிலிருந்து 16கி.மீ தொலைவிலும், 

SPB காலனியில் இருந்து ஓடப்பள்ளி வழியாக 9கி.மீ தொலைவிலும் கொக்கராயன்பேட்டை அமைந்துள்ளது.

Location map : Kokkarayanpettai Tamil Nadu 638007 https://maps.app.goo.gl/gffptbgn2NiBexGU7


வரலாறு :

கொக்கராயன்பேட்டை  தூய விண்ணரசி மாதா ஆலயமானது, சுமார் 65 ஆண்டுகால பழைமை வாய்ந்தது. மேலும், இம்மக்களின் இறை விசுவாசம் போற்றுதற்குரியது. இங்குள்ள கிறிஸ்துவ மக்களின் ஆன்மீகத் தேவைகளுக்காக குடிசையால் வேயப்பட்ட ஆலயம் ஒன்றை எழுப்பி, அதில் அன்னை ஜெயராக்கினியை பாதுகாவலியாகக் கொண்டு இறைவனை வழிபட்டு வந்தனர். தொடர்ந்து கொக்கராயன்பேட்டை தூய விண்ணரசி மாதா ஆலயமானது, SPB.காலனி பங்கின் கிளைப்பங்காக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

அன்றைய பங்குதந்தை அருட்பணி. ஜெயசீலன் அவர்களின் முயற்சியாலும், மக்களின் நன்கொடைகளாலும் ஆலயம் கட்டப்பட்டு, 13.05.2012 அன்று சேலம் மறைமாவட்ட ஆயர் செ. சிங்கராயன் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

இங்குள்ள மக்கள் அனைவரும் சாதி சமய பேதமின்றி ஒற்றுமையுடன் ஒரே குடும்பமாக இணைந்து வாழ்வது போற்றுதலுக்குரியது. 

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்கு ஆலய பீடச்சிறுவன்.