504 புனித சவேரியார் ஆலயம், கொசவம்பட்டி


புனித சவேரியார் ஆலயம்

இடம் : கொசவம்பட்டி, உடுப்பம் அஞ்சல், நாமக்கல் தாலுகா, 637019

மாவட்டம் : நாமக்கல்
மறைமாவட்டம் : சேலம்
மறைவட்டம் : நாமக்கல்

நிலை : பங்குத்தளம்

கிளைப்பங்குகள் :
1. புனித செபஸ்தியார் ஆலயம், நவமங்கலம்
2. புனித சவேரியார் ஆலயம், களங்காணி
3. புனித சூசையப்பர் ஆலயம், நவணி
4. புனித அந்தோணியார் ஆலயம், காரைக்குறிச்சி
5.புனித ஜெயராக்கினி மாதா ஆலயம், ஏளூர்.

பங்குத்தந்தை : அருட்பணி. அருள் பிரான்சிஸ் சேவியர்

குடும்பங்கள் : 196
அன்பியங்கள் : 10

திருப்பலி நேரங்கள் :

ஞாயிறு : காலை 09.00 மணிக்கு திருப்பலி

திங்கள் முதல் வெள்ளி வரை : காலை 06.30 மணிக்கு திருப்பலி

சனி : மாலை 07.00 மணிக்கு திருப்பலி

மாதத்தின் முதல் வெள்ளி : மாலை 06.30 மணிக்கு திருப்பலி மற்றும் குணமளிக்கும் செபவழிபாடு.

மண்ணின் மைந்தர்கள் :
1. அருட்பணி. இராஜரத்தினம் (late)
2. அருட்பணி. மரிய சூசை, ஆயர் இல்லம்
3. அருட்பணி. ஜெகராஜ், OCD
4. அருட்சகோதரி. ஜூலியட்.

திருவிழா : டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி.

வழித்தடம் : நாமக்கல்லில் இருந்து (சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை) வழியாக 13கி.மீ தொலைவில் புதன்சந்தை. அங்கிருந்து 1.5கி.மீ தொலைவில் கொசவம்பட்டி புனித சவேரியார் ஆலயம் உள்ளது.

Location map : https://maps.google.com/?cid=922190493334732618

வரலாறு

கி.பி.16ம் நூற்றாண்டில் கொசவம்பட்டிக்கு அருகில் உள்ள களங்காணியில் புனித சவேரியார் வந்து தங்கினார் என்பது மரபுச் செய்தியாகும். அங்கு அப்பொழுது காலரா நோய் பரவியிருந்தது. அவருடைய செபத்தால் அந்நோய் நீங்கியதாம். ஆகவே, கி.பி.1750 ஆம் ஆண்டில் களங்காணியில் புனித சவேரியார் சிற்றாலயம் கட்டப்பட்டது. இந்த ஊர் "களங்காதே நீ" என்று அழைக்கப்பட்டு வந்தது. காலப்போக்கில் உச்சரிப்பு மாறி களங்காணி என்று அழைக்கப்படுவதாக வாய்வழிச் செய்தி கூறுகிறது. இங்கே, புனித சவேரியார் காலத்தில் நிறுவப்பட்ட ஒரு கற்சிலுவை இன்றும் ஆலயத்தின் மத்தியில் உள்ளது. பிறகு, கும்பகோணம் மறைமாவட்டத்தில் காக்காவேரி பங்கின் கிளைப்பங்காக கொசவம்பட்டி இருந்தது.

புனித சவேரியாரைப் பாதுகாவலராகக் கொண்ட இப்பங்கு 1934 ஆம் ஆண்டு காக்காவேரியிலிருந்து ஒரு பகுதியை கொண்டு தனிப்பங்காகப் பிரிக்கப்பட்டது. பழங்காலத்தில் கொசவர் (குயவர்) இங்கு வாழ்ந்ததால் இப்பகுதி கொசவம்பட்டி என பெயர் பெற்றது. முதுமக்கள் தாழி 50 ஆண்டுகளுக்கு முன் இங்கு கிடைத்துள்ளது. வடக்கே ரெட்டிப்புதூர், தெற்கே முத்துடையார்பாளையம், மேற்கே உடுப்பம், கிழக்கே புதன்சந்தை என்று இந்த எல்லைக்கு உட்பட்டதுதான் கொசவம்பட்டி.

17.01.1943 அன்று இவ்வூரில் காலரா பரவியது. அப்போது சவேரியார் பெயர் கொண்ட ஒருவரைக்கூட காலரா தாக்கவில்லை என்பது சிறப்பு.

அருட்பணி. D. A. பிரான்சிஸ் அவர்களின் பெருமுயற்சியால் இங்கு புதிய ஆலயமும், அழகிய கோபுரமும் கட்டப்பட்டு, 20.05.1999 அன்று அர்ச்சிக்கப் பட்டது.

2004 ஆம் ஆண்டு அருட்பணி. இராஜமாணிக்கம் அவர்களின் முயற்சியால் ஆலயப்பீடப்பகுதி புதுப்பிக்கப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது.

அருட்பணி. கிளமெண்ட் ராஜ் அவர்களின் பணிக்காலத்தில் ஆலயத்தின் அருகிலேயே அழகிய புனித லூர்து அன்னை கெபி கட்டப்பட்டு அர்ச்சிக்கப் பட்டது.

பங்கில் உள்ள பக்தசபைகள் :
1. பங்குக்குழு
2. மரியாயின் சேனை
3. பீடச்சிறுவர்கள் இயக்கம்
4. இளையோர் இயக்கம்
5. பாலர்சபை
6. திருவழிபாட்டு பணிக்குழு.

பங்கில் உள்ள கல்விக்கூடம் :
புனித சவேரியார் தொடக்கப்பள்ளி.

பங்கில் உள்ள இல்லங்கள் :
1. பங்குத்தந்தை இல்லம்
2. அப்போஸ்தலிக்க கார்மேல் கன்னியர்கள் (CSSD) இல்லம்

பங்கில் பணியாற்றிய அருட்தந்தையர்கள்:
1. அருட்பணி. உர்மாண்ட்
2. அருட்பணி. ஆரோக்கியநாதர்
3. அருட்பணி. அந்தோணி களத்தில்
4. அருட்பணி. ரபேல்
5. அருட்பணி. P. T. ஜோசப்
6. அருட்பணி. மத்தேயு கடவில்
7. அருட்பணி. P. T. ஜோசப்
8. அருட்பணி. M. S. மார்டின் (1975)
9. அருட்பணி. M. அந்தோணிசாமி (1976-1980)
10. அருட்பணி. S. அந்தோணிசாமி (1980-1982)
11. அருட்பணி. R. இருதயராஜ் (1982-1983)
12. அருட்பணி. மரிய பிரான்சிஸ் (1983-1987)
13. அருட்பணி. லூக்காஸ் தும்மா (1987-1990)
14. அருட்பணி. மத்தியாஸ் (1990-1991)
15. அருட்பணி. அருள்சாமி (1991-1992)
16. அருட்பணி. யேசுதாஸ் (1992-1995)
17. அருட்பணி. D. A. பிரான்சிஸ் (1995-1999)
18. அருட்பணி. ஜான் அல்போன்ஸ் (1999-2002)
19. அருட்பணி. இராஜமாணிக்கம் (2002-2007)
20. அருட்பணி. கிளமெண்ட் ராஜ் (2007-2011)
21. அருட்பணி. த. ஜான் கென்னடி (2011-2013)
22. அருட்பணி. மரிய ஜோசப் ராஜ் (2013-2015)
23. அருட்பணி. மரியான் ஆஸ்டி (2015-2018)
24. அருட்பணி. அருள் பிரான்சிஸ் சேவியர் (2018 முதல் தற்போது வரை...)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்பணி. அருள் பிரான்சிஸ் சேவியர்.