31 இயேசுவின் திரு இருதய ஆலயம், பாலப்பள்ளி


இயேசுவின் திரு இருதய ஆலயம்.

இடம் : பாலப்பள்ளி (மணலி அருகில்)

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை.

நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனித அந்தோணியார் ஆலயம், மணலி.

குடும்பங்கள் : 160
அன்பியங்கள் : 7

ஞாயிறு திருப்பலி : காலை 08.00 மணிக்கு

பங்குத்தந்தை : அருட்பணி N. மார்ட்டின்

திருவிழா : செப்டம்பர் மாதம் கடைசி வாரத்தில் பத்து நாட்கள்.

வரலாறு :

இயற்கை எழில் சூழ்ந்த பாலப்பள்ளி கிராம மக்கள் வெகு தூரத்தில் உள்ள ஆலயங்களுக்கு திருப்பலியில் பங்கேற்க சென்று வந்து கொண்டிருந்தனர். ஆகவே பாலப்பள்ளி ஊர் பெரியவர்களின் முயற்சியால் 30.04.1974 அன்று சிற்றாலயம் கட்டப்பட்டு அர்ச்சிக்கப் பட்டது. ICM சபை அருட்சகோதரிகள் முழு ஈடுபாட்டுடன் இறைப்பணி செய்து வந்தனர். இதனால் பலர் திருமுழுக்குப் பெற்று கிறிஸ்துவில் இணைந்தனர். 

04.06.2002 அன்று மணலி தூய அந்தோனியார் ஆலயம் தனிப் பங்காக உயர்த்தப் பட்ட போது, பாலப்பள்ளி மணலியின் கிளைப் பங்காக ஆனது. 

01.10.2004 அன்று புதிய ஆலயத்திற்கு அருட்பணி. அருள் தேவதாசன் அவர்களால் அடிக்கல் போடப்பட்டு மக்களின் ஒத்துழைப்புடன் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று அர்ச்சிக்கப் பட்டது.