251 புனித பாத்திமா அன்னை ஆலயம், பாத்திமாபுரம்


புனித பாத்திமா அன்னை ஆலயம்

இடம் : பாத்திமாபுரம், கொல்லங்கோடு அஞ்சல்

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை

நிலை : பங்குதளம்
கிளை : புனித பவுல் ஆலயம், காக்கவிளை.

பங்குத்தந்தை : அருட்பணி. ஷைன்

குடும்பங்கள் : 205
அன்பியங்கள் : 8

ஞாயிறு திருப்பலி : காலை 08.15 மணிக்கு

நாள்தோறும் திருப்பலி : காலை 06.15 மணிக்கு

புதன்கிழமை மாலை 07.00 மணிக்கு நவநாள் திருப்பலி

திருவிழா : மே மாதத்தின் இரண்டாவது வாரத்தில் ஏழு நாட்கள்.

மண்ணின் இறையழைத்தல் :
அருட்பணி. ஷிஜின்.

வரலாறு :

பாமர மக்கள் நிறைந்து, ஏழ்மை, அறியாமையில் ஏங்கித் தவித்த குறவன் பழஞ்சி என்று அழைக்கப்பட்ட ஊரில், 1947 -ஆம் ஆண்டு அருட்பணி பிரான்சிஸ் போர்ஜியோ பீட்டர் அவர்களது பெருமுயற்சியால், புனித அன்னாள் சபை அருட்சகோதரிகளால் மறைக்கல்வி கற்பிக்கப்பட்டது.

1950 -ஆம் ஆண்டு ஆயர் மேதகு ஆஞ்ஞிசுவாமி ஆண்டகை அவர்களால் 180 பேர் திருமுழுக்குப் பெற்று சிலுவைபுரத்தின் கிளைப்பங்காக பாத்திமாபுரம் உருவெடுத்தது.

திருமுழுக்கு பெற்றவர்கள் இறைவனை வழிபட 1951- ஆம் ஆண்டு மண் சுவரும் ஓலை கூரையுமான ஆலயம் எழுப்பப்பட்டது. 1955 -ஆம் ஆண்டு கருங்கல் சுவர் கொண்ட ஆலயம் எழுப்பப்பட்டது.

1984 -ல் அருட்பணிப்பேரவை தோற்றுவிக்கப்பட்டது.

1984 ல் அழகிய கொடிமரம் வைக்கப்பட்டது.

1992 - ல் கிராம முன்னேற்ற சங்கம் துவக்கப்பட்டது.

1994 -ல் 5 அன்பியங்கள்.

1999 -ல் பாலர்சபை, சிறார் இயக்கம், YCS துவக்கப்பட்டது.

2000 -ல் அடித்தள முழு வளர்ச்சி சங்கம் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

தற்போதைய புதிய ஆலயமானது 15-08-2007 அன்று திருவனந்தபுரம் உயர் மறை மாவட்ட ஆயர் மேதகு சூசை பாக்கியம் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

2007 - ல் ஆண்கள் இளைஞர் இயக்கம் துவக்கப்பட்டது.

2011 -ல் பெண்கள் இயக்கம் துவக்கப்பட்டது.

2012 - ல் பங்குத்தந்தை இல்லம் கட்டி முடிக்கப்பட்டது.

11-02-2012 அன்று புனித லூர்து அன்னை திருநாளன்று கோட்டார் மறை மாவட்ட ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களின் ஆசியோடும், இசைவோடும் பாத்திமாபுரம் தனிப்பங்கானது.

மக்களின் ஈடுபாடும் எண்ணிக்கையும் அதிகரிக்க 8 அன்பியங்களாக உயர்த்தப்பட்டது.

மரியாயின் சேனை தொழிலாளர் பணிக்குழு அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

கத்தோலிக்க சங்கம், வின்சென்ட் தே பவுல் சபை, கத்தோலிக்க சேவா சங்கம் ஆகியவையும் சிறப்பாக செயல்படுகிறது.

தற்போது பங்குத்தந்தை அருட்தந்தை ஷைன் அவர்கள் இப்பங்கின் வளர்ச்சிக்கு பல்வேறு செயல் திட்டங்களை மக்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக செய்து, பாத்திமாபுரம் தலத்திருச்சபையை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து செல்கிறார்கள்.

வழித்தடம் :

தமிழக கேரள எல்லைப்பகுதியான ஊரம்பில் இருந்து கோவளம் விழிஞ்ஞம் செல்லும் சாலையில் பின்குளம் என்ற இடத்திலிருந்து 1கி.மீ. தொலைவில் உள்ளது.