444 புனித மிக்கேல் அதிதூதர் தேவாலயம், இறச்சகுளம்


புனித மிக்கேல் அதிதூதர் மலங்கரை கத்தோலிக்க தேவாலயம்

இடம் : இறச்சகுளம்

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : மார்த்தாண்டம்
மறை வட்டம் : நாகர்கோவில்

நிலை : கிளைப்பங்கு
பங்கு : புனித அந்தோணியார் மலங்கரை கத்தோலிக்க தேவாலயம், கிறிஸ்துவிளாகம், நாகர்கோவில் 1.

பங்குத்தந்தை : அருட்பணி. S. இராபர்ட்

குடும்பங்கள் : 20

ஞாயிறு காலை 11.30 மணிக்கு காலை ஜெபம் தொடர்ந்து திருப்பலி.

புதன் மாலை 07.00 மணிக்கு மாலை ஜெபம், திருப்பலி.

தனிச்சிறப்பு : வருடந்தோறும் மேதகு ஆயர் தலைமையில் குருத்து ஞாயிறுக்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் சிலுவைப்பாதை நடைபெறும். இந்த புனித நிகழ்வில் மார்த்தாண்டம் மறை மாவட்டத்தைச் சேர்ந்த திரளான இறை மக்கள் மற்றும் பல பகுதிகளிலும் உள்ள இறை மக்கள் பங்கேற்று சிறப்பு செய்வார்கள்.

திருவிழா : செப்டம்பர் மாதம் இறுதி வாரத்தில் மூன்று நாட்கள்.

வழித்தடம் : நாகர்கோவில் -இறச்சகுளம் சன் கல்லூரி சாலையில் சற்று உட்புறமாக இவ்வாலயம் அமைந்துள்ளது.

வரலாறு :

இறச்சகுளம் பகுதியில் 17.06.1974 அன்று புனித மிக்கேல் அதிதூதரை பாதுகாவலராகக் கொண்டு சிறு ஆலயம் கட்டப்பட்டது.

அருட்தந்தை. அர்னால்டு டயஸ் அவர்களின் பணிக்காலத்தில் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு 17.07.2003 அன்று மார்த்தாண்டம் மறை மாவட்ட ஆயர் மேதகு வின்சென்ட் மார் பவுலோஸ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

இயேசுவின் சிலுவைப் பாடுகளின் 14 நிலைகளும் அழகுற அமைக்கப்பட்டுள்ளன.

தற்போது கிறிஸ்துவிளாகம் பங்கின் கிளைப் பங்காக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்பணி. இராபர்ட்.