609 புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலயம், ஜமீன் இளம்பள்ளி

  

புனித பிரான்சிஸ் அசிசியார் ஆலயம் 

இடம் : ஜமீன் இளம்பள்ளி

மாவட்டம் : நாமக்கல் 

மறைமாவட்டம் : சேலம் 

மறைவட்டம் : திருச்செங்கோடு

நிலை : கிளைப்பங்கு 

பங்கு : புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், சோழசிராமணி

பங்குத்தந்தை : அருட்பணி. K. பிரசன்னா 

குடும்பங்கள் : 12

சனிக்கிழமை மாலை 06.30 மணிக்கு திருப்பலி 

திருவிழா : மே மாதத்தில் 

வழித்தடம் : சோழசிராமணியிலிருந்து ஜேடர்பாளையம் செல்லும் வழியில் 3கிமீ தொலைவில் ஜமீன் இளம்பள்ளி அமைந்துள்ளது. 

location map : Zamin Elampalli

Tamil Nadu 637213

https://maps.app.goo.gl/vydBBCaCuUCJT3kb8

வரலாறு :

நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு -ஜேடர்பாளையம் சாலையில் ஜமீன் இளம்பள்ளி எனும் அழகிய கிராமம் அமைந்துள்ளது. 

அருட்தந்தை. மரியோ ரொடீசினி அவர்கள் பெருங்குறிச்சியின் பங்குத்தந்தையாக இருந்த போது, ஜமீன் இளம்பள்ளியில் புனித பிரான்சிஸ் அசிசியாரை பாதுகாவலராகக் கொண்டு புதிய ஆலயம் கட்டப்பட்டு, 05.01.2003 அன்று சேலம் மறைமாவட்ட ஆயர் மேதகு செ. சிங்கராயன் அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது. 

தொடக்க காலத்தில் பெருங்குறிச்சியின் கிளைப்பங்காக செயல்பட்டு வந்த ஜமீன்இளம்பள்ளி ஆலயமானது, 2005 ஆம் ஆண்டில் சோழசிராமணி தனிப்பங்ககாக ஆனது முதல் அதன் கிளைப் பங்காக மாற்றப்பட்டது.

தகவல்கள் : பங்குத்தந்தை அருள்பணி. K. பிரசன்னா.