111 புனித அல்லேசியார் ஆலயம், கொட்டில்பாடு

             

புனித அல்லேசியார் ஆலயம்

இடம்: கொட்டில்பாடு

மாவட்டம்: கன்னியாகுமரி

மறைமாவட்டம்: கோட்டார்

மறைவட்டம்: குளச்சல்

நிலை: பங்குத்தளம்

பங்குத்தந்தை அருட்பணி. C. ராஜ்

குடும்பங்கள்: 906

அன்பியங்கள்: 24

வழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி காலை 07:00 மணி

வாரநாட்களில் திருப்பலி காலை 06:30 மணி

செவ்வாய் மாலை 05:30 மணி புனித அந்தோனியார் நவநாள் திருப்பலி

ஒவ்வொரு மாதமும் 17-ம் தேதி காலை 11:00 மணி புனித அல்லேசியார் நவநாள்

திருவிழா: ஜூலை மாதம் 17 -ம் தேதியை மையமாகக் கொண்டு பத்து நாட்கள் நடைபெறும்.

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. Fr. சகாய ராஜ்

2. Fr. பஸ்காலிஸ்

3. Fr. பாபு ஜான் (Late)

4. Fr. ராபர்ட் கென்னடி

5. Fr. அமலதாஸ்

6. Fr. யேசுதாஸ்

7. Fr. ஆன்றோ பேசில்

8. Fr. கிளீட்டஸ்

9. Fr. எட்மண்ட்

10. Fr. செயில் சிங்

11. Fr. அயண்டஸ்

12. Fr. தாம்சன்

13. Fr. கிங்ஸ்லி சாஜூ

14. Fr. சஜூன்

15. Fr. ரெக்வின்

16. Fr. பனியடிமை

17. Fr. சாஜன் மோன்

18. Fr. சகாய ஜாக்சன்

19. Bro. லீபன்

20. Bro. சின்றோ

1. Sr. மேரி சுபா. A

2. Sr. மேரி சுபா. D

3. Sr. ஆன்றோ சுஜி

4. Sr. ஆன்றோ மேரி பிரபா (Sr.ஸ்நேகா)

5. Sr. ரமணி

6. Sr. சரோஜா மேரி

7. Sr. ஷீபா நிம்மி (Sr. ஷீனா)

8. Sr. குயின் பிளவர்

9. Sr. ஜூடிட் சுதா

வழித்தடம்: நாகர்கோவில் -குளச்சல் மேற்கு கடற்கரைச் சாலையில், கொட்டில்பாடு அமைந்துள்ளது.

மார்த்தாண்டம் -குளச்சல் -மண்டைக்காடு வழித்தடத்தில், கொட்டில்பாடு அமைந்துள்ளது.

Location map: https://g.co/kgs/jNaqL8d

பங்கின் வரலாறு:

பெயர்க் காரணம்:

குளச்சல் கடற்கரை மக்கள் கரமடி தொழில் செய்வதற்காக, ஊரின் கிழக்குப் பகுதியில் வெட்டுமடையின் கடற்கரை பகுதியில் கொட்டில்சூரை படுகின்ற இடத்தில் குடியேறி வாழ்ந்தனர். அந்த இடம் 'கொட்டில்சூரை பாடு' என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் அந்த பெயர் மருவி "கொட்டில்பாடு" என்று பெயர் மாற்றம் பெற்று, அதுவே ஊரின் பெயராக விளங்குகிறது .

புனித அல்லேசியாரின் பாதுகாவலில் வாழும் கொட்டில்பாடு பங்கு, 1933 ஆம் ஆண்டு வரை குளச்சல் பங்கின் கிளைப் பங்காகச் செயல்பட்டு வந்தது. பின்னர் புதூர், கொட்டில்பாடு, பெரியவிளை ஆகிய கிராமங்கள், குளச்சல் பங்கிலிருந்து பிரிக்கப்பட்டு, புதூர் பங்கின் கிளைப்பங்காக செயல்பட்டு வந்தது. 06-02-1965 -இல் மீண்டும் கொட்டில்பாடு பங்கானது, குளச்சல் பங்குடன் இணைக்கப்பட்டது. 

21-05-1970 அன்று கொட்டில்பாடு தனிப்பங்காக உயர்த்தப்பட்டது. அருட்தந்தை யூஜின் குழந்தை அவர்கள் முதல் பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டார்கள்.

சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பே இங்கு பாதுகாவலர் புனித அல்லேசியாருக்கு ஊரின் கிழக்குப் பகுதியில் முதல் ஆலயம் கட்டப்பட்டது. அதன் பின்னர் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் இரண்டாவது ஆலயம் கட்டப்பட்டு வழிபாடுகள் அதில் வழிபாடுகள் நடைபெற்று வந்தது. இந்த அருட்பணி. ஜோசப் ஆஞ்சலோ அவர்களால் ஆலயமானது 07-01-1990 -இல் புதுப்பிக்கப்பட்டது. 2004 ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் ஆலயம் பழுதுபட்ட நிலையில் புதிய ஆலயம் கட்ட வேண்டும் என்ற எண்ணம் உருவாகி, புதிய ஆலயம் கட்டப்பட்டு அர்ச்சிக்கப்பட்ட பின்னர் 14-07-2023 அன்று முதல் இந்த பழைய ஆலயத்தில் வழிபாடுகள் நிறுத்தப்பட்டது. ‌

26-12-2004 அன்று ஏற்பட்ட சுனாமியால் 199 உயிர்களையும், வீடுகளையும், உடைமைகளையும் இழந்து பெரும் பாதிப்புக்கு உள்ளானது கொட்டில்பாடு கிராமம். சுனாமியில் ஆலயமும் பழுதுபட்டதால் புதிய ஆலயம் கட்டவேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் உருவானது.

புதிய ஆலயம்:

2006-2009 காலகட்டத்தில் அருட்தந்தை. சேவியர் ராஜ் சேம் பணிக்காலத்தில், தற்போதைய புதிய ஆலயம் கட்டப்பட்டுள்ள இடத்திற்கான நிலத்தை, "Medical Mission Sisters, Kottayam" வாங்கிக் கொடுத்தனர்.

புதிய ஆலயம் நோக்கிய மக்களின் நீண்டகால கனவை நனவாக்கும் வகையில், அருட்தந்தை பெலிக்ஸ் அலெக்சாண்டர் அவர்கள் பங்குத்தந்தையாக பணிசெய்த காலத்தில், ஆலய கட்டுமானக்குழு, நிதி திரட்டும்குழு உருவாக்கப்பட்டு, 28-12-2014 அன்று புதிய ஆலயத்திற்கான அடிக்கல் குளச்சல் மறைவட்ட முதன்மை பணியாளர் அருட்தந்தை உபால்டு அவர்களால் போடப்பட்டது. பின்னர் 16-07-2015 அன்று கோட்டாறு மறைமாவட்ட ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியூஸ் அவர்கள் தலைமையில் அடிக்கல் போடப்பட்டு, கட்டுமானப் பணியின் துவக்கவிழாவும் நடைபெற்றது. பணிகள் நடைபெறும் போது பல இடர்பாடுகள் ஏற்பட்டு ஆலய கட்டுமானப் பணியானது நிறுத்தப்பட்டது. 

அதன்பின் பங்கின் பங்குத்தந்தையாக பொறுப்பேற்ற அருட்தந்தை சகாய செல்வம் அவர்களின் முயற்சியால், மீண்டும் ஆலய கட்டுமானப் பணிகள் நடைபெற்றன. அதனை தொடர்ந்து பணிப்பொறுப்பேற்ற அருட்தந்தை சி. ராஜ் அவர்கள் பங்கு மக்கள் அனைவருடன்  இணைந்து திட்டமிட்டு, எல்லா மக்களையும் ஒருங்கிணைத்து, சில கடற்கரை ஊர்களுக்கும் பங்கு மக்களுடன் சென்று நன்கொடை பிரித்தும், பல வழிகளில் பங்கு மக்களிடமிருந்து நன்கொடை பிரித்தும் ஆலயத்தை மிக நேர்த்தியாக கட்டி முடித்து 14-07-2023, வெள்ளிக்கிழமை அன்று, கோட்டாறு மறைமாவட்ட ஆயர் மேதகு நசரேன் சூசை அவர்களால், புனித அல்லேசியார் ஆலயம் அர்ச்சித்து புனிதப்படும் நிகழ்வு நடைபெற்றது. புதிய ஆலயம், புத்தெழுச்சி பெற்ற கொட்டில்பாடு பங்குச் சமூகத்தை உருவாக்கும் என்ற நம்பிக்கையுடன் பங்கு சீரியநடை போட்டு வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகின்றது.

பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:

1. மரியாயின் சேனை

2. கிறிஸ்தவ வாழ்வு சமூகம்

3. புனித வின்சென்ட் தே பவுல்

4. கத்தோலிக்க சேவா சங்கம்

5. நற்செய்தி பணிக்குழு

6. பெண்கள் பணிக்குழு

7. கோல்பிங் இயக்கம்

8. திருவழிபாட்டுக் குழு

9. மறைக்கல்வி மன்றம்

10. பாடகர் குழு

11. பீடச் சிறார்

12. பாலர் சபை

13. சிறுவழி இயக்கம்

14. Y.C.S.

15. புனித வின்சென்ட் தே பவுல் (ஆ)

16. கத்தோலிக்க சேவா சங்கம் (ஆ)

17. பிரான்சிஸ்கன் 3-ஆம் சபை (ஆ)

18. தோழமை சங்கம்

19. சாந்திதான் இயக்கம்

பங்கின் குருசடிகள்:

1. புனித அந்தோனியார் குருசடி

2. புனித மிக்கேல் அதிதூதர் குருசடி 

பங்கின் பள்ளிக்கூடம்:

புனித அலெக்ஸ் நடுநிலைப் பள்ளி

துறவறம் இல்லம்:

கொத்தலங்கோ சபை அருட்சகோதரிகள்

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:

1. அருட்பணி. யூஜின் குழந்தை

2. அருட்பணி. ஜாண் A.P 

3. அருட்பணி. ஹெர்மன் ஜில்ட் 

4. அருட்பணி. வெனான்சியூஸ்

5. அருட்பணி. சூசையா

6. அருட்பணி. நார்பர்ட் அலெக்ஸ்சாண்டர்

7. அருட்பணி. ஜெரோம் பெர்னான்டோ

8. அருட்பணி. கிளீற்றஸ்

9. அருட்பணி. ஜோசப் பெனடிக்ட்

10. அருட்பணி. ஜாண் குழந்தை

11. அருடபணி. தார்சியூஸ் ராஜ்

12. அருட்பணி. ஜோசப் ஆஞ்சலோ

13. அருட்பணி. குணபால் ஆராய்ச்சி

14. அருட்பணி. சேவியர் ராஜா

15. அருட்பணி. ஜார்ஜ் வின்சென்ட்

16. அருட்பணி. ஜெய குமார்

17. அருட்பணி. ஒனாரியூஸ்

18. அருட்பணி. கார்மல்

19. அருட்பணி. டென்சிங்

20. அருட்பணி. சேவியர் லாரன்ஸ்

21. அருட்பணி. சேவியர் ராஜ் சேம்

22. அருட்பணி. ஜாண் ராபின்சன்

23. அருட்பணி. சார்லஸ் பொரோமியோ

24. அருட்பணி. பெலிக்ஸ் அலெக்ஸ்சாண்டர்

25. அருட்பணி. சகாய செல்வம்

26. அருட்பணி.‌ C. ராஜ்

தகவல்கள்: பங்குதந்தை அருட்பணி.‌ C. ராஜ் அவர்கள்.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் சேகரிப்பில் உதவி: ஜெய்ஸ் ஸ்டீபன் & ஜோன் லெனின் மற்றும் கத்தோலிக்க சேவா சங்க உறுப்பினர்கள், கொட்டில் பாடு.