955 புனித அந்தோனியார் பசிலிக்கா, டோர்னஹள்ளி

                

புனித அந்தோனியார் பேராலயம் (பசிலிக்கா) 

இடம்: டோர்னஹள்ளி

மாநிலம்: கர்நாடகா

மாவட்டம்: கே.ஆர் நகர்

மறைமாவட்டம்: மைசூர்

மறைவட்டம்: டோர்னஹள்ளி

நிலை: பசிலிக்கா

கிளைப்பங்கு: உறங்கும் புனித சூசையப்பர் ஆலயம், தொட்டகொப்லு

குடும்பங்கள்: 70

பேராலய அதிபர் பேரருட்பணி.‌ N. T. ஜோசப்

நிர்வாகத் தந்தை அருட்பணி. பிரவீன்

துணை அதிபர் அருட்பணி.‌ ஜூலியன், HGN

தொடர்புக்கு: +91 91768 16271

திருவழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி காலை 06:30 மணி (கன்னடம்)

காலை 07:30 மணி (ஆங்கிலம்)

காலை 11:00 மணி (கன்னடம்)

நாள்தோறும் திருப்பலி காலை 06:30 மணி (கன்னடம்)

செவ்வாய் திருப்பலி காலை 06:30 மணி (கன்னடம்), காலை 07:30 மணி (ஆங்கிலம்) காலை 11:00 மணி (கன்னடம்)

மாதத்தின் முதல் செவ்வாய் காலை 09:00 மணி முதல் மதியம் 01:00 மணிவரை நற்கருணை ஆராதனை, நோயிற்பூசுதல், திருப்பலி, நற்செய்தி

ஞாயிறு & செவ்வாய் மாலை 06:00 மணி ஜெபமாலை, நற்கருணை ஆராதனை

குறைந்தது 20 நபர்களுக்கு மேலாக வருகிற திருப்பயணிகள் குழுவிற்கு எந்த மொழியானாலும் திருப்பலிக்கு அனுமதி வழங்கப்படும். (வழக்கமான திருப்பலி நேரங்களைத் தவிர்த்து)

திருவிழா: ஜூன் மாதம் 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்து 13-ஆம் தேதி திருவிழா.

வழித்தடம்:

இரயில் & பேருந்து: மைசூர் -டோர்னஹள்ளி

Location map: St. Anthony's Basilica, Dornahalli Church

https://maps.app.goo.gl/zb8RsndDWBQfEDCM6

வரலாறு:

புனித அந்தோனியார் பசிலிக்காவானது மைசூர் அரிசிக்கரை ரெயில் நிலையத்திலிருந்து, 2 கி.மீ தொலைவிலும், மைசூரிலிருந்து 33 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. 

டோர்னஹள்ளி கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அடங்கிய சிற்றூர் ஆகும். இங்குப் புதுமையான புனித அந்தோனியார் சுரூபத்தை பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து வணங்கி, தரிசித்துப் பல புதுமைகளைப் பெற்றுச் செல்கின்றார்கள்.

புனித அந்தோனியார் அற்புத சுரூபம்:

புனித அந்தோணியாரின் அற்புதச் சுரூபம் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் கண்டெடுக்கப்பட்டது. இந்துச் சமயத்தைச் சார்ந்த ஒரு விவசாயி தன் கேழ்வரகுக் கொல்லையை உழுது கொண்டிருந்த போது, அவரது கலப்பையில் ஒரு மரச்சுரூபம் தென்பட்டது. அதைக் கவனிக்காமல் மீண்டும் உழுதுவரும் போது, சுரூபம் அடிப்பட்டு அதன் கைக் கால்களை உடைந்த நிலையில் கிடந்ததைக் கண்டு, அது ஒரு மரப்பொம்மை தான் என்று நினைத்துத் தன் பிள்ளைகளுக்கு விளையாடக் கொடுத்தார்.

விவசாயி கண்டக் காட்சியும், கட்டளையும்:

ஓர் இரவு அந்த விவசாயி உறங்கும்போது கனவு கண்டார். கனவில் வயலில் கண்டு எடுத்த சுரூபம் போன்று காவி உடையணிந்தத் துறவி "நண்பா நீ கண்டெடுத்தது சாதாரணப் பொம்மையல்ல. மாறாக உலகெங்கும் புகழ்ந்து கொண்டாடும் புனித அந்தோணியார் சுரூபம் தான் இது. சுரூபம் கண்டெடுத்த இடத்தில் ஒரு சிற்றாலயம் அமைக்குமாறு" விவசாயின் கனவில் புனிதர் கூறினார். "எனக்கு ஆலயம் கட்டினால் உனது குடும்பத்தை ஆசீர்வதிப்பேன்" என்றும் கூறி மறைந்தார்.

ஆனால் விவசாயி புனிதரின் வார்த்தைக்குச் செவிசாய்க்கவில்லை. குழந்தைகள் விளையாட்டுப் பொம்மை என்று விளையாடி அசிங்கப்படுத்தி விட்டார்கள். ஆனால் சில வாரங்களுக்குள் அந்த விவசாயின் மாடுகளும், இரண்டு குழந்தைகளும் இறந்துப் போயினர்.

உடனே அவன் மனம் கலங்கியது. தன் கனவில் வந்த துறவி சொன்னது போலவே செய்ய முன்வந்தான். அப்போது கத்தோலிக்கக் குருவானவர் ஒருவர் பாண்டிச்சேரியிலிருந்து மைசூருக்கு வந்தார். உடனே இந்த விவசாயி குருவானவரைத் தேடிச் சென்று டோர்னஹள்ளி கதையைச் சொன்னான். அந்த மரச்சுரூபத்தைக் குருவானவரிடம் கொடுத்தான். குருவானவரும் இது பதுவை அந்தோணியார் சுரூபமென்று அறிந்து கொண்டார். உழவனிடம் அந்தோணியார் சொன்னபடியே உனது வயலில் சிற்றாலயம் கட்டும்படியும், நானும் உடனிருந்து உதவிச்செய்கிறேன் என்று அந்தக் குருவானவர் கூறினார்.

சிற்றாலயம் எழுந்தேற்றம்:

விவசாயி புனித அந்தோணியார் சொன்னபடியே சிறு கோவில் கட்டி முடித்தான். குறிப்பிட்டநாளில் கோவில் திருப்பொழிவுச் செய்யப்பட்டு மக்கள் ஆலயம் நோக்கி வரலாயினர். புதுமைகள் கோடிப் புரிந்து அதன் மூலம் அங்குள்ள பாமரமக்களுக்கு, இயேசு கிறிஸ்துவின் வல்லமை இப்புனிதர் வழியாக எல்லா இடங்களுக்கும் காட்டுத்தீ போல் பரவியது. நாளடைவில் மக்கள் கூட்டம் புனிதரை நாடி வரவே அந்த ஊர் ஒரு சிற்றூராகிக் கத்தேலிக்கக் கிறிஸ்துவர்கள் வசிக்கும் ஊராகியது.

நாட்கள் செல்லச் செல்லப் பழைய ஆலயம் மிகச் சிறியதாக இருக்கின்றக் காரணத்தாலும், பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததாலும் பெரியதோர் கோவில் 1920ஆம் ஆண்டு, காலஞ்சென்ற திவான் திரு. தர்மராஜ் அவர்களால் அழகிய தேவாலயம் கட்டப் பண உதவி அளிக்கப்பட்டது. அந்தச் சமயம் பங்கு குருவாக இருந்த அருட்தந்தை டிசில்வா அவர்களின் முயற்சியால் ஆலயம் கட்டிமுடிக்கப்பட்டது. அதே வேளையில் வசதிகுறைவின் காரணமாகத் திருப்பயணிகள் டோர்னஹள்ளி வர இயலாமை இருந்தது. இப்போது இந்தத் திருத்தலத்திற்கு அருகில் இரயில் நிலையம் மைசூர் அரிசிக்கரையில் அமைக்கப்பட்டது. கிருஷ்ணராஜ்நகர் - மைசூர் இரயில்பாதையில் அரிசிக்கரை உள்ளது. மைசூரிலிருந்து டோர்னஹள்ளிக்குப் பேருந்து வசதிகள் உள்ளன.

மேலும் பேரருட்தந்தை மி.பி. லோபோ அவர்கள் காலத்தில் புதிய ஆலயம் கட்ட மைசூர் ஆயர் அவர்கள், 1964 ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதி அடிக்கல் நாட்டினார். 13.06.1969ல அன்று ஆயர் மேதகு மத்தியாஸ் பெர்னான்டஸ் அவர்களால் ஆலயம் திருநிலைபடுத்தப்பட்டது.

இந்தச் சுரூபம் இன்றும் பல அற்புதங்களையும், புதுமைகளையும் நாடி வரும் பக்தர்களுக்கு இயேசுவின் நற்செய்திபணியை ஆற்றிக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது.

பேராலயம் (பசிலிக்கா):

அக்டோபர் 17, 2019 அன்று, எல்லாம் வல்ல இறைவனின் ஆசீர்வாதத்தால், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் டோர்னஹள்ளி புனித அந்தோனியார் ஆலயத்திற்கு "மைனர் பசிலிக்கா" அந்தஸ்து வழங்கப்பட்டது. இது அனைத்து இறைமக்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாக அமைந்திருந்தது. ஜூன் 9, 2020 அன்று, மைசூர் ஆயர் டாக்டர் கே. ஏ. வில்லியம் அவர்கள் மைனர் பசிலிக்காவை அதிகாரப்பூர்வமாக அறிவித்து நன்றியுரை வழங்கினார்.

கெபிகள்:

மூலக்குடில்

மாதா கெபி

புனித அந்தோனியார் கெபி

வசதிகள்:

திருப்பயணிகள் தங்குவதற்கு தேவையான அறை வசதிகள் கழிப்பறை வசதிகள் உள்ளன.

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:

1. REV. FR. L.H. LOBO (1944-1974)

2. REV. FR. FELIX TAURO (1974-1977)

3. REV. FR. THOMAS THADIKKAL (1977-1985)

4. REV. FR. L. SANTIAGO (1985-1996)

5. REV. FR. C. RAYAPPA (1996-2002)

6. REV. FR. M. ANTHAPPA (2002-2004)

7. REV. FR. T PAULUS (2001-2010)

8. REV. FR. GILBERT D’SILVA (2010-2016)

9. REV. FR. R. AROGYA SWAMY (2016-2019)

10. REV. FR. N.T. JOSEPH (2019..)

கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் வயல்வெளிகள் மற்றும் விவசாய நிலங்கள் கொண்ட டோர்னஹள்ளி புனித அந்தோனியார் பசிலிக்காவானது, பல புதுமைகள் நிறைந்த அற்புத ஆலயமாகும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான இறைமக்கள் நாள்தோறும் இவ்வாலயத்தை நோக்கி வந்து கொண்டேயிருக்கின்றனர். நீங்களும் வந்து பாருங்கள் கோடி அற்புதரின் புதுமைகளை கண்டுணருங்கள்.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பசிலிக்காவின் துணை அதிபர் அருள்தந்தை ஜூலியன், HGN அவர்கள்.