701 புனித மரியாயின் மாசற்ற திருஇருதய ஆலயம், சாத்தான்குளம்

      

புனித மரியாயின் மாசற்ற திருஇருதய ஆலயம்

(இருதய அன்னை ஆலயம்)

இடம்: சாத்தான்குளம்

மாவட்டம்: தூத்துக்குடி

மறைமாவட்டம்: தூத்துக்குடி

மறைவட்டம்: சாத்தான்குளம்

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்குகள்:

1. புனித அந்தோனியார் ஆலயம், வடக்கு அமுதுண்ணாகுடி

2. புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயம், தெற்கு அமுதுண்ணாகுடி

பங்குத்தந்தை: அருட்பணி. R. ஜோசப் ரவிபாலன் (மறைவட்ட முதல்வர்)

தொடர்புக்கு: +91 94446 84799

உதவிப் பங்குத்தந்தை: அருட்பணி. பால் ரோமன்

குடும்பங்கள்: 450

அன்பியங்கள்: 12

ஞாயிறு திருப்பலி காலை 07:30 மணி

வாரநாட்களில் திருப்பலி காலை 06:00 மணி

லூர்து மாதா கெபியில்

சனிக்கிழமை மாலை 07:00 மணிக்கு திருப்பலி 

மாதத்தின் முதல் சனிக்கிழமை மாலையில் ஜெபமாலை தேர்பவனி, திருப்பலி

திருவிழா: செப்டம்பர் மாதம் 08-ம் தேதியை உள்ளடக்கிய பத்து நாட்கள்

மண்ணின் இறையழைத்தல்கள்:

அருட்பணி. ஜோசப் ரவிபாலன்

அருட்பணி. மெரிஸ் லியோ

மற்றும் 20-க்கும் மேற்பட்ட அருட்சகோதரிகள்

வழித்தடம்:

நாகர்கோவில் -வள்ளியூர் -திசையன்விளை -சாத்தான்குளம்

திருநெல்வேலி -சாத்தான்குளம்

தூத்துக்குடி -சாத்தான்குளம்

Location map: https://g.co/kgs/DSTW52

வரலாறு:

சாத்தான்குளம் வேதபோதக தளத்தின் வரலாறு, இரு வேதபோதக தளங்களைச் சார்ந்து வளர்ந்துள்ளது. 

1. சோமநாதபேரி, பேய்க்குளம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட வடமேற்குப் பகுதி. இங்கு வாழ்ந்தவர்கள் முன்னதாகவே மனந்திரும்பிய பழைய கிறிஸ்தவர்கள்.

2. சாத்தான்குளத்தை மையமாகக் கொண்ட தென்கிழக்குப் பகுதி. இங்கும் மனந்திரும்பிய கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வந்தனர்.

சாத்தான்குளம் வேதபோதக வரலாற்றின் வீரர் அருள்தந்தை. டைனீஷியஸ் குஷன், S.J (Dionysius Guchen, S.J) அவர்களே என்றால் மிகையல்ல. இவர் 1861 ஆம் ஆண்டு சாத்தான்குளத்தில் பணியாற்ற வந்தார். இரு சமூகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு, நாடார் சமுகத்தினர் மனந்திரும்பி கிறிஸ்தவம் தழுவ காரணமாக அமைந்தது.

1863 ஆம் ஆண்டு சாத்தான்குளம் பங்கில் 7600 கத்தோலிக்கர்கள் இருந்தனர்.

1882 ஆம் ஆண்டு சாத்தான்குளம் பங்கிலிருந்து பிரிந்து சொக்கன்குடியிருப்பு தனிப்பங்கானது.

1887 ஆம் ஆண்டு சாத்தான்குளத்திலிருந்து பிரிந்து, புதூர் -பிரகாசபுரம் தனிப்பங்கானது. இருப்பினும் சாத்தான்குளம் பங்கில் 3584 கத்தோலிக்கர்கள், 11 ஆலயங்கள், 7 சிற்றாலயங்களும், 80க்கும் அதிகமான இணை ஊர்களும் இருந்தன.

1909 ஆம் ஆண்டு பிரகாசபுரம் பங்கு மறுசீரமைக்கப்பட்ட போது, சாத்தான்குளம் பங்கிலிருந்து சில இணையூர்கள் (கிளைப்பங்கு) பிரகாசபுரம் பங்குடன் இணைக்கப்பட்டன.

அருள்தந்தையர்கள் கஸ்தானியர், லூயிஸ் வெர்டியர், கிரிகோரி, கசிமீர் சல்டானா சிறப்பாக டைனீஷியஸ் குஷன் ஆகியோர் சாத்தான்குளம் பங்கைச் சேர்ந்த அன்றைய இணையூர்களில் உள்ளவர்களை ஒருவர்பின் ஒருவராக, கிறிஸ்துவை அறியச் செய்து கிறிஸ்தவ மறையில் இணைத்தனர்.

இணை ஊர்களில் மக்கள் மனந்திரும்பி கிறிஸ்தவம் தழுவிய காலங்கள்:

ஆத்திகாடு (1846-1847(

முதலூர் (1846-1847)

அமுதுண்ணாக்குடி (1860)

வேப்பங்காடு (1860)

சாத்தான்குளம் (1860)

கல்விளை (1860)

ஆலங்கிணறு (1860)

ஆறுமுகநேரி (1860)

குலசேகரப்பட்டணம் (1860)

புதூர் (1879)

வெங்கடபுரம் (1881)

அம்பலச்சேரி (1862)

இலங்கநாதபுரம் (1878)

இடையன்விளை (1880)

சோனகன்விளை (1883)

சிறப்பூர் (1887)

சாத்தான்குளம் (2-வது முறை) (1887)

கடாட்சபுரம் (1881-1887)

1861 ஆம் ஆண்டு சாத்தான்குளம் தனிப்பங்காக உருவான போது அருள்தந்தை. டைனீஷியஸ் குஷன் அடிகள் முதல் பங்குத்தந்தையாக பணிப் பொறுப்பேற்றார். தொடர்ந்து அருள்தந்தை. நிக்கோலஸ் அடிகள் மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆலயத்தைக் கட்டினார். 

பங்கு ஆலயத்தின் அடித்தளம் 29.04.1888 அன்று அருள்தந்தை. பார்பியர் அடிகள் காலத்தில் போடப்பட்டது. 1896 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மேதகு ஆயர் பார்த் அவர்களால் ஆலயம் அர்ச்சிக்கப்பட்டது.

அருள்தந்தை. நிக்கோலஸ் அடிகள் குருக்கள் இல்லத்தையும் கட்டினார். தொடர்ந்து அருள்தந்தையர் து. அருளானந்தம், ஜெகநாதர், மார்சபெட் மூசிங், ரெய்மண்ட் எத்தியன், பிரான்சிஸ் சாபாத் ஆகியோர் தூத்துக்குடி மறைமாவட்டம் உருவாகும் முன்பு வரை சாத்தான்குளத்தில் பணிபுரிந்தனர்.

ஜூன் 12, 1923 அன்று திருச்சிராப்பள்ளி மறைமாவட்டத்தில் இருந்து பிரிந்து, தூத்துக்குடி புதிய மறைமாவட்டமாக உருவாக்கப்பட்ட போது, சாத்தான்குளம் பங்கு தூத்துக்குடி மறைமாவட்டத்தின் கீழ் வந்தது.

1936 ஆம் ஆண்டு சாத்தான்குளம் மறைவட்டமாக உருவாக்கப்பட்டு, முதல் மறைவட்ட முதல்வராக பேரருள்பணி. கு. அருள்சாமி அவர்கள் நியமிக்கப்பட்டார்.

1993-1994 காலகட்டத்தில் ஆலய முன்புற மண்டபம் கட்டப்பட்டது.

1995 ஆம் ஆண்டு சாத்தான்குளம் பங்கிலிருந்து பிரிக்கப்பட்டு, நொச்சிகுளம் தனிப்பங்காக உயர்த்தப் பட்டது. 

தற்போது பங்குத்தந்தை அருட்பணி. ஜோசப் ரவிபாலன் அவர்களின் முயற்சி மற்றும் பங்கு மக்களின் ஒத்துழைப்புடன் 19.02.2020 முதல் ஆலய புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, பணிகள் நிறைவு பெற்று 26.12.2022 அன்று மேதகு ஆயர் A. ஸ்டீபன் அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது. மேலும் ஆலய பலிபீடம் புதிதாக அழகுற கட்டப் பட்டது.

இதய நோய்களை குணமாக்கும் புனித மரியாயின் மாசற்ற இருதய ஆலயம்:

1. 2000-2005 வரை பங்குத்தந்தையாக இருந்த அருட்பணி. ஜோசப் அவர்களுக்கு மாதாவின் வல்லமையால் இதயநோய் நீங்கி சாட்சி கூறியுள்ளார்.

2. 2010-2015 வரை பங்குத்தந்தையாக பணியாற்றிய அருட்பணி. எட்வர்ட் அவர்களது இதயநோய் நீங்கி பூரணநலம் பெற்றதை சாட்சியாக கூறியுள்ளார்.

3. சென்னையில் வசிக்கும் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் புனித இதய அன்னையின் வல்லமையால் அற்புத சுகம் பெற்றுள்ளார்.

பங்கில் உள்ள சபைகள்/ இயக்கங்கள்:

1. மரியாயின் சேனை

2. திருக்குடும்ப சபை

3. அமலோற்பவ மாதா சபை

4. நற்கருணை வீரர் சபை

5. பாலர்சபை

6. திருவழிபாட்டுக் குழு

7. மறைக்கல்வி

8. பாடகற்குழு

9. பீடப்பணியாளர்கள்

பங்கில் உள்ள கல்விக்கூடங்கள்& துறவற இல்லம்:

1. Sacred Heart Primary School (Boys)

2. Sacred Heart Higher Secondary School (Boys)

3. St Joseph's Primary school (Girls)

4. St Joseph's Higher Secondary School (Girls)

5. Servite Sisters convent

1923 முதல் பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:

1. Rev.Fr. F.X. Singarayar (1923–1929)

2. Rev.Fr. Payapalli (1929–1936)

3. Rev.Fr. Arulsamy (1936–1947)

4. Rev.Fr. Gnanam (1947–1959)

5. Rev.Fr. Stephendoss (1959–1964)

6. Rev.Fr. P.L. Ephrem (1964–1973)

7. Rev.Fr. Augustin (1973–1982)

8. Rev.Fr. Ambroise (1982–1988)

9. Rev.Fr. Devasagayam (1988–1993)

10. Rev.Fr. Mariadoss (1993–1995)

11. Rev.Fr. Arthur James (1995–2000)

12. Rev.Fr. Joseph Leon (2000–2005)

13. Rev.Fr. Barnabas (2005–2010)

14. Rev.Fr. Edward J. (2010–2015)

15. Rev. Fr. Remigius S. Leon (2015–2019)

16. Rev.Fr. R. Joseph Ravibalan (2019 - till today..)

இதய நோய்களையும் மற்றும் பல தீராத நோய்களையும் குணப்படுத்தும் சாத்தான்குளம் தூய இருதய அன்னை ஆலயம் வாருங்கள்... அன்னையின் வழியாக இறைவனின் ஆசி பெற்று செல்லுங்கள்..

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. R. ஜோசப் ரவிபாலன்