385 புனித அந்தோணியார் ஆலயம், வடக்கு வேப்பிலாங்குளம்


புனித அந்தோணியார் ஆலயம்.

🍇இடம் : வடக்கு வேப்பிலாங்குளம்.

🦋மாவட்டம் : திருநெல்வேலி
🦋மறை மாவட்டம் : தூத்துக்குடி
🦋மறை வட்டம் : வடக்கன்குளம்.

🍎நிலை : கிளைப்பங்கு
🍎பங்கு : புனித குழந்தை இயேசுவின் தெரசாள் ஆலயம், புஷ்பவனம்.

💐பங்குத்தந்தை : அருட்பணி அருள்மணி

🔥மாதத்தின் இரண்டாவது செவ்வாய் மாலையில் திருப்பலி நடைபெறும்.

🎉திருவிழா : ஜூன் 12 மற்றும் 13- ம் தேதி என இரண்டு நாட்கள்.

👉வழித்தடம் : பணகுடி - கும்பிளம்பாடு - வடக்கு வேப்பிலாங்குளம்.

👉Location map : https://maps.app.goo.gl/xotwuTQ8D6Skv4tP6

வரலாறு :
*********
🌺கி.பி 1920 ம் ஆண்டில் வடக்கு வேப்பிலாங்குளத்தில் இரண்டு சென்ட் நிலத்தில் மக்கள் ஜெபிப்பதற்கு வசதியாக சிறு குடிசை ஒன்றை கட்டினார்கள். அதில் ஆசிரியராக பணியாற்றிய திரு. இராஜேந்திர நாடார், அவரது மகன் திரு. ஆசீர்வாத அந்தோனி முத்து மற்றும் இராஜேந்திரன் அவர்களின் சகோதர் திரு. சவரிமுத்து, அவரது மகன் திரு. சுவக்கீன் ஆகியோர் இணைந்து பலிபீடம் அமைத்து, புனித அந்தோணியார் சுரூபம் வைத்து இறைவனை வழிபட்டு வந்தனர்.

🌸இந்த குடும்பம் மட்டுமே கத்தோலிக்க விவசாயக் குடும்பம். இக் குடும்பத்தினர் ஆலயத்தின் வடக்குப் பக்கம் வாழ்ந்து வந்தனர். இவ்வீடு இன்றும் இடிக்கப் படாமல் அப்படியே உள்ளது. இந்த குடும்பத்தைத் தொடர்ந்து மேலும் ஐந்து கத்தோலிக்க குடும்பங்கள் இங்கே வீடு கட்டி, ஆலயத்தை பராமரித்து வந்தனர். இவ்வாலயம் பணகுடி பங்கின் கிளைப் பங்காக செயல்பட்டு வந்தது.

🌷இவ்வாலயத்தில் பல புதுமைகள் நடந்ததால் வெளியூரிலிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர்.

🏵கி.பி 1983 -84 காலகட்டத்தில் அருட்பணி அமலதாஸ் பணிக்காலத்தில் நல்லுள்ளம் கொண்ட நன்கொடையாளர்களின் உதவியுடன் பழைய ஆலயத்தை அகற்றி விட்டு, கான்கிரீட் போட்ட புதிய ஆலயம் கட்டப்பட்டு, அர்ச்சிக்கப் பட்டு திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது.

🌺பின்னர் இவ்வாலய மக்களில் பலரும் வேலை வாய்ப்புகளைத் தேடி வெளியூர் சென்று அங்கேயே தங்கி விட்டதால், தற்போது ஒரே ஒரு கத்தோலிக்கக் குடும்பத்தினர் மட்டுமே வசித்து வருகின்றனர்.

🍀புஷ்பவனம் 2003 ம் ஆண்டு தனிப் பங்காக உயர்த்தப் பட்ட போது, வேப்பிலாங்குளம், பணகுடியிலிருந்து மாற்றப்பட்டு புஷ்பவனத்தின் கிளைப் பங்காக ஆனது.

🌹இவ்வருடம் ஜூன் மாதத்தில் ஆலயம் விரிவாக்கம் செய்யப்பட்டது.

🌷தற்போதைய பங்குத்தந்தை அருட்பணி அருள்மணி அவர்களின் முயற்சியால், மாதத்திற்கு ஒருமுறை இரண்டாவது செவ்வாய்க்கிழமைகளில் மாலையில் பங்கு ஆலயமாகிய புஷ்பவனம் புனித குழந்தை இயேசுவின் தெரசாள் ஆலயத்திலிருந்து, மக்கள் கூட்டாக பங்குத்தந்தையுடன் வாகனங்களில் வந்து, திருப்பலி நிறைவேற்றி இறைவனுக்கு நன்றி செலுத்திச் செல்வது போற்றுதலுக்குரியது.

👉தகவல்கள் : பங்குத்தந்தை அருட்பணி அருள்மணி அவர்கள்.