594 அற்புத குழந்தை இயேசு ஆலயம், பார்வதிபுரம்


அற்புத குழந்தை இயேசு ஆலயம்

இடம்: பார்வதிபுரம்.

மாவட்டம்: கன்னியாகுமரி

மறைமாவட்டம்: கோட்டார்

மறைவட்டம்: தேவசகாயம் மவுண்ட்.

நிலை : பங்குத்தளம் 

மறைமாவட்ட ஆயர்:

மேதகு நசரேன் சூசை

பங்குப் பணியாளர்:

அருள்பணி. M. அருள்.

குடும்பங்கள்: 175

அன்பியங்கள்: 5

வழிபாட்டு நேரங்கள் :

ஞாயிறு திருப்பலி: காலை 06.00 மணி

வார நாட்களில் திருப்பலி :

திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்கள் காலை 06.15 மணிக்கு.

புதன் மாலை 06.00 மணிக்கு ஜெபமாலை, சகாய மாதா நவநாள், திருப்பலி.

வியாழக்கிழமை மாலை 06.00 மணிக்கு ஜெபமாலை, அற்புத குழந்தை இயேசு நவநாள், திருப்பலி.

மாதத்தில் முதல் வெள்ளி மாலை 06.00 மணிக்கு 1 மணி நேரம் நற்கருணை ஆராதணை, திருப்பலி.

பாதுகாவலர் திருநாள்:

ஜனவரி மாதம், இரண்டாவது வாரத்தில் ஐந்து நாட்கள் நடைபெறும். 

வழித்தடம்: நாகர்கோவில் திருவனந்தபுரம்- நெடுஞ்சாலை தெற்கு சானல் கரை.

Location map :

Infant Jesus Roman Catholic Church

New channel road, Parvathipuram, Nagercoil, Tamil Nadu 629003

https://www.google.com/search?client=ms-android-vivo-rev1...

வரலாறு :

"வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன; வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது"

திருப்பாடல்கள் 19:1

நாகர்கோவில் நகரின் எல்லையில், எழில் மிகு பார்வதிபுரம் ஊரில் 1970 -ஆம் ஆண்டு சுமார் 35 கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பங்கள் இருந்தன. இவர்களுக்கு தாய்ப்பங்கு  கிறிஸ்துநகர் கிறிஸ்து அரசர் ஆலயம் ஆகும். 

1980 -ஆம் ஆண்டு முதல், கிறிஸ்துநகர் பங்குப்பணியாளர் அருட்பணி. ஜோக்கிம் காலத்தில், பார்வதிபுரத்தில் ஞாயிறு மறைக்கல்வி வகுப்புகள் நடைபெற்று வந்தன. 1985 -ஆம் ஆண்டு முதல், பங்குப் பணியாளர் அருட்பணி. ஜோசப்ராஜ் அவர்கள் மரதத்திற்கு ஒருமுறை, முதல் சனிக்கிழமை  திரு. அல்போன்ஸ் ஆசிரியரின் இல்லத்தின் 

முன்பு திருப்பலி நிறவேற்றத் தொடங்கினார். 

தொடர்ந்து வந்த பங்கு அருட்பணியாளர் ஜூலியஸ் அவர்களின் வழி காட்டுதலில், ஆயர் லியோன் அ. தர்மராஜ், திருமதி. ரோஸ்லின்  மற்றும் இறைமக்களின் ஒத்துழைப்புடன் பார்வதிபுரம் சானல்கரையில் 11 சென்ட் நிலம் வாங்கப்பட்டது. அருட்பணி. ஜூலியஸ் அவர்கள் அவ்விடத்தில் ஒரு ஓலை குடிசை கட்டி, திருப்பலி நிறைவேற்றத் தொடங்கினார். பிறகு கிறிஸ்துநகர் பங்குப் பணியாளராக பொறுப்பேற்ற அருள்பணி. ரசல் ராஜ், மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ், திருமதி மேரி ரோஸ்லின், மற்றும் இறை மக்களின் ஒத்துழைப்போடு அவ்விடத்தில் ஒரு சிறிய ஆலயம் ஒன்று கட்டப்பட்டது. 

01.01.1999 கிறிஸ்துநகர் பங்கு அருட்பணியாளர் நாற்பெர்ட் அலெக்சாண்டர் அவர்களின் பரிந்துரைப்படி, ஆயர் அவர்கள் பார்வதிபுரத்தை கிருஸ்துநகரின் கிளைப் பங்காக அறிவித்தார்.

அருட்பணியாளர் தோமினிக் கடாட்ச தாஸ் அவர்கள் பணிக்காலத்தில் ஞாயிறுதோறும் காலை திருப்பலி நிறைவேற்றப்பட்டது. பிறகு பங்குப் பணியாளர் அருள்பணி. அமலதாஸ் டென்சிங் அவர்கள் காலத்தில், ஆலயத்திற்கு அருகே இருந்த புதிய வீடு  ஒன்றும், அருகில் 11 சென்ட் மனையும் மக்களுடைய ஒத்துழைப்பில் வாங்கப்பட்டது. 

பார்வதிபுரம் கிளைப் பங்காக இருந்தாலும் கிறிஸ்தவ வாழ்வில் அக்கறை கொண்டு மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அவர்களால், அருட்பணியாளர் செல்வராஜ் அவர்களை ஆலயத்தில் தங்கி பணியாற்ற அனுப்பினார். 2007 -ஆம் ஆண்டு அருள்பணி. செல்வராஜ் மக்களின் ஆதரவோடு கோயிலை விரிவுபடுத்தி, பலிபீடமும் மாற்றியமைத்து புதிதாக ஒரு கொடிமரமும், கோயிலின் முன் குருசடி, ஆலயத்திற்கு ஒரு பெரிய மணியும் அமையச் செய்தார். 

தினசரி காலை திருப்பலியும், வியாழக்கிழமை மாலை அற்புத குழந்தை இயேசு நவநாள் திருப்பலியும் தொடங்கப்பட்டது. 2008 -ஆம் ஆண்டு பணியாளராக பொறுப்பேற்ற அருள்பணி. ஹென்றி அவர்கள் காலத்தில் மக்களிடமிருந்து வரியாகவும் நன்கொடையாகவும் நிதி பெறப்பட்டு, கோவிலின் அருகில் இருந்த ஒன்பதரை சென்று நிலம் வாங்கப்பட்டது. 

பிறகு 2011 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற அருட்பணி வின்சென்ட் பெ. வில்சன் அவர்கள், பங்கின் நீண்டகால வளர்ச்சித் திட்டங்களை திட்டமிட்டு நடைமுறைப் படுத்தினார். 

2012 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற அருட்பணியாளர் ஆன்றனி பென்சிகர் காலத்தில், 71 சென்று நிலம் பண்டாரதோப்பில் விலைக்கு வாங்கப்பட்டது.

03.01.2013 அன்று பார்வதிபுரம் தனிப்பங்காக உயர்த்தப்பட்டது. இதுவரை பொறுப்பாக பணியாற்றிய அருள்பணி. ஆன்றனி பென்சிகர் அவர்கள், கோட்டாறு ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியூஸ் அவர்களால்  பங்கின் முதல் பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டார். 

24.12.2017 அன்று ஆலய வளாகத்தில் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் திரு. சுரேஷ் ராஜன் நிதியில் புதிதாக கட்டப்பட்ட சமூக கலையரங்கம் சட்டமன்ற உறுப்பினரால் திறந்து வைக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டு பங்குப்பணியாளர் அருட்பணி. ஆன்றனி பென்சிகர் முயற்சியில் பங்கு மக்கள் மற்றும் பல நல்ல உள்ளங்களின் உதவியோடு புதிய கல்லறைத் தோட்டத்திற்காக 11 சென்ட் நிலம் வாங்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டு மே மாதம் அருட்பணியாளர் ஆன்றனி பென்சிகர் பங்கு மாற்றம் பெற்றுச் செல்ல, அருள்பணி ம. அருள் அவர்கள் பங்குப் பணியாளராக பொறுப்பேற்றார்.

தற்போது ஆலய விரிவாக்கத்தின் தேவை கருதி, ஆலய விரிவாக்கத்திற்கான திட்டமிடப்பட்டுள்ளது.

பங்கின் பங்கேற்பு அமைப்புகள் :

1. பங்குப்பேரவை

2. மரியாயின் சேனை 

3. இளைஞர் இயக்கம் 

4. மறைக்கல்வி மன்றம் 

5. பாலர்சபை 

6. சிறுவழி இயக்கம் 

7. இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம் (YCS)

8. பாடகற்குழு 

9. வழிபாட்டுக்குழு

10. பீடச்சிறார். 

அற்புத சுகம் தரும் பார்வதிபுரம் குழந்தை இயேசுவின் ஆலயம் வாருங்கள்... இறைவனின் ஆசீர் பெற்றுச் செல்லுங்கள்... 

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருள்பணி. ம. அருள்.