262 ஜெயமாதா மறைவட்ட ஆலயம், நித்திரவிளை


ஜெயமாதா மறைவட்ட ஆலயம் (Forane church)

இடம் : நித்திரவிளை

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : தக்கலை

ஆயர் : மேதகு மார் ஜார்ஜ் இராஜேந்திரன்

பங்குத்தந்தை : அருட்தந்தை சனில் ஜான் பந்திச்சரக்கல் (குரியன்)

நிலை : பங்குதளம்
கிளைகள் : இல்லை

குடும்பங்கள் : 280
உறவியம் (அன்பியம்) : 6

ஞாயிறு திருப்பலி : காலை 07.00 மணி மற்றும் காலை 09.30 மணிக்கும்.

புதன், வெள்ளி திருப்பலி : மாலை 06.00 மணிக்கு

திங்கள், செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் திருப்பலி : காலை 06.30 மணிக்கு

திருவிழா : ஆகஸ்ட் மாதம் 15 -ஆம் தேதி நிறைவடைகின்ற வகையில் ஏழு நாட்கள் நடைபெறும்.

சிறப்புகள் :

இயேசுவின் பனிரெண்டு சீடர்களில் ஒருவரான அப்போஸ்தலர் புனித தோமையார். அவரின் வழித்தோன்றல்களாக சீரோ - மலபார் திருச்சபை விளங்குகின்றது. இத்திருச்சபையினர் குமரி மாவட்டத்தில் முதன் முதலாக நித்திரவிளை - யில் தமது தக்கலை மிஷன் ஆனது 1960 ஆம் ஆண்டில் மறைபரப்புப் பணியை துவங்கியது.

நித்திரவிளையின் முதல் பங்குத்தந்தையாக அருட்தந்தை சக்கரியாஸ் காயித்தர அவர்கள் பொறுப்பேற்றார்கள்.

பங்கின் முதல் ஞானஸ்நானம் 18-09-1960 ல் 68 நபர்களுக்கு கொடுக்கப்பட்டதன் மூலமாக இப்பகுதியில் கிறிஸ்தவம் வளர ஆரம்பித்தது.

கருணை இல்லம் :

இங்கு மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக பள்ளிக்கூடம் மற்றும் இவர்களை பராமரிக்கும் இல்லம் உள்ளது. இதனை ASMI அருட்சகோதரிகள் சிறப்பாக நடத்தி வருகின்றனர். ஆரம்பத்தில் இந்த கருணை இல்லமானது ஊனமுற்றோரை பராமரிக்கும் இல்லமாக இருந்தது. பின்னர் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் இல்லமாக மாற்றப்பட்டது.

இந்த கருணை இல்லமானது 25 வருடங்களாக சிறப்பாக செயல்பட்டு வருவது தனிச் சிறப்பு.

மேலும் அமலா ஆடிட்டோரியம் ஒன்றும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இம்மண்ணின் இறை அழைத்தல்களாக ஒரு அருட்சகோதரி மற்றும் ஒரு அருட்சகோதரர் உள்ளனர்.

தற்போது பங்குத்தந்தை அருட்தந்தை சனில் அவர்கள் இம்மக்களை இறை திட்டத்தின் படி ஒருங்கிணைத்து, சிறப்பாக வழிகாட்டி வளர்ச்சிப் பாதையில் அழைத்து செல்கின்றார்.