புனித ஜார்ஜியார் ஆலயம்
இடம்: வடக்கன்குளம்
மாவட்டம்: திருநெல்வேலி
மறைமாவட்டம்: தூத்துக்குடி
மறைவட்டம்: வடக்கன்குளம்
நிலை: சிற்றாலயம்
பங்கு: பரிசுத்த புதுமை பரலோக அன்னை திருத்தலம், வடக்கன்குளம்
பங்குதந்தை பேரருட்பணி. மார்ட்டின் மனுவேல்
உதவி பங்குதந்தை அருட்பணி. G. பிரதாப்
திருப்பலி: வியாழன் மாலை 05:30 மணி
திருவிழா: மே மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும்
வழித்தடம்: திருநெல்வேலி -காவல்கிணறு விலக்கு -வடக்கன்குளம்
Church Map location: St. George Church
https://maps.app.goo.gl/cb6x19o96W67tttE9
வரலாறு:
ஆலயத்தை மையமாக வைத்தே கிறிஸ்தவர்களாகிய நம் வாழ்வு அமைகிறது. ஒவ்வொரு கிறிஸ்தவர்களின் கிறிஸ்தவ வாழ்வானது ஆலயத்தில் தொடங்கி ஆலயத்தில் முடிகிறது. ஆலயமானது மக்களின் வாழ்வோடு பிரிக்க முடியாத, இரண்டற கலந்த ஒன்று.
ஒவ்வொரு படைப்பிற்கும் ஒரு நோக்கம் உண்டு. அதுபோல ஆலயங்கள் உண்மையான ஜெபவீடாகவும், கடவுளின் இருப்பிடமாகவும், மோட்சத்தின் வாயிலாகவும் திகழ்கிறது. கடவுளையும் மனிதனையும் ஒப்புரவிற்கும், உறவிற்கும் அழைப்பு விடுக்கும் புனிதமிக்க இடம் ஆலயம். எனவே தான் நம் முன்னோர் 'ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்றனர். அவ்வண்ணமே சீர்மிகு வடவையில், எழில்மிகு மேற்கத்திய கட்டிடக்கலையில், சிறப்புற அமைந்துள்ளது பரிசுத்த திருக்குடும்ப தேவாலயம். இவ்வாலயத்தில் முப்பொழுதும் கன்னியாகிய நம் தேவஅன்னை மக்களுக்குத் திருவருள் பாலித்து, அருளாட்சி புரிந்து வருகிறார். இறைமக்களை இறைவனோடு உறவு கொள்ளவும், இறையாசீர் பெறவும் இவ்வாலயங்கள் நமக்கு அழைப்பு விடுக்கிறது.
வடவையில் அன்பின் திருப்பீடமாகவும், அருளின் பிறப்பிடமாகவும் விளங்குபவை சிற்றாலயங்கள்.
வடவையின் சிற்றாலயங்கள்
1. வியாகுல அன்னை சிற்றாலயம்
2. புனித செபஸ்தியார் சிற்றாலயம்
3. புனித அந்தோணியார் சிற்றாலயம்
4. தூய மிக்கேல் அதிதூதர் சிற்றாலயம்
5. வேளாங்கண்ணி மாதா சிற்றாலயம்
6. புனித ஜார்ஜியார் சிற்றாலயம்
7. புனித காணிக்கை மாதா சிற்றாலயம்
8. அற்புத மாதா சிற்றாலயம்.
இவற்றில் புனித ஜார்ஜியார் சிற்றாலய வரலாற்றைக் காண்போம்.....
இறைவனுக்காகத் தனது வாழ்வை அர்ப்பணம் செய்து, இடுக்கமான பாதையில் புனிதமுடன் பயணம் செய்து புனிதராக மாறியவர் புனித ஜார்ஜியார். சாத்தானின் படையை முறியடித்து எண்ணில்லாத புதுமைகள் செய்தவருமான அப்புனிதரே, வடவை மக்கள், வெளியூர் மக்களுக்குப் பயணத்தின் பாதுகாவலராய் உள்ளார்.
வடக்கன்குளம் கிறிஸ்தவ இளைஞர்களின் பெரும் முயற்சியாலும், சில நல்லுள்ளங்களின் உதவியாலும், புனித ஜார்ஜியார் ஆலயம் அதிவிரைவாக கட்டிமுடிக்கப்பட்டு, 1997ம் ஆண்டு அருட்பணி. மரியதாஸ் அடிகளார் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. இவ்வாலயமானது பேருந்து நிலையத்தின் மேற்கே, புனித தெரசாள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டுத் திடலின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.
பேரருட்திரு. M. ஜான் பிரிட்டோ அடிகள் பணிக்காலத்தில் ஆலயமானது விரிவாக்கம் செய்யப்பட்டு, 14.08.2020 அன்று தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு A. ஸ்டீபன் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் சேகரிப்பு : வடவை கத்தோலிக்க கூட்டமைப்பு, வடக்கன்குளம்.
தகவல்கள் சேகரிப்பில் உதவி: திரு. பென்கர் கட்டளை, வடக்கன்குளம்.


