புனித லூர்து அன்னை திருத்தலம்
இடம்: நாகமங்கலம், தேன்கனிக்கோட்டை தாலுகா, நாகமங்கலம் அஞ்சல், 635113
தொடர்பு எண்: +91 98948 97052
திருத்தல பேஸ்புக்: https://www.facebook.com/lourdumatha.nagamangalam?mibextid=ZbWKwL
மாவட்டம்: கிருஷ்ணகிரி
மறைமாவட்டம்: தருமபுரி
மறைவட்டம்: தேன்கனிக்கோட்டை
நிலை: திருத்தலம்
பங்குத்தந்தை அருள்பணி. மைக்கிள் கண்ணாலா, OSB
உதவி பங்குத்தந்தை அருள்பணி. சர்கன், OSB
வழிபாட்டு நேரங்கள்:
ஞாயிறு காலை 09:00 மணி திருப்பலி (English)
காலை 11:00 மணி ஜெபமாலை
காலை 11:30 மணி திருப்பலி, ஆராதனை, குணமளிக்கும் வழிபாடு
மாலை 03:00 மணி திருப்பலி
திங்கள் முதல் வெள்ளி வரை
காலை 11:30 மணி ஜெபமாலை
நண்பகல் 12:00 மணி திருப்பலி
சனி காலை 11:00 மணி ஜெபமாலை
காலை 11:30 மணி திருப்பலி, ஆராதனை, குணமளிக்கும் வழிபாடு
மாலை 03:00 மணி திருப்பலி
இரண்டாம் சனி காலை 10:30 மணி ஜெபமாலை தேர்பவனி, திருப்பலி, ஆராதனை, குணமளிக்கும் வழிபாடு- Rosary
திருவிழா: மே மாதம் 19-ம் தேதியை மையமாகக் கொண்ட பத்து நாட்கள்
லூர்து மாதா திருவிழா பிப்ரவரி மாதம் 11-ம் தேதி
வழித்தடம்: கிருஷ்ணகிரி -ராயக்கோட்டை -நாகமங்கலம்
Location Map: Our Lady of Lourdes Shrine - Nagamangalam 098948 97052
https://maps.app.goo.gl/tu5wupk3zpRFRWe47
திருத்தல வரலாறு:
இறைமக்களே உங்களுக்கு ஒரு நற்செய்தி, அற்புதமான புனித நீர் தடாகம் அன்னையின் அருள் கொடையாக நமக்கு கிடைத்துள்ளது. அது எங்கே என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்...
நாகமங்கலத்தில் 2003 ஆம் ஆண்டில் OSB சபையினரால் சில ஏக்கர் விவசாய நிலம் வாங்கப்பட்டது. இந்த நிலத்தில் OSB சபை அருட்தந்தையர்களால் புதியதாக உருவாகிக் கொண்டிருந்த புனித லூர்தன்னையின் சிற்றாலயத்தில் அன்னையின் சுரூபம், திருச்சிலுவை மற்றும் புனித அல்போன்ஸா அம்மாவின் சுரூபம் அமைக்க ஆலோசனைக் கூட்டமானது, 19.05.2008 அன்று காலை 08:00 மணியளவில் அருள்தந்தை ஜாய், அருள்தந்தை ஹென்றி போனால், M.E.P, கெலமங்கலத்தைச் சேர்ந்த பெரியநாயகம் ஆகியோர் நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வேலை செய்யும் ஒருவர் தன்னை அறியாமலே மண்ணை தோண்டினார், திடீரென்று சுத்தமான தெளிந்த தண்ணீர் சுமார் 1.5 அடியில் தோன்ற, அருள்தந்தை ஜாய் ஆச்சரியத்தில் வியந்தார். இந்த தண்ணீரை அங்கு வேலை செய்யும் 25 வயது இளைஞர் ஒருவர் அருந்தியதின் பயனாக குணமடைந்தார். இவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு, தினமும் இரண்டு இன்சுலின் ஊசி உபயோகித்து வந்தவர். 45 நாட்களில் பூரண குணமடைந்தார். இவ்விடத்தில் இது அன்னையின் முதல் புதுமை ஆகும். புதுமைகள் தொடர ஆலயமானது கட்டப்பட்டு, 08.08.2010 அன்று தருமபுரி மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனி இருதயராஜ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
இதன் பின் இந்த புனித நீரை உபயோகித்த அநேகர் நீரிழிவு நோய், விஷ காய்ச்சல், டி.பி, முடக்குவாதம் போன்ற பல நோய்களிலிருந்து குணம் அடைந்துள்ளார்கள். மற்றும் குடும்ப பிரச்சனைகள் நீங்கி, குடும்பத்தித்தில் அன்பு, அன்பு, சமாதானம் பெற்றுள்ளார்கள். எனவே, நாம் எல்லோரும் ஒன்று கூடி அன்னையைப் புகழ்வோம் அவளது பாதுகாப்பில் நம்மை இயேசுவிடம் ஒப்படைப்போம். முக்கியமாக பிரான்ஸ் தேசத்தில் லூர்து நகரில் அன்னை தரிசனமாகி 150-வது ஆண்டை நினைவு கூறுகின்ற வேளையில், நம் மண்ணில் அன்னையின் தரிசனத்தை உணர திரண்டு வாருங்கள். அன்னையின் ஆசீரை ஏராளமாக அள்ளிச் செல்லுங்கள். அன்னைக்கு நன்றி கூறுங்கள்..!
தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான இறைமக்கள் இந்த திருத்தலத்தௌ நாடி வருகின்றனர். ஆகவே அனைவரும் இணைந்து திருப்பலியில் பங்கேற்கவும், ஜெபிக்கவும் வசதியாக தற்போது பெரிய ஆலயமானது (2024 டிசம்பர் மாதத்தில்) கட்டப்பட இருக்கிறது.
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருள்பணி. மைக்கிள் கண்ணாலா, OSB
கூடுதல் புகைப்படங்கள்: திரு. ஏசுதாஸ், கிருஷ்ணகிரி






