990 புனித சவேரியார் ஆலயம், ஆவரைக்குளம்

      
புனித சவேரியார் ஆலயம்

இடம்: ஆவரைக்குளம், ராதாபுரம் தாலுகா, 627105

மாவட்டம்: திருநெல்வேலி

மறைமாவட்டம்: தூத்துக்குடி

மறைவட்டம்: வடக்கன்குளம்

நிலை: கிளைப்பங்கு

பங்கு: பரிசுத்த புதுமை பரலோக அன்னை திருத்தலம், வடக்கன்குளம்

பங்குத்தந்தை பேரருள்பணி. மார்ட்டின் மனுவேல்

உதவி பங்குத்தந்தை அருள்பணி. G. பிரதாப்

குடும்பங்கள்:‌ 75

வழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி மாலை 06:30 மணி

நாள்தோறும் மாலை 06:30 மணி ஜெபமாலை

திருவிழா: நவம்பர் மாதம் 24-ம் தேதி முதல் டிசம்பர் மாதம் 03-ம் தேதி வரையிலான பத்து நாட்கள்.

மண்ணின் இறையழைத்தல்:

அருட்பணி. F. வசந்தன், தூத்துக்குடி மறைமாவட்டம்

வழித்தடம்:‌ கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் காவல்கிணறுக்கு அடுத்த 6கி.மீ தொலைவில், அம்பலவாணபுரம் சந்திப்பிலிருந்து 1.5கி.மீ உள்ளே சென்றால் ஆவரைகுளம் வந்தடையலாம்.

Location map: St. Xavier's Church, Avaraikulam

https://maps.app.goo.gl/oTVw14KVBVYxyBht7

வரலாறு:

ஒருவன் உலகமெலாம் தனதாக்கிக் கொண்டாலும் தன் ஆன்மாவை இழந்தால் பயன் என்ன? என்ற இறைவார்த்தைக்கு இணங்க, என் ஆன்மாவை மட்டுமின்றி, அகிலம் முழுவதும் உள்ள அனைத்து ஆன்மாக்களையும் கிறிஸ்துவுக்காய் மீட்க வேண்டும் என்று தாகம் கொண்டவர் புனித சவேரியார்.

17-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிழைப்பிற்காகத் தூத்துக்குடி மாவட்டம் குரும்பூரில் இருந்த ஒரு குடும்பத்தினர், ஆவரைக்குளம் வந்து குடியேறினர். அக்குடும்பத்தின் வம்சாவழி வந்த திரு. தேவசகாயம் என்பவர் அன்றைய வடக்கன்குளம் பங்குத்தந்தை அருட்பணி. ஜோசப் கிரகோரி அடிகளாரின் ஞான உபதேசத்தால் ரோமன் கத்தோலிக்க திருஅவையில் சேர்ந்து, திருமுழுக்குப் பெற்று 1858-ம் ஆண்டு திருஅவையில் இணைந்தார். ஆவரைக்குளத்தில் வாழும் கிறிஸ்தவர்களில் பெரும்பாலானோர் இவரின் வம்சாவழியைச் சார்ந்தவர்கள் ஆவர். இம்மக்கள் தங்கள் உழைப்பாலும், பொருளாலு,ம் ஆலயம் ஒன்றைக் கட்டி வழிபாடுகள் நடத்தி வந்தனர். அவ்வாலயம் பழுதடையவே புதிய ஆலயம் கட்டப்பட்டு 1889-ம் ஆண்டில் வடக்கன்குளம் பங்குத்தந்தை வில்லியம் புக்கே அவர்கள் முன்னிலையில், ஆயர் தலைமையில் அர்ச்சித்து திறக்கப்பட்டது. இவ்வாலயமானது புனித சவேரியாருக்கு அர்ப்பணிக்கப்பட்டது. 

இவ்வாலயத்திலிருக்கும் ஒரே மரத்தால் ஆன புனித சவேரியார் சுரூபமானது, சுமார் 135 ஆண்டுகளுக்கு முன் கோவாவில் இருந்து வந்தது என்றும், வடக்கன்குளம் பங்குத்தந்தை மூலம் இவ்வாலயத்திற்காகப் பெறப்பட்டது என்றும், முன்னோர்களால் கூறப்படுகிறது. கம்பீரமான தோற்றத்துடன் காட்சி அளிக்கும் புனித சவேரியார் கேட்ட வரம் கொடுத்து புதுமைகள் செய்பவராக ஆவரையின் பாதுகாவலராகவும் விளங்குகிறார்.

1889-ம் ஆண்டு கட்டப்பட்ட இவ்வாலயம் சேதமடையவே, 1907-ம் ஆண்டு புதிதாக மண்கோவில் கட்டப்பட்டது. இக்காலத்தில் ஆவரையில் மக்கள் ஆர்வத்துடன் வழிபாடுகளில் கலந்து கொண்டனர். கத்தோலிக்க திருமறையை ஏற்று திருஅவையில் இணைந்தனர்.

மக்களின் பெருக்கம், காலமாற்றம், புதிய ஆலயத்திற்கு வித்தானது. மக்களின் தாராள கொடையால் பேரருட்பணி. தியோபிலஸ் அடிகள் காலத்தில் 2002-ம் ஆண்டு புதிய ஆலயம் கட்டப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து பணிபுரிந்தது வந்த பங்குத்தந்தையர்களால் ஆலயம் புனரமைக்கப்பட்டது.

கல்வி நிறுவனம்:

தூய சவேரியார் தொடக்கப்பள்ளி.

வாருங்கள்! புனித சவேரியாரின் வழியாக இறைவனின் ஆசியைப் பெற்றுச் செல்லுங்கள்!

ஆலய வரலாறு: வடக்கன்குளம் பங்கு 150-வது ஆண்டு விழா மலர்

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் சேகரிப்பு: திரு. பென்கர் கட்டளை, வடக்கன்குளம் மற்றும் திரு. A. மிதுன் ஆண்டோ, வடக்கன்குளம் ஆகியோர்.