புனித அந்தோனியார் ஆலயம்
இடம்: சின்னமாடன் குடியிருப்பு, நாசரேத் அஞ்சல், 628617
மாவட்டம்: தூத்துக்குடி
மறைமாவட்டம்: தூத்துக்குடி
மறைவட்டம்: சாத்தான்குளம்
நிலை: கிளைப்பங்கு
பங்கு: புனித ஆரோக்கிய மாதா ஆலயம், கருங்கடல்
பங்குத்தந்தை அருட்பணி. பாக்கிய ஜோசப்ராஜ்
குடும்பங்கள்: 20
ஞாயிறு மாலை 07:00 மணி ஜெபமாலை, திருப்பலி
திருவிழா: மே மாதம் முதல் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பித்து, 13 நாட்கள் திருவிழா நடைபெறும்.
வழித்தடம்: சாத்தான்குளம் -நாசரேத் வழித்தடத்தில், மேற்குப் புறமாக சின்னமாடன்குடியிருப்பு அமைந்துள்ளது.
பேய்க்குளம் -நாசரேத் வழித்தட பேருந்துகள் சின்னமாடன்குடியிருப்பு வழியாகச் செல்லும்.
Location map: St Antony's Church, Chinnamadankudieruppu
https://maps.app.goo.gl/L54eAMCDFDuRTuNr8
வரலாறு:
சின்னமாடன்குடியிருப்பு ஊரில் 1960களில் கத்தோலிக்க மறையைத் தழுவிய ஒருசில குடும்பங்கள், பனை ஓலையினால் புனித அந்தோனியார் ஆலயம் அமைத்து இறைவனை வழிபட்டனர். அப்போது முதல் சிந்தாமணியின் கிளைப்பங்காக சேர்க்கப்பட்டு, அப்போதைய பங்குத்தந்தை அம்புரோஸ் (1961-1968) அவர்கள், மக்களின் ஆன்மீகத் தேவைகளை கவனித்துக்கொண்டார்.
அருள்தந்தை செங்கோல்மணி (1968-1970) அவர்கள் மக்களுக்கு, சாதி மத பேதமின்றி வீடுகள் கட்டிக்கொடுத்தார். பஞ்சகாலத்தில் எல்லா மக்களுக்கும் கோதுமை போன்ற உணவுப்பொருட்கள் கிடைக்கச் செய்தார். எல்லா மக்களின் ஒத்துழைப்போடு ஓட்டுக்கூரை கொண்ட ஆலயமாக விரிவாக்கம் செய்து, 27.08.1978ல் மேதகு ஆயர் அம்புரோஸ் அவர்களால் திருநிலைப்படுத்தப்பட்டது.
சிந்தாமணியிலிருந்து பிரிக்கப்பட்டு சி. சவேரியார்புரம் 1999ல் தனிப்பங்காக மாறியபோது, சின்னமாடன்குடியிருப்பு அதன் கிளைப் பங்காக மாறியது. அதன் முதல் பங்குத்தந்தை எட்வர்ட் ஜே (2000-2005) அவர்களால் கல்நாராலான மேற்கூரையும், தளமும் அமைக்கப்பட்டு ஆலயம் புதுப்பிக்கப்பட்டது. மக்களின் முயற்சியால் ஆலயத்தை சுற்றி மதிற்சுவர் அமைக்கப்பட்டு, மரங்கள் நடப்பட்டு, ஊர்மக்களுக்கு பயன்படும் வகையில் கிணறும் தோண்டப்பட்டது. தொடக்கத்தில் இரண்டு அருட்சகோதரிகள் ஆலயத்தில் தங்கியிருந்து இறைப்பணியாற்றினர். தற்போது சி. சவேரியார்புரத்திலிருந்து வந்து பணியைத் தொடர்கின்றனர்.
செப்டம்பர் 8, 2021ல் கருங்கடல் தனிப் பங்காக ஆனபோது, சின்னமாடன்குடியிருப்பு அதன் கிளைப்பங்காக ஆனது.
ஆண்டுதோறும் மே மாதம் முதல் செவ்வாய்க்கிழமை கொடியேற்றமும், அதனைத் தொடர்ந்து 13ம் நாளில் திருவிழாவும் நடைபெறுகிறது. ஏராளமான மக்கள் இவ்விழாவில் பங்கேற்று இறையாசீர் பெற்றுச் செல்கின்றனர்.
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. பாக்கிய ஜோசப்ராஜ் அவர்கள்.