996 புனித குழந்தை தெரசா ஆலயம், அறுகு விளை

    

புனித குழந்தை தெரசா ஆலயம்

இடம்: அறுகுவிளை, மெயின்ரோடு, கிருஷ்ணன் கோவில் அஞ்சல், நாகர்கோவில் 1

மாவட்டம்: கன்னியாகுமரி

மறைமாவட்டம்: கோட்டார்

மறைவட்டம்: தேவசகாயம் மவுண்ட்

நிலை: கிளைப்பங்கு

பங்கு: புனித ஆரோக்கியநாதர் ஆலயம், புதுக்குடியிருப்பு

பங்குத்தந்தை அருட்பணி. லிகோரியஸ்

குடும்பங்கள்: 190

அன்பியங்கள்: 8

வழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி காலை 08:00 மணி

வியாழன் மாலை 06:50 மணி நவநாள் திருப்பலி

சனி காலை 06:40 மணி திருப்பலி

திருவிழா: அக்டோபர் மாதம் 01-ம் தேதியை மையமாகக் கொண்டு 10 நாட்கள்

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி. R. ஆன்றனி, கோட்டார் மறைமாவட்டம்

2. அருட்சகோதரி. M. மரிய ரோஸ்லின்

3. அருட்சகோதரி.‌ M. பாத்திமா பிலோ

4. அருட்சகோதரி. R. பிளவர்

வழித்தடம்: வடசேரி -வில்லேஜ் ஆபீஸ் -அறுகுவிளை  

Location map: https://g.co/kgs/g12mfse

ஆலய வரலாறு:

1869: ஓலைக் குடிசையில் சலேத் மாதா கெபி அமைக்கப்பட்டது.

1930: ஓலைக்கூரை பள்ளிக்கூடம் கட்டப்பட்டு, அருட்பணி. அம்புரோஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. பகல் நேரத்தில் பள்ளியாகவும், இரவில் பிரார்த்தனை கூடமாகவும் செயல்பட்டது.

1930: புனித குழந்தை தெரசாள் சொரூபம் அருட்பணி. வர்க்கீஸ் இல்லத்திலிருந்து எடுத்து வரப்பட்டு, ஆலயத்தில் நிறுவப்பட்டது. முதல் திருப்பலி அருட்பணி. வர்க்கீஸ் அவர்கள் நிறைவேற்றினார்கள்.

1970: கிறிஸ்து நகர் பங்கின் கிளைப்பங்கானது.

1970: சிறுமலர் நெசவாலை தொழிற்கூடம், தொடக்கப்பள்ளி அமைந்திருக்கும் இடத்தில் அருட்பணி. ஜோக்கிம் காலத்தில் நிறுவப்பட்டது.

1977: மேற்கூரை அமைக்கப்பட்டு தற்போதைய ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு, ஆயர் மேதகு ஆரோக்கியசாமி அவர்களால் அர்சிக்கப்பட்டது.

1987: முதல் பங்கு அருட்பணிப் பேரவை அமைக்கப்பட்டது.

1987: சலேத் மாதா குருசடி அடிக்கல் நாட்டப்பட்டது.

1990: சலேத் மாதா குருசடி அருட்பணி. ஜோசப்ராஜ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

1991: புதிய கல்லறை தோட்ட இடம் வாங்கப்பட்டது.

1991: புனித குழந்தை தெரசாள் பள்ளிக்காக, இரயில்வே அருகில் இடம் வாங்கப்பட்டது.

1994: புனித குழந்தை தெரசாள் பள்ளிக்காக, திருவள்ளுவர் தெருவில் இடம் வாங்கப்பட்டது.

2000: மண்டபத்திற்கு இடம் வாங்கப்பட்டது.

2001: மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

2001: மண்டபம் வேலை முடித்து ஆயர் மேதகு லியோன் அ. தர்மராஜ் அவர்களால் திறக்கப்பட்டது.

2001: அருட்சகோதரிகள் இல்லம் அமைக்கப்பட்டது.

2007: மழலையர் பள்ளி அமைந்திருக்கும் இடம் வாங்கப்பட்டது.

2014: மழலையர் பள்ளி அருட்பணி. ஜெரோமிஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

2016: கல்லறை தோட்ட பாதைக்கு இடம் வாங்கப்பட்டது.

2023: கொடிமரம் புதுப்பிக்கப்பட்டு அருட்பணி. ஆன்றனி கோமஸ் அவர்களால் அர்சிக்கப்பட்டது.

19.10.2024: புதிய சப்பரம், சப்பர கூடம் ஆகியவை அருட்பணி. லிகோரியஸ் அவர்களால் மந்திரிக்கப்பட்டது.

கோட்டார், மேலப்பெருவிளை, கிறிஸ்து நகர் ஆகியவற்றின் கிளைப் பங்காக செயல்பட்டு வந்த அறுகுவிளையானது, 28.02.2005 முதல் புதுக்குடியிருப்பு பங்கின் கிளைப்பங்காக செயல்பட்டு வருகிறது.

அறுகுவிளையும் புனித சவேரியாரும்:

புனித சவேரியார் அவர்களால் கோட்டாற்றில் சிறிய ஆலயமானது கட்டப்பட்ட வேளையில், அறுகுவிளை மக்கள் இங்கிருந்து மண் கொண்டு சென்று, கூலி எதுவும் பெறாமலேயே பணி செய்துள்ளனர். அதற்கு நன்றியாக ஆண்டுதோறும் நவம்பர் 24-ம் தேதி கொடியேற்ற நாளில் கொடியில் கட்டுவதற்காக, அறுகுவிளையிலிருந்து மேளதாளத்துடன் பூமாலை கொண்டு செல்லப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  

பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:

மரியாயின் சேனை

புனித வின்சென்ட் தே பவுல் சபை

கிராமப் பெண்கள் முன்னேற்ற சங்கம்

தொழிலாளர் இயக்கம்

சிறுவழி இயக்கம்

பாலர் சபை

இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம்

இளைஞர் இயக்கம்

திருவழிபாட்டுக் குழு

பாடகற்குழு

பீடச்சிறார் 

பங்குப் பேரவை

நிதிக் குழு

கல்விக் குழு

பங்கின் கல்விக்கூடங்கள்:

St Theresa Primary School

St Theresa Nursary School

பங்கில் உள்ள நிறுவனங்கள் & வசதிகள்:

புனித சலேத் மாதா கெபி

கலையரங்கம்

சமூக நலக்கூடம்

திரு இருதய அருட்சகோதரிகள் இல்லம்.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குதந்தை அருட்பணி. லிகோரியஸ் அவர்களின் வழிகாட்டலில், ஆலய நிர்வாகி.