978 புனித சந்தன மாதா ஆலயம், கட்டாரிமங்கலம்

  

புனித சந்தன மாதா ஆலயம்

இடம்: கட்டாரிமங்கலம், 628613

மாவட்டம்: தூத்துக்குடி

மறைமாவட்டம்: தூத்துக்குடி

மறைவட்டம்: சாத்தான்குளம்

நிலை: கிளைப்பங்கு

பங்கு: புனித ஆரோக்கிய மாதா ஆலயம், கருங்கடல்

பங்குத்தந்தை அருட்பணி.‌ பாக்கிய ஜோசப்ராஜ்

குடும்பங்கள்: 80 

ஞாயிறு திருப்பலி காலை 11:00 மணி

திருவிழா: ஆவணி மாதம் (ஜூலை மாதத்தில்) இரண்டாம் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பித்து பத்து நாட்கள் நடைபெறும்.

வழித்தடம்: சாத்தான்குளம் -திருநெல்வேலி சாலையில் கருங்கடல் உள்ளது. கருங்கடல் -கட்டாரிமங்கலம் 5கி.மீ

சாத்தான்குளம் -நாசரேத் வழித்தடத்தில், மேற்குப் புறமாக கட்டாரிமங்கலம் அமைந்துள்ளது. 

Church Map location: St. SANTHANA MATHA CHURCH KATTARIMANGALAM

https://maps.app.goo.gl/bZALvGpUrngWuzwi8

ஆலய வரலாறு:

இலங்கையில் பனைத்தொழிலுக்காக சென்ற முன்னோர்கள் அங்கு வணங்கிவந்த சந்தன மாதா (இலத்தீன் மொழியில் Sanctæ Annæ = புனித அன்னாள்) சுரூபத்தை, தாய் நாடு திரும்பிவரும்போது தங்களோடு கொண்டுவந்தனர். அந்த சுரூபத்தை தற்போது கெபி அமைந்திருக்கும் இடத்தில் நிறுவி, 1914ல் ஓலைக்கோவில் அமைத்து வழிபட்டனர்.

வெறும் ஏழே குடும்பத்தினரால் ஆரம்பிக்கப்பட்டு, நாங்குநேரி மறைவட்ட குருக்களால் வழிநடத்தப்பட்ட கத்தோலிக்க திருச்சபையினர் நூற்றுக்கணக்காக வளர்ந்த நிலையில், பெரிய ஆலயத்தின் தேவை ஏற்பட, 1962 ல் ஆலய விரிவாக்கப் பணிகள் தொடங்கப்பட்டன. பல ஆண்டுகளாக நடந்த வேலைகள் நிறைவுபெற்று, செப்டம்பர் 16, 1979ல் மேதகு ஆயர் அம்புரோஸ் ஆண்டகையால் அர்ச்சிக்கப்பட்டது.

சி. சவேரியார்புரத்தின் கிளைப்பங்காக மாறிய காலத்தில் அதன் முதல் பங்குத்தந்தை எட்வர்ட் ஜே (2000-2005) அவர்களால் ஆலயம் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, செப்டம்பர் 1, 2005ல் மேதகு ஆயர் யுவோன் அம்புரோஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. மீண்டும் 2019ல் அருட்தந்தை பீட்டர் பாஸ்டின் அவர்களால் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு, மக்களின் முயற்சியால் இரட்டைக்கோபுரம் அமைக்கப்பட்டது. 

செப்டம்பர் 8, 2021ல் கருங்கடல் தனிப் பங்காக உருவானபோது, கட்டாரிமங்கலம் அதன் கிளைப்பங்காக ஆனது.

அன்னை மரியாவின் தாயாம்  அன்னாவை, சந்தனமாதா என்னும் பெயரில் பாதுகாவலியாகக் கொண்டு சிறந்து விளங்கும் கட்டாரிமங்கலம் ஆலயம் வாருங்கள்.... இறையாசீர் பெற்றுச் செல்லுங்கள்..

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குதந்தை அருட்பணி. பாக்கிய ஜோசப்ராஜ் அவர்கள்.