புனித ஜார்ஜியார் ஆலயம்
இடம்: புதியம்புத்தூர், ராதாபுரம் தாலுகா
மாவட்டம்: திருநெல்வேலி
மறைமாவட்டம்: தூத்துக்குடி
மறைவட்டம்: வடக்கன்குளம்
நிலை: கிளைப்பங்கு
பங்கு: பரிசுத்த புதுமை பரலோக அன்னை திருத்தலம், வடக்கன்குளம்
பங்குத்தந்தை பேரருள்பணி. மார்ட்டின் மனுவேல்
உதவி பங்குத்தந்தை அருள்பணி. பிரதாப்
குடும்பங்கள்: 25
அன்பியம்: 1
வழிபாட்டு நேரங்கள்:
ஞாயிறு திருப்பலி மாலை 07:00 மணி
நாள்தோறும் மாலை 07:00 மணி ஜெபம்
திருவிழா: ஏப்ரல் மாதம் கடைசி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பித்து பத்து நாட்கள் நடைபெறும்
வழித்தடம்: கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில், 2கி.மீ உள்ளே புதியம்புத்தூர் அமைந்துள்ளது
Map location: St. George Church, Puthiam Puthoor
https://maps.app.goo.gl/j1JsxYNkEATBfTtw9
வரலாறு:
தொடக்கக் காலத்தில் புதியம்புத்தூரில் மிகக் குறைந்த உரோமன் கத்தோலிக்க குடும்பங்களே இருந்தன. அவர்கள் ஞாயிறு திருப்பலியில் பங்கேற்க, கால்நடையாக நடந்து வடக்கன்குளம் திருக்குடும்ப ஆலயம் வந்தனர். ஆகவே மக்களின் துன்பங்களைக் கண்ட மறைதிரு. M.S. அந்தோணி சுவாமி அடிகள், 1974ம் ஆண்டு புனித ஜார்ஜியார் ஆலயம் அமைக்க, நிலத்தை விலைக்கு வாங்கி, சிறிய ஆலயம் ஒன்று அமைத்தார்.
புனித ஜார்ஜியாருக்குப் புதிய ஆலயம் அமைக்க பேரருட்திரு. ரா. ததேயுஸ் ராஜன் அடிகளார் அவர்களால் 11.01.2017 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. தந்தை அவர்களின் பெருமுயற்சியாலும், புதியம்புத்தூர் மக்களின் ஆதரவாலும், நன்கொடையாளர்களின் உதவியாலும் புதிய ஆலயம் கட்டப்பட்டு, 23.7.2017 அன்று தூத்துக்குடி மறைமாவட்ட மேதகு ஆயர் இவான் அம்புரோஸ் ஆண்டகை அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
புதியம்புத்தூர் மக்கள் அனைவரும் சாதி, மத வேறுபாடின்றி திருவிழாவிலும், புனிதரின் தேர்ப் பவனியிலும் கலந்து
கொள்கின்றனர். புனித ஜார்ஜியாரின் பரிந்துரையால், இறைவனின் ஆசியுடன், வடக்கன்குளம் பங்குத்தந்தையர்களின் வழிகாட்டலில், ஆன்மீகப் பாதையில் பயணித்து வருகிறது புதியம்புத்தூர் இறைசமூகம்.
வரலாறு: வடக்கன்குளம் பங்கு ஆலய 150-வது ஆண்டு விழா மலர்.
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் சேகரிப்பு: திரு. பென்கர் கட்டளை, வடக்கன்குளம் மற்றும் திரு. மிதுன், வடக்கன்குளம் ஆகியோர்.



