புனித பாத்திமா அன்னை ஆலயம்
இடம்: பாத்திமா நகர், பாத்திமா நகர் அஞ்சல், திருச்சி, 620012
மாவட்டம்: திருச்சிராப்பள்ளி
மறைமாவட்டம்: திருச்சிராப்பள்ளி
மறைவட்டம்: கிராப்பட்டி
நிலை: பங்குத்தளம்
கிளைப்பங்குகள்:
1. புனித இடைவிடா சகாய அன்னை ஆலயம், இ. மேட்டுப்பட்டி
2. புனித வனத்து அந்தோனியார் ஆலயம், கல்குளத்துப்பட்டி
3. திருஇருதய ஆண்டவர் ஆலயம், சேதுராப்பட்டி
4. புனித சவேரியார் ஆலயம், குச்சிலியம்பட்டி
5. புனித பெரியநாயகி ஆலயம், செங்குளம்
6. புனித செபஸ்தியார் ஆலயம், குமரப்பட்டி
பங்குத்தந்தை அருள்பணி. R. மைக்கிள் ஜோ
குடும்பங்கள்: 400 (கிளைப்பங்குகள் சேர்த்து)
அன்பியங்கள்: 11 (கிளைப்பங்குகள் சேர்த்து)
வழிபாட்டு நேரங்கள்:
ஞாயிறு திருப்பலி காலை 08:15 மணி
வாரநாட்களில் திருப்பலி காலை 06:15 மணி
சனிக்கிழமை மாலை 06:15 மணி செபமாலை, திருப்பலி, நற்கருணை ஆசீர், எண்ணெய் பூசி செபித்தல்
மாதத்தின் 13-ம் தேதி பாத்திமாவில் அன்னை மரியாவின் காட்சி நினைவு: மாலை 06:15 மணி திருப்பலி, நவநாள், செபமாலை பவனி, நற்கருணை ஆசீர், உறவின் விருந்து
மாதத்தின் முதல் வியாழன் மாலை 06:15 மணி திருப்பலி, நற்கருணை ஆராதனை (ஒரு மணி நேரம்)
திருவிழா: மே மாதம் 13-ம் தேதி
மண்ணின் இறையழைத்தல்கள்:
1. அருள்தந்தை. லாரன்ஸ், திருச்சிலுவை சபை
2. அருள்சகோதரர். கிறிஸ்டோபர், புனித பேட்ரிக் சபை
3. அருள்சகோதரி. வனிதா, புனித அன்னாள் சபை
4. அருள்சகோதரி. ஜெசிந்தா ஆரோக்கிய மேரி, மரியின் ஊழியர் சபை
5. அருள்சகோதரி. சவரின், மரியின் ஊழியர் சபை
6. அருள்சகோதரி. அமலோற்பவ மேரி, மரியின் ஊழியர் சபை
7. அருள்சகோதரி. பாத்திமா ராணி, பிரான்சிஸ்கன் புனித தோமையார் சபை
8. அருள்சகோதரி. மரிய ஜாக்குலின், புனித காணிக்கை அன்னை சபை
9. அருள்சகோதரி. லில்லி மேரி, புனித காணிக்கை அன்னை சபை
10. அருள்சகோதரி, சவரின்
Map location: Our Lady of Fatima Church - Fathima Nagar
https://maps.app.goo.gl/cdicfEYhbKfTHc628
வரலாறு:
தொடக்க காலத்தில் பாத்திமா நகரில் அமைந்த திருக்குடும்ப மருத்துவமனையில் அமைந்திருந்த சிற்றாலயத்தில், மருத்துவமனையில் பணிபுரிந்த அருள்தந்தையர்களால் திருப்பலி நிறைவேற்றப்பட்டு வந்தது. பாத்திமா நகர் மக்கள் இத்திருப்பலியில் பங்கேற்று வந்தனர். மக்களின் ஆன்மீகத் தேவையைக் கருத்தில் கொண்டு, பாத்திமா நகர் பங்கு உருவாக மறைமாவட்டம் தீர்மானம் செய்தது.
அதன்படி அம்மாபேட்டை பங்கின் கிளைப் பங்காக இருந்த வடக்கு சேதுராபட்டி, குச்சிலியம்பட்டி, செங்குளம் ஆகியவற்றையும், ஜெருசலேம்நகர் பங்கின் கிளைப்பங்குகளான அளுந்தூர், குமரப்பட்டி ஆகியவற்றையும் பிரித்து 13.06.1988 பாத்திமாநகர் பங்கு முறைப்படி உருவாக்கப்பட்டது. இதற்கு முன்னர் 1978 ஆம் ஆண்டிலேயே பாத்திமாநகர் தேர்வுநிலைப் பங்காக பங்குத்தந்தையர்களின் வழிகாட்டலில் செயல்பட்டு வந்தது.
புதிய ஆலயமானது கட்டப்பட்டு 13.08.1988 அன்று திருச்சிராப்பள்ளி மறைமாவட்ட ஆயர் மேதகு தாமஸ் பெர்னாண்டோ அவர்களால் திறந்து வைக்கப்பட்டு, மதுரை உயர் மறைமாவட்ட மேனாள் ஆயர் மேதகு ஜஸ்டின் திரவியம் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. இதே நாளில் பங்குத்தந்தை இல்லமும் திருச்சிராப்பள்ளி மறைமாவட்ட ஆயர் மேதகு தாமஸ் பெர்னாண்டோ அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.
ஆலய கோபுரம், ஆலய முகப்பு ஆகியவற்றை புதுப்பித்து அருள்பணி. ஜான் அந்தோனி (தமிழக கப்புச்சின் அதிபர்), பேரருள்பணி. R. V. மத்தியாஸ் (முதன்மை குரு, திருச்சி), அருள்பணி. M. ஜோசப் OFM Cap பங்குத்தந்தை, அருள்பணி. கிறிஸ்டோபர் உதவி பங்குத்தந்தை ஆகியோர் முன்னிலையில் ஆயர் மேதகு அந்தோனி டிவோட்டோ அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
ஆலயமானது புதுப்பிக்கப்பட்டு, பங்குதந்தை அ. கபிரியேல் முன்னிலையில், மேதகு ஆயர் தாமஸ் பால்சாமி அவர்களால் 03.05.2019 அன்று அர்ச்சிக்கப்பட்டது.
பாத்திமா மாதா மக்கள் மன்றத்திற்கு அருள்பணி. சாமிநாதன் முன்னாள் இயக்குநர், கலைக்காவிரி, திருச்சி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் நிறைவு பெற்று திருச்சி மறைமாவட்ட மேதகு ஆயர் ச. ஆரோக்கிய ராஜ் அவர்களால் 15.05.2022 அன்று பங்குத்தந்தை அருள்பணி. கபிரியேல் முன்னிலையில் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.
நிறுவனங்கள்- பள்ளிகள்:
புனித வளனார் தொடக்கப்பள்ளி, பாத்திமா நகர்.
மரியின் ஊழியர் அருள் சகோதரிகள்:
சிறுவர் காப்பகம், பல்நோக்கு சுகாதார செவிலியர் பயிற்சிபள்ளி, திருக்குடும்ப மருத்துவமனை, Power Loom
திருச்சிலுவை அருள் தந்தையர்:
திருச்சிலுவை இளம் குருமடம்
புனித பேட்ரிக் அருள் சகோதரர்கள்:
புனித பேட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புனித பேட்ரிக் CBSE மேல்நிலைப்பள்ளி, அளுந்தூர்
புனித தோமையார் அருள் சகோதரிகள்:
தலைமையகம், தூய தாமஸ் அன்பு இல்லம், மாணவர்- மாணவியர் விடுதி, பாத்திமா நகர்;
கன்னியர் இல்லம் -குமரப்பட்டி;
மருந்தகம் - கல்குளத்துப்பட்டி
புனித இறை யோவான் அருள் சகோதரர்கள்: பாத்திமா நகர் - சாந்தி நிலையம்
புனித இறை யோவான் அருள் சகோதரிகள்: பெண்கள் மனநலம் குன்றியவர் இல்லம், சேதுராப்பட்டி.
பணிக்குழுக்கள்:
1. பங்குப் பேரவை
2. பீடச்சிறார்கள்
3. பாலர் சபை
4. மறைக்கல்வி மாணவர்கள்
5. பாத்திமா இளைஞர் -இளம்பெண்கள் இயக்கம்
6. பெண்கள் பணிக்குழு
7. புனித வின்சென்ட் தே பவுல் சபை
பங்கில் பணியாற்றிய அருள் தந்தையர்கள் பட்டியல்:
Fr. M. Pinto
Fr. M. Francis (1961-75)
Fr. A. Gnana Pragasam (1976-84)
Fr. S. Philomenraj (1984-88)
பங்குத்தந்தையர்கள்:
Fr. A. Jeyaraj (1988-90)
Fr. I. Jesuraj (1991-95)
Fr. Mathias, Ofm. Cap (1995-96)
Fr. I. Jacob Ofm. Cap (1996-99)
Fr. M.Joseph Ofm. Cap (1999-2002)
Fr. Arul Doss Ofm. Cap (2002-2004)
Fr. P. Thomas Paulsamy (Bishop of Dindigul) (2004-07)
Fr. A. Soosai Alangaram (2007-11)
Fr. A. Susai Raj (3 Months) 2011-
Fr. S.Joseph (6 Months) (2011-2012)
Fr. Vincent Joseph (2012-17)
Fr. Gabriel (2017-22)
Fr. R. Michael Joe (2022-2027)
தூய பாத்திமா மாதாவின் ஆலயம் வாருங்கள்... மாதாவின் வழியாக இறைவனின் ஆசி பெற்றுச் செல்லுங்கள்..
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருள்பணி. R. மைக்கிள் ஜோ அவர்கள்.





