977 புனித ஆரோக்கிய மாதா ஆலயம், கருங்கடல்

    

புனித ஆரோக்கிய மாதா ஆலயம்

இடம்: கருங்கடல், 628613

மாவட்டம்: தூத்துக்குடி

மறைமாவட்டம்: தூத்துக்குடி

மறைவட்டம்: சாத்தான்குளம் 

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்குகள்

1. புனித சந்தன மாதா ஆலயம், கட்டாரிமங்கலம்

2. புனித அந்தோனியார் ஆலயம், சின்னமாடன்குடியிருப்பு

பங்குத்தந்தை அருட்பணி. பாக்கிய ஜோசப் ராஜ்

குடும்பங்கள்: 104

அன்பியங்கள்: 4

1. புனித இரண்டாம் ஜான் பால் அன்பியம்

2. புனித பவுஸ்தினா அன்பியம்

3. புனித அன்னை தெரசா அன்பியம்

4. புனித ஆஸ்கர் ரொமைரோ அன்பியம்

ஞாயிறு காலை 07:00 மணி ஜெபம், திருப்பலி

நாள்தோறும் காலை 05:45 மணி ஜெபம், திருப்பலி

திருவிழா: செப்டம்பர் மாதம் 08- ஆம் தேதி 

மண்ணின் இறையழைத்தல்:

Rev. Sr. Jeya Mary Jolis, Servite

வழித்தடம்: சாத்தான்குளத்திற்கும் பேய்குளத்திற்கும் இடையில் கருங்கடல் அமைந்துள்ளது.

Map location: Karungadal Arokiya Madha Church

https://maps.app.goo.gl/h2tm5iS5ybb5A3hL7

பங்கின் வரலாறு:

கருங்கடல் தூய ஆரோக்கிய அன்னை ஆலயம் அமைந்துள்ள பகுதி தொடக்க காலத்தில் மாயகொத்தனேரி என அழைக்கப்பட்டுள்ளது. இங்கு வாழ்ந்த மக்கள் விவசாயம் மற்றும் பனையேறுதல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். பனை ஓலையால் அக்காலத்தில் ஆலயம் அமைந்திருந்தது. ஒரு மழைக்காலத்தில் மாயகொத்தனேரிக்கு வந்த ஆங்கிலேயர்கள் சிலர், ஊரைச்சுற்றிய கரிசல்மண் நிலப்பரப்பில் கடல்போல் நீர் சூழ்ந்திருந்ததைக் கண்டு ‘கருங்கடல்’ என்று அழைக்க, பின்பு அதுவே ஊரின் பெயராய் நிலைத்தது.

ஆரோக்கிய அன்னையின் புதுமை சுரூபம் மேதகு ஆயர் ரோச் அவர்களால் மேல்நாட்டிலிருந்து 1920களில் வருவிக்கப்பட்டு திருநிலைப்படுத்தப்பட்டது. தொடக்க காலத்தில் சோமநாதபேரியின் கிளைப்பங்காக கருங்கடல் இருந்தது. சோமநாதபேரி பங்குதந்தை அருட்தந்தை கபிரியேல் (1924-1946) இன்றைய ஆரோக்கிய அன்னையின் ஆலயத்திற்கு 1942ல் அடிக்கல் நாட்டினார். அவரைத் தொடர்ந்து பணியாற்றிய அருட்தந்தை ஞானப்பிரகாசம் (1946-1951) அவர்களால் ஆலய கட்டமைப்புப் பணிகள் நிறைவுபெற்று ,1949ல் மேதகு ஆயர் பிரான்சிஸ் திபூர்சியஸ் ரோச் அவர்களால் புனிதப்படுத்தப்பட்டது.

சிந்தாமணி மற்றும் சாத்தான்குளத்தின் கிளைப்பங்காக கருங்கடல் சிலகாலம் இருந்தபோது, அங்கிருந்து வந்த குருக்கள் மக்களின் ஆன்மீகத் தேவைகளை நிறைவேற்றினர். 1993ல் ஆலயத்தின் முன்பு கொடிமரம் புதுப்பிக்கப்பட்டு அமைக்கப்பட்டது.

செப்டம்பர் 2, 1995 ல் நொச்சிகுளம் பங்காக உருவானபோது, கருங்கடல் அதன் கிளைப்பங்கானது. அதன் முதல் பங்குத்தந்தை சூசைராஜா (1995-2001) பங்கின் பொன்விழாவை முன்னிட்டு 1999ல்  ஆலயத்தின் முன்புறம் மணிமண்டபமும், சாலையும் உருவாக்கினார். அருட்தந்தை அமலன் (2001-2006), அருட்தந்தை கிஷோக் (2006-2011), அருட்தந்தை மைக்கிள் ஜெகதீஸ் (2011-2013), அருட்தந்தை ஜான் போஸ்கோ (2013-2018) ஆகியோரின் பணிக்காலத்தில் இவ்வூர் பல்வேறு வளர்ச்சிகளைக் கண்டது. அருட்பணி. ஜான் போஸ்கோ பணிக்காலத்தில், திரு. A. பால்ராஜ் அவர்களின் நிதிபங்களிப்புடன் நுழைவு வாயில் கட்டப்பட்டு, 07.09.2013

திறந்து வைக்கப்பட்டது.

அருட்தந்தை ஜான் பால் லோபோ (2018-2021) அவர்களின் பணிக்காலத்தில் செப்டம்பர் 8, 2021ல் மேதகு ஆயர் ஸ்டீபன் அவர்களால் நொச்சிகுளத்திலிருந்து பிரிக்கப்பட்டு, கருங்கடல் தனிப் பங்காகத் திருநிலைப்படுத்தப் பட்டது. சி.சவேரியார்புரம் பங்கிலிருந்து கட்டாரிமங்கலம் மற்றும் சின்னமாடன்குடியிருப்பு ஆகிய ஊர்கள் கருங்கடலின் இணைப்பங்குகளாகின. அருட்தந்தை பாக்கிய ஜோசப்ராஜ் அவர்கள் முதல் பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டு, பங்கினை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்தி வருகின்றார்.

பங்குத்தந்தை அருட்பணி. பாக்கிய ஜோசப்ராஜ் அவர்களின் வழிகாட்டலில், மக்களின் ஒத்துழைப்பு மற்றும் நன்கொடைகளால் ஆலயமானது அழகுற புதுப்பிக்கப்பட்டு, 30.08.2023 அன்று மேதகு ஆயர் ஸ்டீபன் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

பங்குத்தந்தை இல்லம் (ஆரோக்கிய அன்னை இல்லம்) கட்டப்பட்டு, 04.02.2024 அன்று மறைமாவட்ட முதன்மைக் குரு பேரருட்தந்தை பன்னீர் செல்வம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

அன்னையின் பிறந்த நாளாம் செப்டம்பர் 8ல் மக்கள் ஆரோக்கிய தாய்க்கு தொன்றுதொட்டு விழா எடுக்கின்றனர். 1970லிருந்து திருவிழாவுக்கு அடுத்த நாள் அசனம் அளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

கருங்கடல் கெபியின் வரலாறு:

திரு. அந்தோனிராஜ் -அருள்மணி குடும்பத்தினரால், ஒரு தீவிபத்தில் இறந்த அவர்களது ஐந்து வயது மகள் நிர்மலா பொற்செல்வியின் நினைவாக கெபி ஒன்று 

ஆகஸ்ட் 8, 2001 அன்று கட்டப்பட்டது. மூன்று அடுக்குகளாக அமைந்திருக்கும் இக்கெபியில் மேலே அற்புத குழந்தை இயேசுவும், நடுவில் புனித அந்தோணியாரும், கீழ்தளத்தில் புனித ஆரோக்கிய அன்னையின் சுரூபமும் உள்ளது. 2002-ம் ஆண்டு கெபி விரிவாக்கப்பட்டு இன்றைய தோற்றத்தை அடைந்துள்ளது. ஆண்டுதோறும் கெபி திறந்த நாளாகிய மார்ச் 24ல் மக்கள் திருவிழா எடுத்து, அசனம் வழங்கி கொண்டாடுகின்றனர். வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு செபமாலையும் அதன்பின் திருப்பலியும் நடைபெறுகிறது.

பங்கின் பங்கேற்பு அமைப்புக்கள்:

1. பாலர் சபை

2. நற்கருணை வீரர்சபை

3. புனித அந்தோனியார் சபை

4. புனித அமலோற்பவ மாதா சபை

5. திருக்குடும்ப சபை

6. புனித வளனார் சபை

7. மரியாயின் சேனை

8. கோல்பிங் இயக்கம்

9. இளையோர் இயக்கம்

10. மறைக்கல்வி.

 கருங்கடல் புனித ஆரோக்கிய அன்னையிடம் வாருங்கள்... வேண்டும் வரங்களையும், நலன்களையும் பெற்றுச் செல்லுங்கள்..

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குதந்தை அருட்பணி.‌ பாக்கிய ஜோசப்ராஜ் அவர்கள்.