1001 புனித அந்தோனியார் ஆலயம், செங்குளம்

   

புனித அந்தோனியார் ஆலயம்

இடம்: செங்குளம்

மாவட்டம்: திருநெல்வேலி

மறைமாவட்டம்: தூத்துக்குடி

மறைவட்டம்: சாத்தான்குளம்

நிலை: கிளைப்பங்கு

பங்கு: புனித சவேரியார் ஆலயம், சி. சவேரியார்புரம்

பங்குத்தந்தை அருட்பணி. ரெமிஜியுஸ் எஸ். லியோன்

குடும்பங்கள்: 5

திருப்பலி செவ்வாய்க்கிழமை மாலை 07:00 மணி

திருவிழா: மே மாதத் தொடக்கத்தில் 13  நாட்கள்

வழித்தடம்: பேய்குளம் -முனஞ்சிப்பட்டி வழித்தடத்தில் செங்குளம் அமைந்துள்ளது.

Church Map Location: St Antony's Church, Sengulam

https://maps.app.goo.gl/JscK5JrhUTJd8F5J6

வரலாறு:

சோமநாதபேரி பங்கிற்கு உட்பட்ட செங்குளம் ஊரில், 1940 ஆம் ஆண்டில் புனித அந்தோனியாரின் பெயரில் சிறிய ஓலைக்குடிசை ஆலயம் கட்டப்பட்டது. பின்னர் அருட்தந்தை. ஞானப்பிரகாசம் அவர்களது முயற்சியால் 1947 ஆம் ஆண்டு கல் கட்டிடத்தால் ஆன சிற்றாலயம் கட்டப்பட்டு, தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு ரோச் ஆண்டகையால் அர்ச்சிக்கப்பட்டது. 1950 ஆம் ஆண்டு சிந்தாமணி தனிப்பங்கான போது, செங்குளம் ஆலயமானது, சிந்தாமணி பங்கின் கிளைப்பங்காக மாற்றப்பட்டது.

1999 ஆம் ஆண்டு சி.சவேரியார்புரம் தனிப்பங்காக உருவானபோது, செங்குளம் அதன் கிளைப் பங்காக மாற்றம் பெற்றது. 2007 ஆம் ஆண்டு பங்குதந்தை அருட்பணி. ஆரோக்கியதாஸ் அவர்களின் முயற்சியால் ஆலயமானது புதுப்பிக்கப்பட்டு, ஆலய முன்புற மண்டபமும் அமைக்கப்பட்டது. மாணவர்கள் இரவு நேரத்தில் தங்களது வீட்டில் அமர்ந்து படிக்க போதிய வசதியில்லாத காரணத்தால், இந்த மண்டப பகுதியானது அவர்களின் படிப்பிற்காக பயன்படுத்தப் படுகின்றது.

1947 ஆம் ஆண்டு முதல் செங்குளம் ஆலயத்தில் திருவிழா கொண்டாடப்படாமலே இருந்து வந்தது. அருட்பணி. ஆரோக்கியதாஸ் அவர்களின் முயற்சியால் 2007 ஆம் ஆண்டு மே மாதத்தில் முதன் முதலாக திருவிழா கொண்டாடப்பட்டது. அதன்பின் இன்றுவரை ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் பத்து நாட்கள் திருவிழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

இறைவனின் பாதுகாப்பில், பங்குத்தந்தையர்களின் வழிகாட்டலில், ஆன்மீகப் பாதையில் பயணித்து வருகிறது செங்குளம் இறைச்சமூகம்.

தகவல்கள்: பங்குத்தந்தை ரெமிஜியுஸ் S. லியோன் அவர்கள்.

புகைப்படங்கள்: சகோதரர். ஜிம் எலியட் பிரேம்குமார், பாளையங்கோட்டை.

ஆலய வரலாறு: சி.சவேரியார்புரம் பங்கு ஆலய வெள்ளிவிழா மலர் 2024.