980 புனித சந்தியாகப்பர் ஆலயம், மருதாசிபுரம்

  

புனித சந்தியாகப்பர் ஆலயம்

இடம்: மருதாசிபுரம், நல்லாம்பட்டி (P.O), 624003

மாவட்டம்: திண்டுக்கல்

மறைமாவட்டம்: திண்டுக்கல்

மறைவட்டம்: திண்டுக்கல்

நிலை: கிளைப்பங்கு

பங்கு: புனித வனத்து சின்னப்பர் ஆலயம், VC குருசடி

பங்குத்தந்தை அருட்பணி. ரூபன் ஞானசேகரன்

குடும்பங்கள்: 55

அன்பியங்கள்: 2

மாதத்தின் முதல் வெள்ளி மாலை 07:00 மணி நவநாள் திருப்பலி

மாதத்தில் 15 நாட்களுக்கு ஒருமுறை புதன் மாலை 07:30 மணி திருப்பலி

திருவிழா: ஆடி மாதம் முதல் வெள்ளி, சனி, ஞாயிறு (ஜூலை மாதத்தில்)

மண்ணின் இறையழைத்தல்:

அருட்சகோதரி. வின்சி, Cluny

வழித்தடம்: திண்டுக்கல் -வெள்ளோடு வழித்தடத்தில், 3கி.மீ தொலைவில் மருதாசிபுரம் அமைந்துள்ளது.

Location map: St. James Church

https://maps.app.goo.gl/Bxwjqp4uiog96bhR9

ஆலய வரலாறு:

96 பட்டிகளின் தாயகமாய் விளங்கிய மேட்டுப்பட்டியில் வசித்து வந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்களில் சிலர் விவசாயம் செய்யும் பொருட்டு மருதாசிபுரத்தில் குடியேறினர். 

குடியேறிய மக்கள் தங்களுக்கு ஒரு ஆலயம் தேவையென்பதை உணர்ந்து, 1988-89 காலகட்டத்தில் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, மேட்டுப்பட்டி பங்கின் கீழ் செயல்பட்டு வந்தது. 

1990 ஆம் ஆண்டில் வி.சி குருசடி பங்கு உருவான போது, அதன் கிளைப் பங்காக மருதாசிபுரம் மாற்றப் பட்டது. புனித சந்தியாகப்பர் ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று 27.07.1998 அன்று வி.சி குருசடி பங்குதந்தை அருட்பணி. A. பீட்டர் ஜான் அவர்களால் அர்ச்சித்து, திறந்து வைக்கப்பட்டது. 

திருவிழா காலங்களில் நடைபெறும் தேர்பவனி மற்றும் சமபந்தி விருந்து ஆகியவற்றில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாதி மத பேதமின்றி கொண்டாடி வருவது சிறப்பு. 

புனித சந்தியாகப்பர் மருதாசிபுரம் இறைமக்களை கண்ணின் மணி போல பாதுகாத்து வழிநடத்தி வருவதால், இவ்வாலயம் வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறது..

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: ஆலய பொருளாளர் திரு. ஞான அருள்ராஜ் அவர்கள்.