986 புனித செபஸ்தியார் ஆலயம், வடக்கன்குளம்

   

புனித செபஸ்தியார் ஆலயம்

இடம்: வடக்கன்குளம்

மாவட்டம்: திருநெல்வேலி

மறைமாவட்டம்: தூத்துக்குடி

மறைவட்டம்: வடக்கன்குளம்

நிலை: சிற்றாலயம்

பங்கு: பரிசுத்த புதுமை பரலோக அன்னை திருத்தலம், வடக்கன்குளம்

பங்குத்தந்தை பேரருள்தந்தை மார்ட்டின் மனுவேல்

உதவி பங்குத்தந்தை அருள்தந்தை G. பிரதாப் 

சகோ. K. ஜெர்மான்ஸ்

களப்பணியாளர்

திருப்பலி: வெள்ளிக்கிழமை மாலை 05:30 மணி 

திருவிழா: ஜனவரி மாதம் 11-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை.

வழித்தடம்: திருநெல்வேலி -காவல்கிணறு விலக்கு -வடக்கன்குளம்.

Location map: St. Sebastian Church

https://maps.app.goo.gl/TrPJ6z4hdV4Tasnu8

சிற்றாலய வரலாறு:

நர்போன் பட்டண போராளி. இத்தாலி நாட்டின் அதிசயம் என்று புகழப்பட்டவர் புனித செபஸ்தியார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் அனுமன் நதியின் கரையோரம் வடக்கன்குளத்தின் வடகிழக்கு எல்லையில் 11 குடும்பங்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் கத்தோலிக்க திருஅவையைத் தழுவி வாழ்ந்து வந்தனர். பங்கு ஆலயம் தொலைவில் இருந்ததால், தங்கள் இருப்பிடத்தின் அருகில் ஒரு ஆலயம் இவர்களுக்கு தேவையானதாக இருந்தது. எனவே அப்பகுதியிலுள்ள பெரியோர்களால் ஒரு குருசடி நிறுவப்பட்டது. மக்களின் பக்தி முயற்சியால் அப்பகுதியில் கிறிஸ்தவம் தழைத்து வளர்ந்தது.

இருபதாம் நூற்றாண்டின் இறுதியில், இலங்கையில் வேலை பார்த்து வந்த அப்பகுதியைச் சேர்ந்த சிலர், வடக்கன்குளத்தில் புனித செபஸ்தியார் ஆலயம் கட்டுவதற்காக, மாதந்தோறும் அவர்களுடைய ஊதியத்திலிருந்து ஒரு தொகையை நன்கொடையாகக் கொடுத்தனர். தொடர்ந்து 1929ம் ஆண்டு ஒரு சிறிய செபஸ்தியார் சிற்றாலயத்தைக் கட்டி வழிபட்டு வந்தனர். ஆலயத் தெருவின் கீழ்க்கோடியில் ஒரு சாவடியும் கட்டி, மக்கள் பயன்பாட்டுக்குக் கொடுக்கப்பட்டது.

நாளடைவில் சிற்றாலயம் சேதமடைந்ததால், புதிய ஆலயம் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. ஆலயத் தலைவாசல் தெருவுக்கு நேராக இருக்கும்படி புதிய ஆலயமானது கட்டப்பட்டு, அன்றைய பங்குத்தந்தை மறைதிரு. மரிய ஞானம் அவர்களால் 03.09.1974 அன்று அர்ச்சிக்கப்பட்டு, திருப்பலியும் நிறைவேற்றப்பட்டது.

1974-ம் ஆண்டு கட்டப்பட்ட ஆலயமும் சிதிலம் அடைந்ததால், புதிய ஆலயம் அருட்தந்தை தியோபிலஸ் அடிகளாரின் முயற்சியால் கட்டப்பட்டு, 28.04.2003ல் அர்ச்சிக்கப்பட்டது. ஏறக்குறைய நான்குமுறை இடமாற்றம் செய்யப்பட்டு, தற்போதைய இடத்தில் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. 

புனித செபஸ்தியார் வழியாக எண்ணற்ற புதுமைகள் நடைபெற்று, ஏராளமான மக்கள் நலம்பல பெற்றுள்ளனர் என்பதற்கு, இவ்வாலய திருவிழா கூட்டமே உண்மையான சாட்சி. 

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் சேகரிப்பு : வடவை கத்தோலிக்க கூட்டமைப்பு, வடக்கன்குளம்.

தகவல்கள் சேகரிப்பில் உதவி: கட்டளை S. பென்கர், வடக்கன்குளம்.