புனித சவேரியார் ஆலயம்
இடம் : சவேரியார்பாளையம், கொளத்தூர் (Via.) - 636303
மாவட்டம் : சேலம்
மறைமாவட்டம் : சேலம்
மறைவட்டம் : மேட்டூர்
நிலை : பங்குத்தளம்
கிளைப்பங்குகள்:
1. புனித பெரியநாயகி அன்னை திருத்தலம், பூமனூர்
2. திருஇருதய ஆண்டவர் ஆலயம், பூமனூர்
சிற்றாலயங்கள் மற்றும் கெபிகள்:
1. புனித வனத்து அந்தோணியார் சிற்றாலயம், சிலுவைப்பாளையம்
2. புனித பதுவை அந்தோணியார் சிற்றாலயம், காவேரிபுரம்
3. புனித பனிமய மாதா சிற்றாலயம், மேடுதானப்பட்டி
4. புனித வனத்து சின்னப்பர் கெபி, கூழ்கரடு
5. புனித ஆரோக்கிய அன்னை கெபி, கொசக்கரடு
6. புனித லூர்து அன்னை கெபி, கருங்கரடு
7. புனித மரிய மதலேனாள் கெபி, மோளப்பாறையூர்
பங்குத்தந்தை: அருள்பணி. A. சிங்கராயன், மேட்டூர் மறைவட்ட முதன்மை குரு
உதவிப்பங்குத்தந்தை: அருள்பணி. A. எட்வின் சைமன்
குடும்பங்கள்: 537
அன்பியங்கள்: 10
திருவழிபாட்டு நேரங்கள் :
ஞாயிறு : காலை 08.00 மணிக்கு திருப்பலி
திங்கள் முதல் வெள்ளி வரை : காலை 06.30 மணிக்கு திருப்பலி
சனி : மாலை 06.30 மணிக்கு திருப்பலி
மாதத்தின் முதல் வெள்ளி : மாலை 06.30 மணிக்கு திருப்பலி மற்றும் நற்கருணை ஆராதனை
கெபி & சிற்றாலய திருப்பலி நேரங்கள்:
மேடுதானப்பட்டி புனித பனிமய அன்னை சிற்றாலயம்:
மாதத்தின் முதல் மற்றும் மூன்றாம் ஞாயிறு : மாலை 06.30 மணிக்கு திருப்பலி
சிலுவைப்பாளையம் புனித வனத்து அந்தோணியார் சிற்றாலயம்:
மாதத்தின் முதல் மற்றும் மூன்றாம் செவ்வாய் : மாலை 07.00 மணிக்கு திருப்பலி
காவேரிபுரம் புனித பதுவை அந்தோணியார் சிற்றாலயம்:
மாதத்தின் இரண்டாம் செவ்வாய் : மாலை 05.30 மணிக்கு திருப்பலி
கூழ்கரடு புனித வனத்து சின்னப்பர் கெபி:
மாதத்தின் இரண்டாம் வெள்ளி : மாலை 06.00 மணிக்கு திருப்பலி
கருங்கரடு தூய லூர்து அன்னை கெபி:
மாதத்தில் ஒரு முறை : மாலை 06.30 மணிக்கு திருப்பலி
மோளப்பாறையூர் புனித மரிய மதலேனாள் கெபி:
ஜூலை மாதத்தில் ஒரு நாள் : காலை 11.00 மணிக்கு திருப்பலி
கொசக்கரடு புனித ஆரோக்கிய அன்னை கெபி:
செப்டம்பர் மாதத்தில் ஒரு நாள் : காலை 11.00 மணிக்கு திருப்பலி
திருவிழா: டிசம்பர் 3 (அல்லது) அதையொட்டி வருகிற ஞாயிறு
மண்ணின் இறையழைத்தல்கள்:
அருள்பணியாளர்கள்:
1. அருள்பணி. தாமஸ்செல்வம், SDB
2. அருள்பணி. தோமினிக், தர்மபுரி
3. அருள்பணி. அமிர்தநாதன், வேலூர்
4. அருள்பணி. தோமினிக் ராஜா, தர்மபுரி
5. அருள்பணி. சிலுவை முத்து, SDB
6. அருள்பணி. லாரன்ஸ், மேற்கு வங்காளம்
7. அருள்பணி. ஆசைத்தம்பி, சேலம்
8. அருள்பணி. இஞ்ஞாசிமுத்து, சேலம்
9. அருள்பணி. பால் ஆண்ட்ரூ, OCD
10. அருள்பணி. ஜான்சன், CRS
11. அருள்பணி. லியோ ஜெயராஜ், MMI
அருள்சகோதரிகள்:
1. அருள்சகோதரி. கிரசென்சியா, FSJ
2. அருள்சகோதரி. மேரி நிர்மலா, SMMI
3. அருள்சகோதரி. சந்தன மேரி, Cluny
4. அருள்சகோதரி. ஆக்னஸ் குட்டி, FSJ
5. அருள்சகோதரி. லீமாரோஸ், L.S.P
6. அருள்சகோதரி. பிலோமினாள், Servites
7. அருள்சகோதரி. பாத்திமா, FSJ
8. அருள்சகோதரி. மேக்டலீனா, FSM
9. அருள்சகோதரி. குளோரியா மேரி, Salesian
10. அருள்சகோதரி. இஞ்ஞாசியம்மாள், IHM
11. அருள்சகோதரி. பிரிட்டோலின் மேரி, FSGS
12. அருள்சகோதரி. வசந்தா ஆஞ்சலா
13. அருள்சகோதரி. ஜெயம்மாள், Servites
14. அருள்சகோதரி. இருதயமேரி, DMI
அருள்சகோதரர்கள்:
1. அருள்சகோதரர். ஆரோக்கிய சாமி, MONTFORT
2. அருள்சகோதரர். அந்தோணி முத்து, MONTPORT
3. அருள்சகோதரர். இயேசுராஜ், MONTPORT
4. அருள்சகோதரர். பன்னீர்செல்வம், MONTPORT
5. அருள்சகோதரர். சகாயராஜ், MONTFORT
6. அருள்சகோதரர். கபிரியேல், MONTFORT 🪴7. திருத்தொண்டர். ஆசீர்வாதம் (சேலம், நிரந்தரத் திருத்தொண்டர்)
வழித்தடம் : சேலம் - மேட்டூர் - கொளத்தூர் - சவேரியார்பாளையம்
(மேட்டூரில் இருந்து மாதேஸ்வரன் மலை செல்லும் சாலையில், 13 கி.மீ தொலைவில் கொளத்தூர். அங்கிருந்து பவானி செல்லும் சாலையில் 1 கி.மீ தொலைவில் சவேரியார்பாளையத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது.)
Church Location : https://maps.app.goo.gl/WDWFgH7r956iRg7L9
பங்கு ஆலய வரலாறு :
மறைந்த சிங்கராயர் சுவாமிகளின் ஆய்வுப்படி, சவேரியார்பாளையம் பழங்குடி கிறிஸ்தவ மக்கள், ஏறக்குறைய 300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கிழக்கே வங்கக்கடற்கரை பகுதியிலிருந்து வெளியேறி, கொஞ்சம் கொஞ்சமாக மேற்கு நோக்கி நகர்ந்து, சவேரியார்பாளையம் வட்டாரத்தில் மலைப்பகுதியில் இருந்த காடுகளை அழித்து 20 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் குடியேறினார்கள்.
சவேரியார்பாளையம் பெயர்க்காரணம் :
தற்போதுள்ள சவேரியார்பாளையம் என்ற ஊர் நிலப்பகுதி, கோவை மறைமாவட்ட ஆயர் இராய் அவர்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் மக்களின் குடியிருப்பானது, செங்கல்மேட்டு பகுதியில் இருந்துள்ளது. இப்பகுதி தாழ்வான பகுதி என்பதால், மழைக்காலங்களில் நீர் தேங்கி, நோய்கள் பரவி பலர் இறந்துள்ளனர். எனவே, இப்பகுதி பாதுகாப்பற்றது என்றுணர்ந்து, தற்போதுள்ள மேடான பகுதிக்கு இடம்பெயர்ந்தனர். இப்பகுதியில் குடியேறிய பிறகு, புனித சவேரியாரின் பெயரில் சிற்றாலயம் கட்டப்பட்டது. எனவே, இப்பகுதிக்கு சவேரியார்பாளையம் என்ற பெயர் சூட்டப்பட்டது.
1890 ஆம் ஆண்டில் புனித சவேரியாரை பாதுகாவலராகக் கொண்டு உருவான இப்பங்குத்தளம், ஆரம்பத்தில் நாயம்பாடியை மையமாகக் கொண்டிருந்தது. நாயம்பாடி பகுதிவாழ் மக்கள், காவிரி ஆற்றின் வெள்ளப்பெருக்கின் காரணமாக, சவேரியார்பாளையத்தை மையமாகக் கொண்டு மேட்டுப்பகுதியில் தங்கள் இல்லங்களை அமைத்து வாழத் தொடங்கினர். இங்கிருந்த பெரும்பாலான மக்கள், மீண்டும் தெற்கே மைசூர் மாவட்டத்தில் மார்ட்டள்ளி, ஒட்டர்தொட்டி, சந்தனப்பாளையம், கொத்தனூர், சேகியம், உனசனள்ளி, தோமையார்பாளையம், பிரகாசபாளையம், ஜக்கள்ளி, கௌதள்ளி, யேசுராஜபுரம் போன்ற பல ஊர்களில் குடியேறி, அத்தனை பங்குகளையும் உருவாக்கியுள்ளனர்.
அருள்பணி. கேமார்ட் (1904-1909) சவேரியார்பாளையத்தில் ஒரு பெரிய அறைவீடு கட்டினார். 1910 ஆம் ஆண்டில் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 1924 ஆம் ஆண்டில் இந்த ஆலயம் கட்டிமுடிக்கப்பட்டது.
1943 ஆம் ஆண்டு வரை மைசூர் மறைப்பணித்தளத்தைச் சேர்ந்த பெரியகொடிவேரி பங்கின் ஒரு பகுதியாக இருந்த சவேரியார்பாளையம், சேலம் மறைமாவட்டத்துடன் சேர்க்கப்பட்டது.
அருள்பணி. S. பிரான்சிஸ் சேவியர் (1994-1998) அவர்களால் புதிய பங்குத்தந்தை இல்லம் கட்டப்பட்டு, 06.12.1997 அன்று திறந்துவைக்கப்பட்டது.
2012 ஆம் ஆண்டு அருள்பணி. V. ஜெய் பெர்னார்ட் ஜோசப் அவர்களால் இவ்வாலயம் புதுப்பிக்கப்பட்டது.
தற்போது அருள்பணி. A. சிங்கராயன் அவர்கள் 2022 ஆம் ஆண்டு முதல் பங்குத்தந்தையாக சிறப்பாக பணியாற்றி வருகிறார்.
புனித வனத்து அந்தோணியார் சிற்றாலயம், சிலுவைப்பாளையம்:
சிலுவைப்பாளையம் ஏறத்தாழ 80 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய காலனியாக, சுமார் 10 கிறிஸ்துவக் குடும்பங்களும் மற்றும் பிற மத சகோதரர்களும் வாழ்ந்து வந்தனர். அப்பொழுது காலரா நோயால் பாதிக்கப்பட்டு தினமும் ஒருவர் ஒருவராக இறந்தனர். அந்த சமயத்தில் சவேரியார்பாளையம் பங்கைச்சேர்ந்த கிறிஸ்துவர்கள், பக்கிரிக்காடு பகுதியில் விவசாயம் செய்து வந்தார்கள். இவர்கள் ஒன்றிணைந்து ஊர் நடுவில் கிணற்றருகில் சிலுவையை நிலைநாட்டினார்கள். அதன்பிறகு, காலரா நோயினால் பாதிப்பும், இறப்பும் குறைந்தது. அன்றிலிருந்து தான் சிலுவைப்பாளையம் உருவானது.
அருள்பணி. S. சவரிமுத்து அவர்களால் சிறிய ஓலை குடிசை அமைத்து புனித வனத்து அந்தோணியார் சுரூபத்தை நிறுவி, திருப்பலி நிறைவேற்றினார். அருள்பணி. A. ஜோசப் லாசர் அவர்களால் தற்போது உள்ள ஆலயம் கட்டப்பட்டது. ஆண்டுதோறும் ஜனவரி மாதம் சிறப்பு திருப்பலியும், தேர்பவனியும் நடைபெறும்.
புனித பதுவை அந்தோணியார் சிற்றாலயம், காவேரிபுரம்:
பாலாறு செல்லும் வழியில் உள்ள கிராமம் காவேரிபுரம். டோபி சமூகத்தை சார்ந்த 5 குடும்பங்கள் இணைந்து ஜூன் மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை பதுவை அந்தோணியாருக்கு விழா எடுக்கின்றனர். வாகன வசதி அமைத்து, சவேரியார்பாளையம் மற்றும் பூமனூர் பகுதி கிறிஸ்துவர்களை அழைத்து, விழா சிறப்பிக்கப்படுகிறது. இப்பகுதியில் உள்ள சிற்றாலயம் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மேதகு ஆயர் செ. சிங்கராயன் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
புனித ஆரோக்கிய அன்னை கெபி, கொசக்கரடு:
2004 ஆம் ஆண்டு மணி என்பவருடைய மகன் கிருஷ்ணனின் கனவில் மாதா தோன்றி, தனக்காக ஒரு கோவில் கட்டவும், தீய சக்திகளை ஒழிக்கவும் நான் இங்கு வந்திருப்பதாக சொல்லியுள்ளார். தவசி என்கிற ஒரு பெண்ணிற்கு பாறையின்மேல் மாதா, குழந்தையுடன் காட்சி தந்துள்ளார். கோவில் கட்ட வேண்டிய இடத்தை மாதா பாறையின் மேல் சிலுவை அடையாளம் வரைந்து காட்டியுள்ளார். அச்சிலுவையின் மீது அப்போதிருந்த பங்குத்தந்தை அருள்பணி. A. சகாயராஜ் அவர்கள் கைவைத்தபோது ஏதோவொரு உணர்ச்சி தன்னுள் தோன்றியதாக கூறியுள்ளார். சுந்தரம்மாள் என்பவர் இந்நிகழ்ச்சிகளை சந்தேகப்பட்டு, அந்த சிலுவையை தண்ணீரால் கழுவ, சிலுவை அழியாமல், கழுவிய கைகளில் நறுமணம் வீசியது. பாலமலையைச் சேர்ந்த மந்திரி கவுண்டர் என்பவரிடம் மாதா மும்முறைத் தோன்றி, இவ்விடத்தில் அழுவோரின் கண்ணீரை துடைக்காமல் திருப்பி அனுப்ப மாட்டேன் என்றும், அவர்கள் கேட்ட வரங்களை கொடுப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உறுதிபடுத்தப்பட்டதால், நம்பிக்கை கொண்ட அன்னையின் பக்தர்கள் மதபேதமின்றி அன்னைக்காக உருவாக்கப்பட்டது தான் இந்த சிற்றாலயம். இந்த சிற்றாலயத்தின் அருகில் உள்ள மலையில் வற்றாத நீரூற்று ஒன்று உள்ளது. அந்த நீரூற்றை பயன்படுத்தியவர்கள் பல புதுமைகள் நிகழ்ந்ததாக சான்று பகிர்ந்துள்ளார்கள். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8 ஆம் தேதிக்கு அடுத்து வருகின்ற ஞாயிற்றுக்கிழமை காலை செபவழிபாடு, திருப்பலி, பொங்கல் மந்திரிப்பு மற்றும் தேர்பவனி நடைபெறும்.
புனித வனத்து சின்னப்பர் கெபி, கூழ்கரடு:
சவேரியார்பாளையத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கூழ்கரடு பகுதியில், சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு, 1990 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இப்பகுதியை சேர்ந்த சின்னப்ப கவுண்டர் என்பவரின் கனவில் புனித வனத்து சின்னப்பர் தோன்றி, "எனக்கு ஒரு ஆலயம் கட்டு" என்பதற்கிணங்க, அந்த இடத்தில் ஒரு கெபி கட்டப்பட்டது.
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆரோன் என்ற மதம் மாறிய கிறிஸ்துவர் பந்தப்பன் என்பவரின் கனவில், சிலுவை மரம் நட வேண்டும் என்று கூற, அதன் அடிப்படையில் அங்கு ஒரு சிலுவை மரம் நடப்பட்டது. இங்கு, மாதத்தின் இரண்டாம் வெள்ளிக்கிழமைகளில் மாலை 06.00 மணிக்கு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.
திருச்சிலுவை பாறை, மோளப்பாறையூர்:
மோளப்பாறை என்ற கிராமத்தில் வில்லக்கொட்டாய் திருமதி. அந்தோணியம்மாள் என்பவர் 1971 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓர் இரவில் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கொண்டு செபமாலை செபித்துக் கொண்டிருந்தார்கள். அவ்வேளையில் பயங்கர சத்தத்துடன் ஒரு ஒளியானது மோளப்பாறை கரட்டிலுள்ள பாறையில் விழுவதை பார்த்து பயந்து வீட்டிற்குள்ளே சென்று தூங்கி கொண்டிருந்த திரு. சவரியப்பன் என்ற மகனை எழுப்பி இந்த செய்தியை சொல்லி மழை நின்ற உடன் சென்று பார்க்கும்படி கூறி இருக்கிறார்கள். ஆனால், திரு. சவரியப்பன் அன்று இரவு செல்லாமல் அடுத்த நாள் காலை சுமார் 8 மணி அளவில் சென்று பார்த்தபோது தற்சமயம் இருக்கும் அந்த சிலுவை அடையாளத்தை பார்த்துள்ளார்கள். இந்த செய்தியானது அக்கம் பக்கம் தெரிய, மோளப்பாறையில் சுற்றியுள்ளவர்கள் வந்து பார்த்து சென்றுள்ளார்கள்.
புனித வனத்து அந்தோணியார் கெபி, மோளப்பாறையூர்:
16.01.1972 அன்று திரு. சவரியப்பன் ஒரு சிறிய மண்மேடை அமைத்து, புனித வனத்து அந்தோணியார் திருவிழாவை அன்றைய பங்குத்தந்தை அருள்பணி. S. சவரிமுத்து அவர்களால் திருப்பலி நிறைவேற்றி, ஆடுமாடுகளை எல்லாம் மந்திரித்து வந்துள்ளார்கள். இந்த ஆடுமாடுகள் மந்திரிப்பில் அனைத்து மதத்தினரும் தங்கள் ஆடுமாடுகளை கொண்டு வந்து மந்திரித்து சென்றுள்ளார்கள். இவ்வாறு மந்திரிப்பதால் தங்கள் ஆடுமாடுகள் அனைத்து நோய் நொடிகளிலிருந்தும் காப்பாற்றப்படுவதாக நம்பி இன்று வரை தங்கள் ஆடுமாடுகளை எல்லாம் மந்திரித்து செல்கிறார்கள்.
புனித வனத்து அந்தோணியார் கெபிக்கு 17.01.2011 அன்று அருள்பணி. A. ஜோசப் லாசர் அவர்களாலும், அருள்சகோதரர் ஆரோக்கியசாமி அவர்களாலும் அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டுமானப்பணிகள் நிறைவுபெற்று, அன்றைய சேலம் மறைமாவட்ட முதன்மை குரு பேரருள்பணி. A. பெலவேந்திரம் அவர்களால் 16.01.2012 அன்று அர்ச்சிக்கப்பட்டது. இதை திரைப்பட இயக்குனரும், நிர்மலா பள்ளியின் முன்னாள் மாணவருமான திரு. ஆபாவணன் திறந்து வைத்தார். இவ்வாறாக, புனித வனத்து அந்தோணியார் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 16 ஆம் தேதி மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
புனித மரிய மதலேனாள் குருசடி, மோளப்பாறையூர்:
வில்லக்கொட்டாய் திருமதி. அந்தோணியம்மாள் என்பவர் அன்றைய பங்குத்தந்தை அருள்பணி. ஐசக் அவர்களிடம் 1965 ஆம் ஆண்டு ஒரு கோரிக்கையை சொன்னார். அதாவது, புனித மரிய மதலேனம்மாள் சுரூபம் ஒன்று பங்கிற்கு வாங்கி கொடுக்கும் கோரிக்கை. அருள்பணி. ஐசக் அவர்களும் சுரூபம் வாங்கி கொடுத்தார். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் சவேரியார் திருவிழாவின் போது மரிய மதலேனம்மாள் தேர்பவனியானது புனித சவேரியார் தேர்பவனியுடன் நடைபெறும். 2012 ஆம் ஆண்டு திருமதி. அந்தோணியம்மாளின் மகள் அருள்சகோதரி அகஸ்டின் பிலோ அவர்களின் துறவற வாழ்வின் 25 ஆம் ஆண்டு வெள்ளிவிழாவை முன்னிட்டு, மரிய மதலேனம்மாள் குருசடியும் சுரூபமும் நிறுவப்பட்டு, அன்றைய மேட்டூர் பங்குத்தந்தை அருள்பணி. R. மாசிலாமணி அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு, அருள்சகோதரி அகஸ்டின் பிலோவால் திறக்கப்பட்டது.
புனித மரிய மதலேனம்மாளின் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
RC துவக்கப்பள்ளி, சவேரியார்பாளையம் - அரசு உதவிபெறும் பள்ளி:
இப்பள்ளியானது, அருள்பணி. கேமார்ட் அவர்களால் 04.03.1909 அன்று ஆரம்பிக்கப்பட்டது. 27.04.2009 அன்று இப்பள்ளியின் நூற்றாண்டு விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும், இப்பள்ளியானது அரசின் நிரந்தர அங்கீகாரம் பெற்று, சேலம் மறைமாவட்டத்தின் பெயரில் இயங்கி வருகிறது.
பங்கில் உள்ள கல்வி நிறுவனங்கள்:
1. நிர்மலா பள்ளி, கொளத்தூர் (மாண்ட்போர்ட் அருள்சகோதரர்கள் நிர்வாகம்)
2. மாண்ட்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கொளத்தூர் (மாண்ட்போர்ட் அருள்சகோதரர்கள் நிர்வாகம்)
3. RC துவக்கப்பள்ளி, சவேரியார்பாளையம் (அரசு உதவிபெறும் பள்ளி - மறைமாவட்ட நிர்வாகம்)
4. RC துவக்கப்பள்ளி, பூமனூர் (அரசு உதவிபெறும் பள்ளி - மறைமாவட்ட நிர்வாகம்)
பங்கில் உள்ள இல்லங்கள்:
1. நிர்மலா இல்லம்
2. மாண்ட்போர்ட் இளம் சகோதரர்கள் இல்லம்
பங்கில் செயல்படும் பக்தசபைகள் :
1. பங்குப்பேரவை
2. மரியாயின் சேனை
3. பாடற்குழு
4. பீடச்சிறுவர்கள் குழு
பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:
1. அருள்பணி. கேமார்ட் (1904-1911)
2. அருள்பணி. மரிய லூயிஸ் (1911-1914)
3. அருள்பணி. J. ஹெட் டே (1914-1918)
4. அருள்பணி. போரிஸ் (1918-1919)
5. அருள்பணி. ஹெட் டே (1919-1926)
6. அருள்பணி. M. தோமினிக் (1926)
7. அருள்பணி. சான் ஜோசப் (1926-1928)
8. அருள்பணி. A. பிரான்சிஸ் (1928-1938)
9. அருள்பணி. A. M. அம்புரோஸ் (1938-1940)
10. அருள்பணி. J. ஹெட் டே (1940-1941)
11. அருள்பணி. G. ரேமண்ட் (1941)
12. அருள்பணி. சிரில் கொல்லின் (1941)
13. அருள்பணி. ட்யூட்ஸ் (1941-1942)
14. அருள்பணி. L. தெபிங்னி (1942-1943)
15. அருள்பணி. ஜார்ஜ் எடத்திப்பறம்பில் (1943-1944)
16. அருள்பணி. பீட்டர் அட்டிப்பட்டி (1944)
17. அருள்பணி. ஜார்ஜ் எடத்திப்பறம்பில் (1945-1946)
18. அருள்பணி. V. ரோக்கி நராகட் (1946-1948)
19. அருள்பணி. P. ஐசக் (1948-1962)
20. அருள்பணி. அலெக்சாண்டர் சாவேலி (1962-1963)
21. அருள்பணி. பாசில் (1963-1964)
22. அருள்பணி. ஜார்ஜ் எடத்திப்பறம்பில் (1964-1965)
23. அருள்பணி. அந்தோணி களத்தில் (1965-1969)
24. அருள்பணி. ஐசக் இளையவர் (1969-1972)
25. அருள்பணி. C. S. அந்தோணிசாமி (1972-1973)
26. அருள்பணி. தோமினிக் (1973-1974)
27. அருள்பணி. S. சவரிமுத்து (1974-1983)
28. அருள்பணி. A. ஜோசப் (1983-1986)
29. அருள்பணி. A. சார்லஸ் மரிய லூயிஸ் (1986-1989)
30. அருள்பணி. D. A. பிரான்சிஸ் (1989-1994)
31. அருள்பணி. S. பிரான்சிஸ் சேவியர் (1994-1998)
32. அருள்பணி. D. குருசடி சகாயராஜ் (1998-2002)
33. அருள்பணி. A. சகாயராஜ் (2002-2007)
34. அருள்பணி. A. ஜோசப் லாசர் (2007-2012)
35. அருள்பணி. V. ஜெய் பெர்னார்ட் ஜோசப் (2012-2014)
36. அருள்பணி. D. மைக்கேல்ராஜ் செல்வம் (2014-2016)
37. அருள்பணி. M. செல்வம் (2016-2022)
38. அருள்பணி. A. சிங்கராயன் (2022- தற்போது வரை...)
பங்கில் பணியாற்றிய உதவிப்பங்குத்தந்தையர்கள் :
1. அருள்பணி. R. சார்லஸ் (2021 செப்டம்பர் - நவம்பர்)
2. அருள்பணி. ஸ்டீபன் பாபு, OCD (2022-2023)
3. அருள்பணி. S. அருள்வளன் (2023-2024)
4. அருள்பணி. A. எட்வின் சைமன் (2024- தற்போது வரை...)
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தையின் வழிகாட்டுதலில் உதவிப்பங்குத்தந்தை மற்றும் திருத்தொண்டர் ஆகியோர்.
தகவல்கள் சேகரிப்பில் உதவி: அருட்சகோதரர் ஜான் பீட்டர், எஸ்.பி.பி காலனி பங்கு, சேலம் மறைமாவட்டம்.











