1019 புனித சகாய அன்னை ஆலயம், மண்ணூர்பேட்டை

    

புனித சகாய அன்னை ஆலயம்

இடம்: மண்ணூர்பேட்டை

மாவட்டம்: சென்னை

மறைமாவட்டம்: சென்னை -மயிலை உயர் மறைமாவட்டம்

மறைவட்டம்: அம்பத்தூர் (புனித பவுல் மறைவட்டம்)

ஆலய முகவரி:

சகாய அன்னை ஆலயம், 

No:57, பிள்ளையார் கோயில் தெரு,

மண்ணூர்பேட்டை,

சென்னை -600 050

நிலை: பங்குத்தளம்

குடும்பங்கள்: 600

அன்பியங்கள்: 18

பங்குத்தந்தை அருட்பணி. சந்தியாகு, SSS

திருவழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி காலை 06:30 மணி

காலை 08:00 மணி

திங்கள் காலை 06:00 மணி நற்கருணை எழுந்தேற்றம் காலை 06:20 மணி புனித பீட்டர் ஜூலியன் நவநாள் ஜெபம் காலை 06:30 மணி திருப்பலி 

செவ்வாய் மாலை 06:00 மணி நற்கருணை எழுந்தேற்றம்

மாலை 06:20 மணி புனித அந்தோனியார் நவநாள் ஜெபம்

மாலை 06:30 மணி திருப்பலி

மாலை 07:20 மணி நற்கருணை ஆராதனை (நற்கருணை இணையாளர்கள்)

புதன் காலை 06:00 மணி நற்கருணை எழுந்தேற்றம்

காலை 06:20 மணி புனித யோசேப்பு நவநாள் ஜெபம்

காலை 06:30 மணி திருப்பலி

வியாழன் காலை 06:00 மணி நற்கருணை எழுந்தேற்றம் 

காலை 06:20 மணி குழந்தை இயேசு நவநாள் ஜெபம்

காலை 06:30 மணி திருப்பலி

வெள்ளி காலை 06:00 மணி நற்கருணை எழுந்தேற்றம்

காலை 06:30 மணி திருப்பலி

காலை 07:00 மணி இறைஇரக்கத்தின் ஜெபம்

சனி மாலை 06:00 மணி ஜெபமாலை

மாலை 06:20 மணி புனித சகாய அன்னை நவநாள் ஜெபம்

மாலை 06:30 மணி திருப்பலி 

மாதாந்திர சிறப்பு வழிபாடுகள்:

மாதத்தின் முதல் வியாழன்: மாலை 05:30 மணி நற்கருணை எழுந்தேற்றம், மாலை 06:00 மணி திருப்பலி (நற்கருணை இணையாளர்கள்)

மாதத்தின் முதல் வெள்ளி: மாலை 06:00 மணி இறைஇரக்கத்தின் ஜெபம்

மாலை 06:30 மணி திருப்பலி

மாலை 07:00 மணி நற்கருணை எழுந்தேற்றம், குணமளிக்கும் ஆராதனை, எண்ணெய் பூசுதல் 

மாதத்தின் முதல் சனி: மாலை 06:00 மணி மாதா கெபியில் ஜெபமாலை 

மாலை 06:20 மணி புனித சகாய அன்னை நவநாள் ஜெபம்

மாலை 06:30 மணி திருப்பலி

மாதத்தின் 24-ம் தேதி: மாலை 06:00 மணி புனித சகாய அன்னையின் தேர்பவனி

மாலை 06:30 மணி நவநாள் திருப்பலி, நற்கருணை ஆசீர் மற்றும் உணவுப் பகிர்வு.

திருவிழா: ஆகஸ்ட் மாதம் 06-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை.

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி. தாமஸ், MMI

2. அருட்பணி. பிரதீப் சென்னை-மயிலை

3. அருட்பணி. பிரேம், சென்னை-மயிலை

Church Map location: Sagaya Annai Alayam, SSS

https://maps.app.goo.gl/xAvw9m8F4i32B2gRA

பங்கின் வரலாறு:

அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகில், மண்ணூர்பேட்டைக் கிராமத்தில், ஆண்டவரின் அருளாலும், அன்னையின் ஆசீராலும் ஆரம்பிக்கப்பட்டதுதான் புனித சகாய அன்னை ஆலயம் (கிறிஸ்தவர்களின் சகாய அன்னை ஆலயம்). 1966ஆம் ஆண்டில் அரவை நிலையத்தை புதிய சிற்றாலயமாக மாற்றி, ஞாயிறு திருப்பலி நடத்தப்பட்டது. 1975ஆம் ஆண்டு முதல் மே மாதம் கடைசி ஞாயிறன்று ஆலயத்தின் ஆண்டுத் திருவிழா கொண்டாடப்பட்டது. 

1980 ஆம் ஆண்டு முதல் 1990ஆம் ஆண்டு வரை, மண்ணூர்பேட்டை ஆலயமானது, அம்பத்தூர் புனித யோசேப்பு ஆலயத்தின் கிளைப்பங்காக செயல்பட்டது. பிறகு இந்த ஆலயத்தில் அருட்தந்தையர்களாகிய ப்ரீஸ் ஜேம்ஸ் பனம்பரம்பில், தாமஸ், ப. ஜோசப் ஆகியோர் பணியாற்றினார்கள். 

1987ஆம் ஆண்டில் அருட்தந்தை லாரன்ஸ் ராஜ் தலைமையில் ஆலயம் கட்டப்பட்டு, மே மாதம் கொண்டாடப்பட்டு வந்த ஆண்டுத் திருவிழாவானது, ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வின்ணேற்பு அன்னை விழாவன்று மாற்றப்பட்டு கொண்டாடப்பட்டது. அதே ஆண்டில் சென்னை -மயிலையின் அப்போதைய பேராயர் மேதகு கஸ்மீர் ஞானாதிக்கம் அவர்களால், மணிக்கூண்டு அர்ச்சிக்கப்பட்டு, ஆலயத்தின் முன்பகுதியில் 15 கிரவுண்ட் நிலம் வாங்கப்பட்டது. 

அதன்பின் அருட்தந்தை சின்னப்பா அவர்கள் பணியாற்றியபோது, ஆலய மேல்தளம் பழுதுபார்க்கப்பட்டு டைல் பதிக்கப்பட்டது. 1991ஆம் ஆண்டுமுதல் 2000ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை மண்ணூர்பேட்டை, கொரட்டூர் குழந்தை இயேசு ஆலயத்தின் கிளைப்பங்காக செயல்பட்டது.

2000ஆம் ஆண்டு மே மாதம் முதல் மண்ணூர்பேட்டை புதிய பங்காக உருவாக்கப்பட்டு, புதிய பங்காக நற்கருணை சபைக் (SSS) குருக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அருட்தத்தை அருள் தார்சியுஸ் முதல் பங்குத் தந்தையாக நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து அருட்தந்தை M. I. ராஜ், அருட்தந்தை சேசுராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டார்கள். 

2009 ஆம் ஆண்டில் அருட்தந்தை ஜோசப் அவர்கள் பங்குத்தந்தையாக பொறுப்பேற்று, தற்பொழுதுள்ள புதிய ஆலயத்தை 2014ஆம் ஆண்டில் கட்டி முடித்தார். தொடர்ந்து அருட்தந்தை ஆரோக்கிய புனிதன் பங்குத்தந்தையாக பணியாற்றியபொழுது புதிய பங்கு அலுவலகத்தையும், 40ஆம் ஆண்டு பங்குத் திருவிழாவையும் முன்னிட்டு, 40 அடி உயரமுள்ள கொடி மரத்தையும் கட்டினார். 

அவரைத் தொடர்ந்து அருட்தந்தை பீட்டர் ஜெயகாந்தன் நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து. அருட்தந்தை ஞானசேகர் பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டபொழுது தற்பொழுது உள்ள பீடத்தை வழிபாட்டிற்கு ஏற்றார்போல் புதிதாக வடிவமைத்து உருவாக்கினார். 

அதைத்தொடர்ந்து தற்பொழுது அருட்தந்தை சந்தியாகு பங்குத் தந்தையாக பணியாற்றுகின்றார். அருட்தந்தை சந்தியாகு அவர்கள், ஆலயம் அமைந்துள்ள முதல் மாடிக்கு மக்கள் அனைவரும் சென்று வழிபடுவதற்கு மின்தூக்கியையும், நற்கருணை நாதரை மக்கள் அனுதினமும் அணுகிட 'அமைதியகம்' என்ற சிற்றாலயத்தையும், பங்கின் பொன்விழாவை (1975-2025) முன்னிட்டு ஜெபமாலையின் அடிப்படையில் 53 அடி உயர புதிய கொடிமரத்தையும் கட்டி முடித்தார். 15.08.2025 அன்று பங்கின் பொன்விழா சிறப்பாக கொண்டாட உள்ளனர். 

இப்பங்கில் கிட்டத்தட்ட 600 குடும்பங்கள் பங்கு உறுப்பினர்களாக இருக்கின்றனர். இப்பங்கில் வாழும் மக்கள் அனைவரும் தொழிலுக்காகவும், வேலை வாய்ப்பிற்காகவும் தங்கள் சொந்த ஊர்களை விட்டுப் புலம்பெயர்ந்தவர்கள் ஆவர்.

பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:

1. பங்கு அருட்பணிப் பேரவை

2. அன்பிய பொறுப்பாளர்கள் குழு

3. மறைக்கல்வி ஆசிரியர்கள் குழு

4. பாடற்குழு

5. மரியாயின் சேனை

6. புனித வின்சென்ட் தே பவுல் சபை

7. அன்னாள் சபை (கைம்பெண்கள் குழு)

8. பீடச்சிறார்கள்

9. இளையோர் மன்றம் (ஆண்கள் மற்றும் பெண்கள்)

10. நற்கருணை இணையாளர்கள்.

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல் (நற்கருணை சபை):

1. அருட்தந்தை. அருள் தார்சியுஸ் (2000-2005)

2. அருட்தந்தை. M. I. ராஜ் (2005-2008)

3. அருட்தந்தை. சேசுராஜ் (2008-2009)

4. அருட்தந்தை. ஜோசப் (2009-2014)

5. அருட்தந்தை. ஆரோக்கிய புனிதன் (2014-2017)

6. அருட்தந்தை. பீட்டர் ஜெயகாந்தன் (2017-2018)

7. அருட்தந்தை. ஞானசேகர் (2018-2020)

8. அருட்தந்தை. சந்தியாகு (2020-2025)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குதந்தை அருட்பணி. சந்தியாகு, SSS அவர்கள்.