1005 புனித வளனார் ஆலயம், மேல பனைக்குளம்

      
புனித வளனார் (சூசையப்பர்) ஆலயம்

இடம்: மேல பனைக்குளம், ஆசீர்வாதபுரம் அஞ்சல், 628613

மாவட்டம்: தூத்துக்குடி

மறைமாவட்டம்: தூத்துக்குடி

மறைவட்டம்: சாத்தான்குளம்

நிலை: கிளைப்பங்கு

பங்கு: புனித சவேரியார் ஆலயம், சி.சவேரியார்புரம்

முதல் மற்றும் 3-வது ஞாயிற்றுக்கிழமை காலை 10:15 மணி திருப்பலி

மாதத்தின் மூன்றாவது புதன்கிழமை மாலை 07 00 மணி திருப்பலி, நற்கருணை ஆசீர், அன்பு விருந்து (அசனம்)

பங்குத்தந்தை அருட்பணி. ரெமிஜியுஸ் S. லியோன்

குடும்பங்கள்: 35

திருவிழா: ஆவணி மாதம் முதல் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பித்து பத்து நாட்கள் நடைபெறும் (ஆகஸ்ட் மாதத்தில்).

வழித்தடம்: பேய்க்குளம் -சாத்தான்குளம் வழித்தடத்தில் மேல பனைக்குளம் அமைந்துள்ளது.

Location map: St. Joseph's Church, Mela Panaikulam

https://maps.app.goo.gl/5QhCFQEvnXwq6LLE6

வரலாறு:

மேல பனைக்குளம் ஊரில் புனித வளனாரை பாதுகாவலராகக் கொண்ட ஓலைக்குடிசை ஆலயமானது பல ஆண்டுகள் இருந்து வந்தது. இந்த ஓலைக்குடிசை ஆலயத்தில் வைத்தே திருப்பலி மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வந்தன. இவ்வாலயமானது 1950ஆம் ஆண்டு வரை சோமநாதபேரி பங்கின் கிளைப்பங்காக செயல்பட்டு வந்தது. அதன் பிறகு சோமநாதபேரி பங்கு பிரிக்கப்பட்டு, 1950-ல் சிந்தாமணி தனி பங்காக உருவானபோது, மேல பனைக்குளம் ஆலயம், சிந்தாமணி பங்கின் கிளைப்பங்காக இணைக்கப்பட்டது.

இந்த காலக் கட்டத்தில் தான் இந்த ஊர் இறைமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, எப்படியாவது புதிய ஆலயம் ஒன்றை கட்ட வேண்டும் என்று தீர்மானித்து, புனித வளனாரிடம் வேண்டிக் கொண்டதன் விளைவாக, 1976ம் ஆண்டு அப்போதைய பங்குத் தந்தையாக இருந்த அருட்பணி. Y. தேவராஜன் அடிகளார் அவர்களால் புதிய ஆலயம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

1978ஆம் ஆண்டு கல் கட்டடத்தாலான புதிய ஆலயக் கட்டுமானப் பணிகள் அனைத்தும் நிறைவுற்று, தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு அம்புரோஸ் ஆண்டகை அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. 

1999ஆம் ஆண்டு சவேரியார்புரம் தனிப்பங்காக உருவானபோது, மேலபனைக்குளம் ஆலயம், சவேரியார்புரம் பங்கோடு இணைக்கப்பட்டது.

2007ஆம் ஆண்டு ஏற்பட்ட இடி, மின்னலின் காரணமாக ஆலயம் சேதமடைந்தது. எனவே ஆலயத்தின் வடக்குப் பக்கத்தில் புதிய ஆலயம் கட்ட வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டு, 2011 ஆம் ஆண்டு அப்போதைய பங்குத் தந்தையாக இருந்த அருட்பணி. சகாய ஜஸ்டின் அடிகளார் அவர்களால் புதிய ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. ஆலயக் கட்டுமானப் பணிகள் மற்றும் அழகிய பீட வேலைப்பாடுகளுடன் நிறைவுபெற்று, பாளை மறைமாவட்ட ஆயர் மேதகு ஜூடு பால்ராஜ் அவர்களது திருக்கரங்களால், 31.8.2013 அன்று அர்ச்சிக்கப்பட்டது. 

மாதத்தில் இரு ஞாயிறு திருப்பலியும், விழாக் காலங்களில் சிறப்புத் திருப்பலியும், மாணவர்களுக்கான மறைக்கல்வி வகுப்புகள், விவிலிய வகுப்புகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

தகவல்கள்: பங்குதந்தை அருட்பணி. ரெமிஜியுஸ் S. லியோன் அவர்கள்.

ஆலய வரலாறு: சி.சவேரியார்புரம் பங்கு ஆலய வெள்ளிவிழா மலர் 2024. 

புகைப்படங்கள்: சகோதரர். ஜிம் எலியட் பிரேம்குமார், பாளையங்கோட்டை.