புனித விண்ணேற்பு அன்னை ஆலயம்
இடம்: வேலந்தாங்கல்
மாவட்டம்: விழுப்புரம்
மறைமாவட்டம்: புதுவை -கடலூர் உயர் மறைமாவட்டம்
மறைவட்டம்: செஞ்சி
நிலை: பங்குத்தளம்
கிளைப்பங்குகள்:
1. புனித சூசையப்பர் ஆலயம், நார்சாம்பட்டு
2. புனித அந்தோனியார் ஆலயம், மேட்டுப்பாளையம்
3. புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், வெள்ளக்குளம்
4. தூய இருதய ஆண்டவர் ஆலயம், கீழ்ப்புத்துப்பட்டு
5. புனித சவேரியார் ஆலயம், வேலந்தாங்கல் புதூர்
6. புனித சகாய மாதா ஆலயம், கடலாடித்தாங்கல்
7. குழந்தை இயேசு சிற்றாலயம், ஓடத்தாங்கல்
ஆலயம் இல்லாத கிளை கிராமங்கள்:
1. மேல்மலையனூர்
2. ஆனந்தாங்கல்
பங்குத்தந்தை அருட்பணி. D. பீட்டர் ஹென்றி ஜோஷ்வா
குடும்பங்கள்: 950 (கிளைப்பங்குகள் சேர்த்து)
வழிபாட்டு நேரங்கள்:
ஞாயிறு திருப்பலி காலை 06:00 மணி அருட்பணி. தாமஸ் கவான் டஃபி ஜெபக்கூடத்தில் திருப்பலி காலை 08:30 மணி
ஞாயிறு காலை 07:30 மணி திருப்பலி கடலாடித்தாங்கல்
நாள்தோறும் திருப்பலி காலை 06:00 மணி
வேலந்தாங்கல் கூட்ரோடு புனித அந்தோனியார் கெபியில் மாதத்தின் முதல் செவ்வாய் காலை 06:30 மணி திருப்பலி
பௌர்ணமி நாளில் வேலந்தாங்கல் புனித அமலோற்பவ அன்னை கெபியில் மாலை 06:30 மணி திருப்பலி. தொடர்ந்து தேர்பவனி
கிளைகிராமங்களில் மாதத்திற்கு ஒருமுறை திருப்பலி.
திருவிழா: ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி
வேலந்தாங்கல் மண்ணின் இறையழைத்தல்கள்:
1. அருட்பணி. P. இருதயம் (மேட்டுப்பாளையம், கொரட்டாம்பட்டு)
2. அருட்பணி. A. புஷ்பம் (நார்சாம்பட்டு)
3. அருட்பணி. A. லாசர், மாண்ட்ஃபோர்ட் (நார்சாம்ப்ட்டு)
4. அருட்பணி. S. அல்போன்ஸ் (வேலந்தாங்கல்)
5. அருட்பணி. P. A. சம்பத்குமார் (வேலந்தாங்கல்)
6. அருட்பணி. K. பால் சுந்தர், SJ (வேலந்தாங்கல்)
7. அருட்பணி. D. S. அந்தோணிராஜ் (வேலந்தாங்கல்)
8. அருட்பணி. S. ஜான் பீட்டர் (வேலந்தாங்கல்)
9. அருட்பணி. C. சகாய ராஜா (வேலந்தாங்கல்)
10. அருட்பணி. ஜான் பால், SJ (வெள்ளக்குளம்)
11. அருட்பணி. பென்சிகர், MMI (வெள்ளக்குளம்)
12. அருட்பணி. சவரியப்பன், MMI (வேலந்தாங்கல்)
13. அருட்பணி. ஜான் மரிய ஜோசப் (வேலந்தாங்கல்)
14. அருட்பணி. ஜான் சேவியர், SMA (மேட்டுப்பாளையம்)
அருட்சகோதரிகள்:
1. அருட்சகோதரி. சில்வா, MC (வேலந்தாங்கல்)
2. அருட்சகோதரி. வலேரினா, Cluny (வேலந்தாங்கல்)
3. அருட்சகோதரி. எலிசபெத் மேரி, FIHM (வேலந்தாங்கல்)
4. அருட்சகோதரி. இரஞ்சிதம், FIHM (வேலந்தாங்கல்)
5. அருட்சகோதரி. மேரி கிளாரா, Cluny (வேலந்தாங்கல்)
6. அருட்சகோதரி. கிளாரா, FSJ (வேலந்தாங்கல்)
7. அருட்சகோதரி. கிரேஸி பாத்திமா, Salesian (வேலந்தாங்கல்)
8. அருட்சகோதரி. ஷீலா, FSJ (வேலந்தாங்கல்)
9. அருட்சகோதரி. அடைக்கல மேரி, FIHM (வேலந்தாங்கல் புதுார்)
10. அருட்சகோதரி. கிறிஸ்டினா மேரி, FIHM (நல்லரசன்பட்டு)
11. அருட்சகோதரி. சோஃபியா, G & C (வேலந்தாங்கல்)
12. அருட்சகோதரி. சின்ன ரோசாரி, FIHM (வேலந்தாங்கல்)
13. அருட்சகோதரி. பியா மரியா, MC (வேலந்தாங்கல்)
14. அருட்சகோதரி. பியூலா, G & C (வெள்ளகுளம்)
15. அருட்சகோதரி. கிளாரட், CTC (ஓடத்தாங்கல்)
16. அருட்சகோதரி. ஜேம்ஸ் எழிலரசி, Cluny (வேலந்தாங்கல்)
17. அருட்சகோதரி. மேரி ரோஸ்லின், Luey Philifini (கடலாடித்தாங்கல்)
18. அருட்சகோதரி. எஸ்தர், FIHM (நார்சாம்பட்டு)
19. அருட்சகோதரி. மெட்டில்டா ஆரோக்யமேரி, AMS (வேலந்தாங்கல் அணைக்கட்டு)
20. அருட்சகோதரி. ஜெய அக்சிலியா, FIHM (வேலந்தாங்கல்)
21. அருட்சகோதரி. பிரான்சிஸ்கா, FIHM (வேலந்தாங்கல்)
22. அருட்சகோதரி. ரோமி ஷர்மிளா, FIHM (கடலாடித்தாங்கல்)
23. அருட்சகோதரி. தெரேசாள், FIHM (நார்சாம்பட்டு)
Church Map location: Our Lady of Assumption Church, Velanthangal
https://maps.app.goo.gl/ZkJL7grQrbNL84FC7
வழித்தடம்: திண்டிவனம் -திருவண்ணாமலை வழித்தடத்தில், செஞ்சி -சத்தியமங்கலம் -கடலாடித்தாங்கல். கடலாடித்தாங்கலிருந்து, மேல்மலையனூர் வழித்தடத்தில் இரண்டரை கி.மீ தொலைவில் வேலந்தாங்கல் அமைந்துள்ளது.
வரலாறு:
கி.பி. 1711-ல் வேலந்தாங்கல் பகுதியில் கிறிஸ்தவம் உருவானது. இவ்வூரில் வேதம் பெற மக்கள் தங்கியதால் "வேதம்தங்கி" என அழைக்கப்பட்டு, பின் மருவி 'வேலந்தாங்கல்' என்று பெயர் பெற்றது.
1674 புனித அருளானந்தர் இப்பகுதி வழியாக பயணித்தார் என்ற பாரம்பரிய செய்தியும், 1711 ல் வீரமாமுனிவர் அன்னைக்கு ஓர் கெபி அமைக்க வேலந்தாங்கல், சத்தியமங்கலம், மணலாடிபுதூர் ஆகிய இக்காட்டு பகுதிகளில் இடம் தேர்வு செய்ய முயற்சித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. 1777 ல் அத்திப்பாக்கம் பகுதியோடு வேலந்தாங்கல் பகுதியும் இருந்துள்ளது. பின் முறையாக 1787ல் வேலந்தாங்கல் மறைத்தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
1811-ல் தென் தமிழகப் பகுதியிலிருந்து இயேசுவை பற்றி அறிய வேலந்தாங்கல் பகுதிக்கு மக்கள் வரத் தொடங்கினர்.
1835 ஆம் ஆண்டில் வெளியூர் மக்கள் (காரைக்குடி, தஞ்சாவூர், திருப்பத்தூர், தர்மபுரி, ஆரணி, சேத்துப்பட்டு, செங்கப்பட்டு) இங்கு வந்து 2 மாதம் தங்கி, ஞானஸ்நானம், உறுதிபூசுதல் பெற்றுள்ளனர். ஒருசில குடும்பத்தினர் இங்கேயே தங்கி விட்டனர். அவ்வாண்டு சுமார் 5,000 பேர் கிறிஸ்தவம் தழுவியுள்ளனர்.
1853-ல் வேலந்தாங்கல் பங்கு என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டு, முதல் பங்குதந்தையாக அருட்பணி. லூயிஸ் மத்தியாஸ் இருந்துள்ளார். 31-08-1962 ல் இம்மாகுலேட் கன்னியர் இல்லம் தொடங்கப்பட்டது.
1869 ல் வேலந்தாங்கல் ஆலயம் கோபுர வடிவில் அமைக்கப்பட்டது. 1876 ல் அருட்பணி. தாராஸ் பங்குதந்தையாக இருந்தபோது ஆயிரக்கணக்கான மக்கள் கிறிஸ்தவராக மாறினர். அருட்தந்தையவர்கள் அன்னையின் மீது மிகுந்த பக்தி கொண்டவர். பிரான்ஸ் நாட்டில் லூர்து நகரில் தேவ அன்னை பெர்னதெத்துக்கு காட்சி தந்தார்கள். அந்த பெர்னதெத்தின் தூரத்து உறவினர் ஒருவர் மூலம், நமது இந்திய தேசத்துக்கு முதன் முதலில் 3 அன்னையின் சுரூபங்கள் வரவழைக்கப்பட்டன. அவை இன்று பூண்டி, சேத்துப்பட்டு, வேலந்தாங்கல் ஆகிய இடங்களில் உள்ளன. இந்த சுரூபங்கள் ஒரே அளவுடையது என்பதும் குறிப்பிடத்தக்கது. வேலந்தாங்கல் தவிர மற்ற இடங்களிலும் இச் சுரூபங்கள், தல ஆயர் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
அருட்தந்தை. தாமஸ் கவான் டஃபி:
1913 ல் அருட்பணி. தாமஸ் கவான் ஃடப்பி அடிகளார் இங்கு கல்விப் பணியோடு, மறைக்கல்வியும் துவக்கினார். இளைஞர்களை மற்றும் மாணவர்களை தமது வெண் குதிரையில் அழைத்து வந்து, தம்முடன் தங்க வைத்து கல்வி தந்துள்ளார். பிறகு திண்டிவனம் சென்ற நிலையில் கபிரியல் என்பவர் இவருடன் இருந்து திண்டிவனம் உள்விடுதியைக் கட்டியுள்ளார். இவர் காலத்தில் பஞ்சகாலம் ஏற்பட்டதன் காரணமாக ஓர் கெபி அமைக்க திட்டமிட்டுள்ளார். 'கேளும் தாய் மரி பூமி எல்லாம் அழுகையால் உம்மை கூப்பிடவே கேளும் தாய்மரி' என்ற பாடலை எழுதி, உருக்கமுடன் மக்களோடு பாடி செபித்துள்ளார். இக்காலக் கட்டத்தில் இப்பங்கு மறைபோதக மையமாக இருந்தது.
அருட்தந்தை. தாமஸ் கவான் டஃபி அவர்கள், அக்கால கட்டத்தில் மக்களைப் பார்த்து திருப்பலி நிறைவேற்ற திட்டம் கொண்டு திருத்தந்தையிடம் அனுமதி பெற்று, வேலந்தாங்கலில் மக்களைப் பார்த்து திருப்பலி நிறைவேற்றினார். இதன் அடிப்படையில் திண்டிவனம் உள்விடுதியில் ஆலயமும் அப்படியே உருவாக்கினார்.
மேலும் புது வருடம் ஜனவரி 1 ம் தேதி விவசாயம் செழிக்க பச்சரிசி, வெல்லம் கலந்து திருப்பலியில் காணிக்கையாக அளித்து, பின் அனைவருக்கும் பகிர்ந்து தருதல், பிடி அரிசி அனைத்து குடும்பங்களிலும் சேகரித்து, புனித வனத்து சின்னப்பரிடம் மழைக்காக திருப்பலி நிறைவேற்றி, செபித்து வருவதும், நவம்பர் 2ம் தேதி கல்லறை தோட்டத்தில் திருப்பலி திறைவேற்றுவதல் போன்ற நிகழ்வுகளின் தொடக்கமும், பிற இடங்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்துள்ளது. திருச்சபை விதிமுறைகள் கண்டிப்பாகவும் அக்காலத்தில் கடைபிடிக்கப் பட்டுள்ளது. உதாரணமாக திருமண முறைகேடுகளுக்கு கடும் தண்டளையும் வழங்கப்பட்டதாம். இவ்வாறு வேலந்தாங்கல் பங்கில் பல்வேறு ஆன்மீக காரியங்களை அருட்தந்தை. தாமஸ் கவான் டஃபி அவர்கள் செய்துள்ளார்.
தந்தை. தாமஸ் கவான் டஃபி அவர்கள் மைக்கேல் என்ற ஓட்டுநரை 12 வயது முதல் தன்னுடன் நிலை நிறுத்திக் கொண்டார். அவர், தந்தை இறக்கின்ற வரை அவருடன் பயணித்தவர். செப்டம்பர் 7ஆம் நாள் தந்தையினுடைய மரண வேளையில், மைக்கேல் நீ எனக்கு உண்மை ஊழியனாய் இருந்தாய், உமக்கு நன்றி கூறுகிறேன் என்று கூறியுள்ளார். மேலும் திரு எஸ். எம் கபரியேல் என்ற ஆசிரியர், தந்தை அவர்களோடு அந்த நம்பிக்கை நகரில் வாழ்ந்து ஆசிரியராக பணிபுரிந்து இருக்கின்றார். இவர் காலத்தில் மேதகு முன்னாள் கர்தினால் லூர்துசாமி ஆண்டகை, கபிரியேல் ஆசிரியரிடம் இரண்டாம் வகுப்பில் படித்து விட்டு நான்காம் வகுப்பில் டபுள் பிரமோசன் பெற்றுள்ளார்.
திரு. பொன்னையா ஆசிரியர் 1935 -37 வரை தந்தையோடு ஆசிரியர் பயிற்சி முடித்து, வேலந்தாங்கல் பங்கிலே 44 ஆண்டுகள் பணி செய்து ஓய்வு பெற்று, இறுதிவரை வேதியராகவும் ஆசீரியராகவும் பயணித்திருக்கின்றார்.
1933 இல் வேலந்தாங்கல் ஆலயம் மூன்று பகுதிகள் இணைக்கப் பட்டன. இப்பணியினை செய்ய மக்களே உதவியுள்ளனர்.
மூவர் இணைந்து விவிலியம் வாசித்தல், இணைந்து தர்மம் செய்தல் போன்ற நிகழ்வுகள் இங்கு தொடங்கப்பட்டு, இன்று பல இடங்களில் இது நடைமுறையில் உள்ளது. இதனை அருட்பணி. A. S. அந்தோணிசாமி (2009-11) அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.
அருட்பணி. மெசியா:
தந்தை மெசியாவின் 12 ஆண்டு நிகழ்வுகள் வரலாறு ஆகும். வேதபோதக தந்தையர்களின் மறுபதிவுகள் இவரால் ஆக்கம் பெற்றன. புதிய பொலிவுடன் 170வது ஆண்டில் அதாவது 2023-ம் ஆண்டில் ஆலயம் புதுப்பிக்கப்பட்டது.
ஆலய வளாகம் மதிற் சுவருடன், மாதா கெபியும், குழந்தை இயேசு கெபி அமைத்தார். கல்லறைத் தோட்ட இடம் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டது மாபெரும் நிகழ்வு. தந்தை டஃபியின் செப கூடம் வழிபாட்டு தளமாக பொலிவுற்றது. புனித பத்திரிசியார் பள்ளி, கழிப்றையுடன் கட்டப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. பங்கு தந்தை இல்லம் புதுப்பிக்கப்பட்டு, தந்தை டஃபியின் கல்வெட்டு பதிவும் வரலாற்று நிகழ்வுகள் நன்றியுடன் நிறைவேறியுள்ளார்.
தந்தை தாராஸ் அவர்களின் உறவினரால் இந்தியா வந்த அன்னை சுரூபங்கள், சேத்துப்பட்டு, பூண்டி ஆலயங்களில் அன்றே வீதியில் வலம் வரப்பட்டது. இன்று 100 ஆண்டுக்கு பின், அருட்பணி. மெசியா அவர்களின் முயற்சியால் அன்னை சுரூபம் பங்கு முழுவதும் வலம் வரப்பட்டது. புதுபட்டு, நார்சாம்பட்டு ஆலயங்கள் புனரமைப்பும், மேல்மலையனூர், ஆனந்தாங்கல் ஆலயத்திற்கான இடமும், பங்குக்கான ஒரு ஏக்கர் நிலமும் பெறப்பட்டது. கூட்ரோட்டில் புனித அந்தோணியார் கெபியில் வழிபாடுகள் சிறப்பு பெற்றது. 2018-ல் அருட்பணி. தாமஸ் கவான் டஃபி அவர்களிடம் ஜெபித்து, திருப்பலி நிறைவேற்றி போர்வெல் போடப்பட்டது. 2022-ல் ஓடத்தாங்கல் கிளைப்பங்கில் குழந்தை இயேசு சிற்றாலயம் கட்டப்பட்டது. கல்வி வளம் வளர்ந்துள்ளது. இவ்வாறு பங்கில் அருட்தந்தை மெசியாவின் 12 ஆண்டு காலப்பணிகள் போற்றுதலுக்குரியது.
அருட்பணி. G. மரிய ஆனந்தராஜ் பங்கு பணிப் பொறுப்பின் இரண்டு ஆண்டுகளில்,
தவறாமல் சிறுவர் சிறுமியர் ஞாயிறு மறைக்கல்வியும் மற்றும் புதிய கத்தோலிக்க குடும்ப புத்தகமும் புதுப்பிக்கப்பட்டது.
லூர்து அன்னை கெபி:
வேதம் வளர்க்கப்பட்ட வேலந்தாங்கலில் தூய லூர்து அன்னை கெபியானது, மிகப் பொலிவுடன் மரிவலம் கொண்ட பாதையுடன் அமைக்கப்பட்டு, 10-10-2012 அன்று அர்ச்சிக்கப்பட்டது.
அருட்பணி. தாமஸ் கவான் டஃபி விழா:
அருட்பணி. தாமஸ் கவான் டஃபி அவர்களின் விழா, ஒவ்வொரு மாதமும் அவர் பிறந்த நாளான 23-ம் தேதி, TGD ஜெபக்குழுவால் கூடுகை செய்து அவருக்காக ஜெபிக்கவும், அவரிடம் நமக்காக ஜெபிக்கவும் விழா நடத்தப்பட்டு வருகிறது.
யூபிலி விழாக்கள்:
1877 ஆம் ஆண்டு பங்கின் வெள்ளிவிழா கொண்டாடப்பட்டது. 1902 ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட்டது. 1927 ஆம் ஆண்டு வைரவிழா (75 -ஆம் ஆண்டு) கொண்டாடப்பட்டது. 1952-ல் நூற்றாண்டு விழாவும், 1977-ல் 125-வது ஆண்டு விழாவும், 2002-ல் 150-வது ஆண்டு விழாவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பங்கின் பள்ளிக் கூடங்கள்:
ஆர்.சி பெண்கள் தொடக்கப்பள்ளி
ஆர்.சி ஆண்கள் புனித பத்திரிசியார் தொடக்கப்பள்ளி
இமாகுலேட் உயர்நிலைப் பள்ளி.
பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:
1. அருட்பணி. லூயிஸ் மத்தியாஸ் 1853-1859
2. அருட்பணி. பாக்கியநாதர் 1859-1862
3. அருட்பணி. அருள்நாதர் 1862-1863
4. அருட்பணி. அந்தோனிசாமி 1863-1868
5. அருட்பணி. செல்வநாதர் 1868-1869
6. அருட்பணி. போலார்டு 1869-1872
7. அருள்சகோ. அருள்மரி 1872-1874
8. அருட்பணி. ஆரோக்கியநாதர் 1874-1875
9. அருட்பணி. பொலார்டு 1875-1876
10. அருட்பணி. இராயப்பநாதர் 1876-1877
11. அருட்பணி. தாராஸ் 1877-1878
12. அருட்பணி. மரிய ஆரோக்கியம் 1878-
13. அருட்பணி. தூரியர் 1878-1879
14. அருட்பணி. திதியர் 1879-1880
15. அருட்பணி. சீக்முல்லர் 1880-1881
16. அருட்பணி. சவரிநாதர் 1881-1882
17. அருட்பணி. கபில்லத் 1882-1884
18. அருட்பணி. பௌத்ரத் 1884-1885
19. அருட்பணி. ரெஜிஸ் 1885-1892
20. அருட்பணி. மைக்கேல் 1892-1894
21. அருட்பணி. லாசர் 1895-1901
22. அருட்பணி. கிளமெண்ட் 1901-1902
23. அருட்பணி. ரெஜிஸ் 1902-1909
24. அருட்பணி. மரிய அடைக்கலம் 1910-1912
25. அருட்பணி. தாமஸ் கவான் டஃபி 1913-1914
26. அருட்பணி. பவுல் ஆரோக்கியம் 1915-1919
27. அருட்பணி. லமாத் 1920-1925
28. அருட்பணி. போயர் 1925-1930
29. அருட்பணி. மோன்சலின் 1930-1942
30. அருட்பணி. ராஜன் 1942-1944
31. அருட்பணி. அந்தோணிசாமி 1944-1947
32. அருட்பணி. ராயன் 1947-
33. அருட்பணி. மரிய நாதர் 1947-1948
34. அருட்பணி. J. சூசை 1948-1949
35. அருட்பணி. மரிய நாதர் 1949-1950
36. அருட்பணி. S.J. காந்தி 1950-1951
37. அருட்பணி. J. சூசை 1951-1957
38. அருட்பணி. ஜேக்கப் யெதனப்பள்ளி 1957-1959
39. அருட்பணி. பவுல் புத்தனங்காடி 1959-1971
40. அருட்பணி. P. ஜேக்கப் 1971-1974
41. அருட்பணி. R. எலியாஸ் 1974-1977
42. அருட்பணி. V. S. அந்தோனிசாமி 1977-1988
43. அருட்பணி. A. ஜான் ஜேம்ஸ் 1988-1989
44. அருட்பணி. ஆபிரகாம் அந்தோணி 1989-1994
45. அருட்பணி. I. இரட்சகர் 1994-1996
46. அருட்பணி. K. அகஸ்டின் 1996-
47. அருட்பணி. P. இருதயம் 1996-1997
48. அருட்பணி. D. ஸ்தனிஸ்லாஸ் 1997-2000
49. அருட்பணி. A. சக்கரியாஸ் 2000-2002
50. அருட்பணி. அமலோர் புஷ்பராஜ் 2002-2005
51. அருட்பணி. A. ஜான் போஸ்கோ 2005-2009
52. அருட்பணி. A.S. அந்தோனிசாமி 2009-2011
53. அருட்பணி. V. மெசியா 2011-2023
54. அருட்பணி. G. மரிய ஆனந்தராஜ் 2023-2025
55. அருட்பணி. D. பீட்டர் ஹென்றி ஜோஷ்வா 15.06.2025 முதல்...
சில நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த வேலந்தாங்கல் ஆலயம் வாருங்கள்.. புனித விண்ணேற்பு அன்னையின் வழியாக இறையாசீர் பெற்றுச் செல்லுங்கள்..
தகவல்கள்: ஆலய உறுப்பினர் திரு. அக்சிலியம் பெலிக்ஸ், பணிநிறைவு வட்டார கல்வி அலுவலர்.















