புனித அடைக்கல மாதா ஆலயம்
இடம்: மறவபட்டி, தாடிக்கொம்பு வழி, விராலிப்பட்டி அஞ்சல், திண்டுக்கல், 624 709
மாவட்டம்: திண்டுக்கல்
மறைமாவட்டம்: திண்டுக்கல்
மறைவட்டம்: மாரம்பாடி
நிலை: பங்குத்தளம்
கிளைப்பங்குகள்:
1. புனித சலேத் மாதா திருத்தலம், மறவபட்டி புதூர்
2. குழந்தை இயேசு ஆலயம், தாடிக்கொம்பு
3. புனித குழந்தை இயேசுவின் தெரசாள் ஆலயம், பிறகரை
4. புனித சந்தியாகப்பர் ஆலயம், மைக்கேல் பாளையம்
பங்குத்தந்தை: அருட்பணி. அ. ராபர்ட்
Contact no: 96889 30761
குடும்பங்கள்: 350 (கிளைப்பங்குகள் சேர்த்து)
அன்பியங்கள்: 14 (கிளைப்பங்குகள சேர்த்து)
திருவழிபாட்டு நேரங்கள்:
ஞாயிறு திருப்பலி காலை 05:00 மணி காலை 06:45 மணி காலை 08:30 மணி
செவ்வாய், வெள்ளி திருப்பலி காலை 05:30 மணி
திங்கள், செவ்வாய், புதன் திருப்பலி மாலை 07:00 மணி
வியாழன் காலை 11:00 மணி புனித சந்தியாகப்பர் நவநாள் திருப்பலி
வியாழன் மாலை 07:00 மணி புனித சந்தியாகப்பர் நவநாள் திருப்பலி மிகவும் சிறப்பாக நடைபெறும். அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும்.
தனிச்சிறப்பு:
12 சீடர்களின் திருப்பண்டங்கள் மற்றும் 29 புனிதர்களின் திருப்பண்டங்கள் அமைந்துள்ளது.
புனித சந்தியாகப்பர் அற்புத கெபி.
திருவிழா:
பிப்ரவரி முதல் வாரத்தில் (தை மாதத்ததில்)
ஜூலை மாதத்தில் புனித சந்தியாகப்பர் திருவிழா. அதாவது ஆடி மாதத்தின் கடைசி வியாழன், வெள்ளி, சனி ஆகிய மூன்று நாட்கள் நடைபெறும்.
மண்ணின் இறையழைத்தல்கள்:
அருட்தந்தையர்கள்:
1. Fr. ஜெயராஜ், Trichy
2. Fr. லாரன்ஸ் தர்மராஜ், SJ
3. Fr. அலெக்ஸ், SJ
4. Fr. ஆல்பர்ட், SJ
5. Fr. பேட்ரிக், SJ
6. Fr. சூசை ஆரோக்கியதாஸ், Dindigul
7. Fr. கிறிஸ்துராஜா, Dindigul
8. Fr. சந்தியாகு, OFM Cap
9. Fr. பீட்டர் சலேத்நாதன், OFM
10. Fr. அந்தோணி தாஸ், CMF
11. Fr. லாரன்ஸ் சேவியர் ராஜ், CMF
12. Fr. ஜஸ்டின், SDB
13. Fr. லிகோரி ஆரோக்கியதாஸ், Dindigul
14. Fr. அலெக்ஸ் ஜானி, SDB
15. Br. பெலிக்ஸ், Patrician
16. Fr. அமல்ராஜ், Dindigul
17. Br. அந்தோணி கிறிஸ்டோபர், SH
18. Br. பேட்ரிக், SDB
19. Br. ராபின் ஸ்மித், Dindigul
அருட்சகோதரிகள்:
1. Sr. காசியான் மேரி, St. Anne's
2. Sr. கிரகோரி மேரி, Servite
3. Sr. திருமுக ரோஸ் மேரி, Servite
4. Sr. சேசுமேரி, Bonsecours
5. Sr. சமீனா மேரி, Servite
6. Sr. விக்டோரியா, Bonsecours
7. Sr. ஜெஸிந்தா மேரி, Servite
8. Sr. ஆக்னஸ், St. Thomas
9. Sr. ரெக்சலின் அவிலா செல்வி, Holy Cross
10. Sr. லதாமேரி, MSI
11. Sr.ஜெனிதா, CIC
12. Sr. கேத்தரின் பிரியா, Sister's Of Charity
13. Sr. மரிய கிறிஸ்டி விமலா ராணி, Sister's Of Charity
14. Sr. ஜெனிபர், Holy Cross
15. Sr. மோனிகா, Holy Cross
Church Map location: Our Lady of Refuge Church
https://maps.app.goo.gl/JhAaseLgPFsieUtR6
வழித்தடம்: திண்டுக்கல் -தாடிக்கொம்பு -மறவபட்டி
வரலாறு:
மாரம்பாடி பங்கின் கீழ் செயல்பட்டு வந்த, மறவபட்டியில் சுமார் 200 வருடங்களுக்கு முன்பு கூரை வேய்ந்த ஆலயம் இருந்தது. இதன் பின்பு கூரை கோவில் செங்கல், சுண்ணாம்பு கலவையால் கட்டப்பட்டு புனித அடைக்கல மாதா ஆலயம் என்று பெயர் மாற்றப்பட்டது. இந்த ஆலயத்தில் இருந்த புனித சந்தியாகப்பர், புனித செபஸ்தியார், புனித அடைக்கல மாதா, புனித அந்தோணியார் உள்ளிட்ட புனிதர்களை மக்கள் தொடர்ந்து வணங்கினர்.
மாரம்பாடி பங்கின் கிளைப் பங்காக இருந்த உலகம்பட்டி புனித அந்தோனியார் ஆலயமானது 1950-ம் ஆண்டில் தனிப்பங்காக உயர்த்தப்பட்ட போது, மறவபட்டி ஆலயமானது, உலகம்பட்டியின் கிளைப்பங்காக மாற்றப்பட்டது.
13.06.1988 அன்று மறவபட்டி தனிப்பங்காக உயர்த்தப்பட்டது. முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. சேசுராஜ் அவர்கள் பணிப்பொறுப்பேற்றுக் கொண்டார்.
அருட்பணி. சேசுராஜ் அவர்களின் முயற்சியால் குழந்தை இயேசு உயர்நிலைப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது.
1988 காலகட்டத்தில் இருந்தே அடைக்கல மாதா ஆரம்பப் பள்ளியும் செயல்பட்டு வருகிறது.
புதிய ஆலயம்:
அருட்பணி. ஸ்டீபன் கஸ்பார் பணிக்காலத்தில், இந்த பழைய தொன்மை வாய்ந்த ஆலயம் சிறியதாக இருந்ததாலும், மறவபட்டி பங்கு மக்கள் தொகை பெருகிய காரணத்தாலும் இந்த ஆலயத்தை இடித்துவிட்டு புதிய பெரிய ஆலயத்தைக் கட்டலாம் என்று மறவபட்டி இறைமக்கள் ஒன்றுகூடி முடிவு செய்தனர். அதைத் தொடர்ந்து புதிய அடைக்கல மாதா ஆலயம் பழைய ஆலயத்துக்கு மேற்கில் கட்டி புனித சந்தியாகப்பர், செபஸ்தியார், அடைக்கல மாதா, அந்தோணியார் உள்ளிட்ட புனிதர்களின் சுரூபங்கள் புதிய அடைக்கல மாதா ஆலயத்தில் வைக்கப்பட்டு, 12.10.2008 அன்று அர்ச்சிக்கப்பட்டது.
அருட்பணி. லியோ ஜோசப் அவர்களின் பணிக்காலத்தில் கருங்கல்லினால் ஆன 53 அடி உயர கொடிமரம் நிறுவப்பட்டது.
2023 ம் ஆண்டு 14 சிலுவைபாதை நிலைகள் வைக்கப்பட்டு, ஆயர் தாமஸ் பால்சாமி அவர்களால் அர்சிக்கப்பட்டது.
2023 ஆம் ஆண்டில் அருட்பணி. ராபர்ட் அவர்கள் பங்குத்தந்தையாக பொறுப்பேற்ற பிறகு, ஊருக்கு தார்ச்சாலை மீண்டும் அமைக்கப்பட்டது.
உயிர்த்த ஆண்டவர் கெபி:
2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 05-ம் தேதி மறவபட்டி மக்களுக்கு ஒரு முக்கியமான நாளாகும். காரணம் இந்த நாளில் தான் உயிர்த்த ஆண்டவர் கெபி கட்டப்பட்டு, அதில் இயேசுவின் 12 சீடர்கள் மற்றும் 29 புனிதர்களின் முதல்நிலை திருப்பண்டங்கள் (புனிதர்களின் எலும்புகள்) வைக்கப்பட்டு, திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் மேதகு தாமஸ் பால்சாமி அவர்களால் மந்திரிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. இவ்விழாவில் பிரான்ஸ் நாட்டின் ஆயர் அவர்கள் மற்றும் பல பிரெஞ்சு குருக்களும் இவ்விழாவில் பங்கேற்றனர்.
2024 ஆம் ஆண்டில் மறவபட்டி மக்கள் மற்றும் திருப்பயணிகளின் நன்கொடைகளின் உதவியுடன், ஆலயத்தை சுற்றி தரையில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டது.
ஆலய விரிவாக்கம்:
தற்போது பங்குத்தந்தை அருட்பணி. ராபர்ட் அவர்களின் முயற்சியால் மறவபட்டி மக்கள் மற்றும் திருப்பயணிகளின் நிதிபங்களிப்புடன் ஆலய விரிவாக்கம், புதிய பீடம், புதிய கோபுரப் பணிகள், ஆலய திருப்பூட்டறை பணிகள் ஆகியன 2025 ஆம் ஆண்டில் நடைபெற உள்ளது.
புதுமைகள் நிறைந்த புனித சந்தியாகப்பர் கெபி திருத்தலம்:
பழைய ஆலயம் இருந்த இடத்தில் 28.01.2016 அன்று புனித சந்தியாகப்பர் கெபி திருத்தலம் கட்டப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது.
புனித சந்தியாகப்பர் வெள்ளை குதிரையில் பிரகாசமாக ஒளியோடு தெருக்களில் வலம் வருவது... சந்தியாகப்பர் சுரூபத்தின் கண்கள் உயிருள்ள கண்காளாக மாறுவது.... திருத்தலத்திலிருந்தும், திருத்தலத்தை சுற்றிலும் சுகந்த நறுமண வாசனை வருவது.. திருத்தலத்தின் முன்பு மணல் பகுதியில் எண்ணெய் போன்ற அற்புத நீரூற்று வெளிப்படுவது என்று பல்வேறு அற்புதங்கள் இங்கு நடந்து வருகிறது. ஆகவே புதுமைகள் நிறைந்த இந்த திருத்தலத்தைநாடி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் நாள்தோறும் வருகை தருகின்றனர்.
திருப்பயணிகளுக்கான வசதிகள்:
திருப்பயணிகள் தங்குவதற்கு வசதியாக மண்டபம் ஒன்று உள்ளது. 24 மணிநேரமும் கிடைக்கின்றன வகையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கழிப்பறைகள், குளியலறை வசதிகள் என பல்வேறு வசதிகளும் உள்ளன. மேலும் திருப்பயணிகளின் ஆன்மீகத் தேவைக்காக எப்போது வேண்டுமானாலும் திருப்பலி நிறைவேற்ற, பங்குத்தந்தை ஏற்பாடுகள் செய்து கொடுக்கின்றார்.
பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:
1. மாதா சபை
2. புனித வின்சென்ட் தே பவுல் சபை
3. இளையோர்
4. அன்னை கலை மன்றம்
5. சான்டா குழுவினர்
6. வேளாங்கண்ணி பாதயாத்திரை குழு
7. திருவழிபாட்டுக் குழு
8. பாடகற்குழு
9. பீடப்பூக்கள்.
பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:
1. அருட்பணி. V. சேசுராஜ் (1988-1992)
2. அருட்பணி. S. சவேரியார் (1992-1993)
3. அருட்பணி. I. அமலநாதன் (1993-1997)
4. அருட்பணி. A. ஜோசப் செல்வராஜ் (1997-1998)
5. அருட்பணி. A. ஜான்சன் (1998-2002)
6. அருட்பணி. V. பீட்டர் ராஜ் (2003-2004)
7. அருட்பணி. S. ஸ்டீபன் கஸ்பார் (2004-2009)
8. அருட்பணி. A. எர்னெஸ்ட் அந்தோணிசாமி (2009-2014)
9. அருட்பணி. M. ஜான் பீட்டர் (2014-2016)
10. அருட்பணி. P. செல்வராஜ் பீட்டர் (2016-2017)
11. அருட்பணி. A. லியோ ஜோசப் (2017-2022)
12. அருட்பணி. S. சுரேஷ் சகாயராஜ் (2022-2023)
13. அருட்பணி. அ. ராபர்ட் (2023-----
பல்வேறு புதுமைகள் நிறைந்த மறவபட்டி பங்கிற்கு வாருங்கள்... இறறையாசீர் பெற்றுச் செல்லுங்கள்..
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குதந்தை அருட்பணி. அ. ராபர்ட் அவர்கள். Contact no: 96889 30761





