புனித அந்தோனியார் ஆலயம்
இடம்: மடத்துவிளை
மாவட்டம்: தூத்துக்குடி
மறைமாவட்டம்: தூத்துக்குடி
மறைவட்டம்: சாத்தான்குளம்
நிலை: கிளைப்பங்கு
பங்கு: புனித சவேரியார் ஆலயம், சி.சவேரியார்புரம்
பங்குத்தந்தை அருட்பணி. ரெமிஜியுஸ் S. லியோன்
குடும்பங்கள்: 35
மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது ஞாயிறு காலை 11:00 மணி திருப்பலி
திருவிழா: உவரி புனித அந்தோனியார் திருத்தல 8-ம் திருவிழா அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, 13 நாட்கள் (ஜனவரி மாதத்தில்)
வழித்தடம்: சி.சவேரியார்புரம் -மடத்துவிளை
Map location: St. Antony's Church, Madathuvilai
https://maps.app.goo.gl/JNBoy2WUpLF3BMoU9
வரலாறு:
மடத்துவிளை தொடக்கத்தில் விராக்குளம் கிராமத்திற்கு தென்பகுதியில் அமைந்திருந்தது. சவரிமுத்து புண்ணியவான் என்பவரின் குருசடியைக் கோவிலாகக் கொண்டு, மக்கள் ஜெபம் செய்து வழிபட்டு வந்தனர். சில ஆண்டுகளுக்குப் பிறகு கிராமத்தில் மக்களுக்கு உடல் நலம் சரியில்லாமல், பெண்களுக்கு பாதுகாப்பில்லாமலும், திருட்டும் அதிகமாக நடைபெற்று வந்தது. இதன்பின் கோமாநேரி கிராமத்தில் கல்லூட்டு பிள்ளை என்பவரிடம் 10 ஏக்கர் நிலம் வாங்கினார்கள். மலையப்ப நாடார், குருசு நாடார் இவர்களால் புதிய மடத்துவிளை உருவாகியது.
மடத்துவிளை முதன்முதலில் சோமநாதபேரி பங்கின் இணைப்பங்காக இருந்தது. பின்பு சிந்தாமணி பங்கிற்கு (1950) மாறியது. சிந்தாமணி பங்கில் பங்குத் தந்தையாக பணிசெய்த அருட்தந்தை அந்தோணி. S. பர்னாந்து அடிகளார் (1952-53) அவர்களால் புனித அந்தோணியார் சொரூபம் ஒன்று ஊருக்கு வழங்கப்பட்டது. மக்கள் ஓலைக்குடிசையால் ஆன ஆலயம் ஒன்றை அமைத்து, அதில் புனித அந்தோணியார் சொரூபத்தை வைத்து வழிபட ஆரம்பித்தனர். சில வருடங்களுக்குப் பிறகு நெடுங்குளம் பங்கோடு மடத்துவிளை இணைக்கப்பட்டது.
நெடுங்குளம் பங்குத்தந்தை அருட்பணி. M. இருதயராஜ் அடிகளார் அவர்களால் புதிய ஆலயம் கட்டப்பட்டு, 19.02.1987 அன்று மேதகு ஆயர் S.T. அமலநாதர் ஆண்டகையால் அர்ச்சிக்கப்பட்டது.
1999 ஆம் ஆண்டு மடத்துவிளை, சி.சவேரியார்புரம் பங்குடன் இணைக்கப்பட்டது. 25.10.2006 அன்று இரவு நேரத்தில் ஆலயத்தில் 8 பேர் ஜெபம் செய்து கொண்டிருந்த போது, ஆலயத்தில் இடி தாக்கியதில் மேற்கூரை பாதிக்கப்பட்ட போதும், ஆலயத்தில் இருந்த எவருக்கும் புனித அந்தோணியாரின் கிருபையால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் இடி தாங்கிய புனித அந்தோணியார் ஆலயம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இடி விழுந்த காரணத்தினால் பழுதடைந்த கோவிலின் மேற்கூரை மாற்றப்பட்டு, கோவிலின் முன்புறம் மண்டபம் கட்டப்பட்டது.
25.02.2011 அன்று புதுப்பிக்கப்பட்ட ஆலயம் அர்ச்சிக்கப்பட்டது. மேலும் 2014ஆம் ஆண்டு ஒரே தேக்கு மரத்தால் ஆன அதிசய தேர் ஒன்று 40 நாட்களில் செய்யப்பட்டது. இன்றும் மடத்துவிளை சிறிய கிராமமாக இருந்தாலும் மக்கள் ஒற்றுமையிலும் பக்தியிலும் சிறந்து விளங்குகின்றார்கள். இடி தாங்கிய புனித அந்தோணியார் ஆலயத்தில் பக்தியோடு வேண்டும் மக்களுக்கு அதிசயமும், அற்புதமும் இன்றும் நடந்து கொண்டே இருக்கின்றன.
தகவல்கள்: பங்குதந்தை அருட்பணி. ரெமிஜியுஸ் S. லியோன் அவர்கள்.
ஆலய வரலாறு: பங்கு ஆலய வெள்ளிவிழா மலர் 2024.
புகைப்படங்கள்: சகோதரர். ஜிம் எலியட் பிரேம்குமார், பாளையங்கோட்டை.





