புனித இஞ்ஞாசியார் ஆலயம்
இடம்: கோவளம்
மாவட்டம்: கன்னியாகுமரி
மறைமாவட்டம்: கோட்டாறு
மறைவட்டம்: கன்னியாகுமரி
நிலை: பங்குத்தளம்
பங்குத்தந்தை: அருட்பணி. த. சகாய சுனில்
உதவிப் பங்குத்தந்தை: அருட்பணி. ஜாண் பிரிட்டோ
குடும்பங்கள்: 1193
அன்பியங்கள்: 36
வழிபாட்டு நேரங்கள்:
ஞாயிறு காலை 05:15 மணி முதல் திருப்பலி, காலை 07:00 மணி இரண்டாம் திருப்பலி
திங்கள் முதல் சனி வரை திருப்பலி காலை 06:15 மணி
வியாழன் மாலை 06:00 மணி ஜெபமாலை, புனிதரின் நவநாள், சிறப்பு திருப்பலி, நற்கருணை ஆசீர்
திருவிழா: ஜூலை மாதத்தில், 11 நாட்கள்
மண்ணின் இறையழைத்தல்கள்:
1. அருட்பணி. எம்மானுவேல் பெரைரா
2. அருட்பணி. வெனான்சியுஸ் பெர்னாண்டோ
3. அருட்பணி. செபஸ்தியான் பெர்னாண்டோ
4. அருட்பணி. வின்சென்ட் பெரைரா
5. அருட்பணி. சிரில் பெர்னாண்டோ
6. அருட்பணி. மார்டின் அலங்காரம்
7. அருட்பணி. வெனான்சியூஸ் பெர்னாண்டோ
8. ஆயர். லியோன் அ. தர்மராஜ்
9. அருட்பணி. ஹெர்மனஜில்ட் ஜெயசந்திரா
10. அருட்பணி. ஞானதாஸ்
11. அருட்பணி. பெல்லார்மின்
12. அருட்பணி. மரியபாஸ்கல்
13. அருட்பணி. எம்மானுவேல்
14. அருட்பணி. அந்தோனிராஜ்
15. அருட்பணி. சகாய ஸ்டான்லி
16. அருட்பணி. பாஸ்கல் செல்வகுரூஸ்
17. அருட்பணி. சூசை ஆன்றனி
18. அருட்பணி. அமுதவளன்
19. அருட்பணி. லிகோரி
20. அருட்பணி. ஜோசப் இம்மானுவேல் அமித்
21. அருட்பணி. லெனின்
22. அருட்பணி. மைக்கேல் நியூமன்
23. அருட்பணி. சிலுவை பிராங்கோ பிரான்சிஸ்
அருட்சகோதரிகள்:
1. அருட்சகோதரி. மரியம்மாள்
2. அருட்சகோதரி. நெபோர் மேரி
3. அருட்சகோதரி. இனிகோ
4. அருட்சகோதரி. ஜெரால்டின்
5. அருட்சகோதரி. நிக்கோலா ராணி
6. அருட்சகோதரி. பெலிசிட்டா ரூபி
7. அருட்சகோதரி. பெல்சி
8. அருட்சகோதரி. லீமா ரோஸ்
9. அருட்சகோதரி. சேவியரம்மாள்
10. அருட்சகோதரி. மேரிமார்சிலாள்
11. அருட்சகோதரி. ரமோனா
12. அருட்சகோதரி. மெரினாஸ்
13. அருட்சகோதரி. ஜாய்ஸ் மேரி
14. அருட்சகோதரி. ஜெயா
15. அருட்சகோதரி. மிக்கேல் ஆரோக்கிய சபினா
16. அருட்சகோதரி. குயின்சிங்
வழித்தடம்: நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம் -கோவளம். 1K, 2, 2K, 1, 1J, 2VK
Church Map location: St. Ignatius Church
https://maps.app.goo.gl/eFjMw79uvTnz5PMCA
வரலாறு:
உதயத்தின் தொடக்கம்:
தெற்கே ஆர்ப்பரிக்கும் திரைகள் வந்து தவழும் அரபிக் கடலும், வடக்கே விரிந்த தென்னஞ்சோலையின் மருத நிலப் பசுமையும், மேற்கே பெரிய தலக்குளமான ஓடைக்குளமும், கிழக்கே சேர எல்லையாம் கோட்டக்கரை என்னும் வனப்புமிகு மேட்டுநிலமும், அரணாய் அமைந்து நிற்பதுதான் கோவளம் என்னும் ஊர். 'கோவளம்' என்னும் சொல், முனையை அடுத்தபட்டினம் எனப் பொருள்படும். ஆகவே முற்காலத்தில் இது கன்னியாகுமரி முனையை அடுத்த ஒரு சிறந்த பட்டினமாக இருந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
கடலோர கிராமங்களில் தங்கி, கால்நடையாகப் பயணம் மேற்கொண்டு, மக்களிடம் மறை அறிவைப் புகுத்தினார் புனித பிரான்சிஸ் சவேரியார். கோவளத்தில் பணிபுரிந்த நாட்களில் இறந்தவரை உயிர்பெறச் செய்த புதுமை ஒன்று அவரது தூய வராலற்றில் இடம் பெற்றுள்ளது. இந்தப் புதுமை தூய சவேரியார் புனிதராக திருஅவையால் அங்கீகரிக்கப்பட ஒரு காரணம் ஆயிற்று என்றும் கூறப்படுகிறது.
புனித பிரான்சிஸ் சவேரியார் பணிபுரிந்த போது கோவளத்திற்கு சியன்னா நகரத்து புனித கத்தரினம்மாள் என்ற புனிதையை பாதுகாவலியாக கொண்டு இருந்தது. கோவா மறைமாவட்ட பேராலயத்தின் பாதுகாவலியாக இதே புனிதை திகழ்கிறார். எனவே தென்னகத்து கோவா என்ற சிறப்பு பெயரிட்டு கோவளத்தை அழைத்தனர். கோவளம் பங்கின் முதல் புனிதராக லாரன்ஸ் இருந்திருக்கிறார். கோவளத்தில் ஏற்பட்ட மாபெரும் கொள்ளை நோயினால் பலர் இறந்தனர். இந்த நோயிலிருந்து விடுதலை பெற விரும்பிய மக்கள் புனித இஞ்ஞாசியாரிடம் வேண்டி, நலம் பெற்று வாழ்ந்தனர். அன்று முதல் படிப்படியாக புனித இஞ்ஞாசியார் மீதுள்ள அன்பு வளர்ந்தது. அதுவே நாளடைவில் வளர்ச்சியுற்று, அவரையே பாதுகாவலராக கொள்ளும் அளவுக்கு மாறியது. அப்போது கன்னியாகுமரி பங்கு பணியாளராக இருந்த அருட்பணி. வின்சென்ட் பெர்னாண்டஸ் அவர்களால், 1917 ஆம் ஆண்டு புனித இஞ்ஞாசியார் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
கி.பி 1908-ல் கோவளம் பங்கில் ஆரம்பப் பள்ளி தொடங்கப்பட்டது.
உதயத்தின் சிறப்பு:
கி.பி 1930-ம் ஆண்டு கொல்லம் மறைமாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு கோட்டாறு தனி மறைமாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இதன் முதல் ஆயராக மேதகு. லாரன்ஸ் பெரைரா நியமிக்கப்பட்டார். 1931 ஆம் ஆண்டு கோவளத்தின் முதல் குருவாக இம்மானுவேல் பெரைரா திருநிலைப்படுத்தப்பட்டார். 1940-ம் ஆண்டு கல்லுமூலையில் மிகுந்த பொருட்செலவில், மாதாவின் அழகிய சுரூபம் அமைக்கப்பட்டது. கடலை நோக்கி காட்சியளிக்கும் கடல் பயணிகளின் காவலாளியாம், சிந்தாத்துறை மாதா அன்று முதல் கடல்வழி பயணம் செய்யும் அனைவருக்கும், அருள்பொழிந்து கொண்டிருக்கிறார்.
1943 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மேதகு ஆயர் ஆஞ்ஞிசாமி அவர்கள் கன்னியாகுமரி பங்கிலிருந்து பிரித்து, கோவளத்தை தனிப் பங்காக உயர்த்தினார்.
தூய பாத்திமா அன்னையின் சுரூபம் கி.பி 1950 ஆம் ஆண்டு டிசம்பர் 31-ம் நாள் கோவளம் பங்கிற்கு பவனியாக கொண்டு வரப்பட்டது. அப்பொழுது சாலையில் மூடிக்கிடந்த மணலை அகற்ற ஊர் மக்களோடு சேர்ந்து உதவி செய்த வாய்பேச இயலாத இளைஞன் ஒருவன் வாய் திறந்து பேசினான். அதன் நினைவாக மாதாவிற்கு நன்றியாக, மாதா கெபி எழுப்பப்பட்டது.
கோவளம் புனித லொயோலா இஞ்ஞாசியார் ஆலயத்திற்கு புதிய திருவழிபாட்டு முறைகேற்ப புதிய பலிபீடத்தை அமைத்தும், ஆலய பொன்விழா நினைவாக 1970-ம் ஆண்டு வானுயர் அழகிய கோபுரத்தை அமைத்த அருட்தந்தை ஆண்ட்ரூஸ் செல்வராஜ் அவர்களின் செயல்பாடுகள் சிறப்புமிக்கதாக அமைந்தது. மேலும் அதற்கான நிதி ஆதாரத்திற்காக "குத்தகை, சஞ்சாயம், மற்றும் மகிமை” போன்றவைகள் பின்பற்றப்பட்டன.
உதயத்தின் நிறைவு:
பங்கின் முழு நிறைவாக 1989-ம் ஆண்டு கோவளம் மண்ணின் மைந்தர் பேரருட்பணி. லியோன் அ. தர்மராஜ் அவர்கள், கோட்டாறு ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டு பொறுப்பேற்று கொண்டது கோவளம் பங்கிற்கு மிகவும் பெருமை தரக்கூடியதாக அமைந்துள்ளது.
அருட்பணி. டோமினிக் கடாட்சதாஸ் அவர்களின் பணிக்காலத்தில் மக்களின் குடியிருப்புகளை அமைக்க வழிகாட்டினார். மேற்குப்பகுதியில் வேளாங்கண்ணி மாதா குருசடி கட்டப்பட்டது. தொடக்கப் பள்ளி சுயநிதி நடுநிலை பள்ளியாக 1998 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.
அருட்பணி. ஜோசப் ஜஸ்டஸ் அவர்களின் பணிக்காலத்தில் பங்குப்பேரவையுடன் இணைந்து, சுனாமி மறுவாழ்வு திட்டத்தின் புதிதாக நிலங்கள் வாங்கப்பட்டு, புதிய குடியிருப்புகள் அமைக்கப்பட்டன. பிராக்சிஸ் நகர், கே.எஸ்.எஸ் நகர், டீ.சிநகர், சிசுநகர், பிஷப் லியோன் நகர், ஆக்சன் எய்டுநகர் போன்ற பகுதிகள் உருவாகின. பங்கின் செயல்பாடுகள் துறைவாரியாக நடைபெற வழிவகுக்கப்பட்டன. கோவளம் 2010 என்ற அடிப்படையில் திட்டங்கள் தீட்டப்பட்டன. ஐ.எஸ்.ஒ தரச் சான்றிதழ் பெற்ற கிராமமாக தரம் உயர்த்தப்பட்டது. உயர்நிலைப் பள்ளியாக பள்ளிகூடம் உயர்த்தப்பட்டு 9-ம் வகுப்பு தொடங்கப்பட்டு, அருட்பணி. வினாஞ்சியூஸ் பர்ணான்டோ அவர்களின் வைப்பு நிதி வழியாக, உயர் கல்விக்காக ஏழை மாணவர்களுக்காக உதவும் திட்டம் உருவாக்கப்பட்டது. பின்னர் பள்ளிக்கூடம் 10-ம் வகுப்பாக தரம் உயர்த்தப்பட்டது.
2017 ஜூலை 30 ஆம் நாள் ஆலய நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கொடிமரத்தைச் சுற்றி புனிதர்களின் சுரூபங்கள் வைத்தல், வியாகுல மாதா சுரூபம் அமைத்தல், ஆலய நூற்றாண்டு விழா சின்னம் அமைத்தல் ஆகிய திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டது.
பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:
1.பங்குப்பேரவை
2.அன்பிய ஒருங்கிணையம்
3.திருத்தூது கழகங்களின் ஒருங்கிணைப்பு
4.மறைக்கல்வி மன்றம்
5.திருவழிப்பாட்டுக் குழு
6.பாலர்சபை
7.சிறுவழி இயக்கம்
8.இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம்
9.இளைஞர் இயக்கம்
10.பாடகற்குழு
11.பீடப்பூக்கள்
12.சூசையப்பர் சபை
13.இஞ்ஞாசியார் சபை
14.மரியாயின் சேனை
15.கிறிஸ்தவ வாழ்வு சமூகம்
16.பிரான்சிஸ்கன் மூன்றாம் சபை
17.கத்தோலிக்க சேவாசங்கம்
18.திருஇருதய சபை
19.நற்கருணை சபை
20.வின்சென்ட் தே பவுல்
21.குடும்பநல பணிக்குழு
22. நற்செய்தி பணிக்குழு
பங்கின் கல்வி நிறுவனங்கள்:
புனித இஞ்ஞாசியார் தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி
பங்கின் குருசடி, கெபிகளும், திருவிழாவும்:
1. புனித தேவசகாயம், (சிசுநகர்), ஜனவரி
2. புனித செபஸ்தியார் (டீ.சிநகர்), ஜனவரி
3. புனித அந்தோணியார் விழா, பிப்ரவரி
4. புனித ஆரோக்கியநாதர் விழா, ஏப்ரல்
5. புனித பாத்திமா மாதா கெபி, மே
6. புனித ஜார்ஜியார் விழா, ஜூன்
7. புனித வேளாங்கண்ணி மாதா விழா, செப்டம்பர்
8. அன்னை தெரசா விழா (சன்செட் பாயின்ட்), செப்டம்பர்
9. சிந்தாத்துறை மாதா (சன்செட் பாயின்ட்), அக்டோபர்
10. அமலோற்பவ மாதா விழா (சிசுநகர்), டிசம்பர்
பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:
1.அருட்பணி. தர்மநாதர் (1943-1944)
2.அருட்பணி. ஜோசபாத் மரியா (1944-1947)
3.அருட்பணி. ஏ.ஜெ. ஜோசப் (1947-1949)
4.அருட்பணி. ஜெ. அகஸ்டின் பர்னாண்டோ (1949-1952)
5.அருட்பணி. வின்சென்ட் ரொட்ரிக்கோ (1954-1961)
6.அருட்பணி. ஆண்ட்ரூ செல்வராஜ் (1961-1973)
7.அருட்பணி. பர்னபாஸ் நேவிஸ் (1973-1978)
8.அருட்பணி. யூஜின் (1978-1979)
9.அருட்பணி. ஹென்றி (1979-1981)
10.அருட்பணி. ஜெரோம் பர்ணான்டோ (1981-1983)
11.அருட்பணி. பெஞ்சமின் (1983-1984)
12.அருட்பணி. சேவியர் ராஜா (1984-1986)
13.அருட்பணி. ஜார்ஜ் வின்சென்ட் (1986-1988)
14.அருட்பணி. ஜேசுதாஸ் (1988-1990)
15.அருட்பணி. வெனான்சியுஸ் (1990-1992)
16.அருட்பணி. ஜோசப் ராஜ் (1992-1994)
17.அருட்பணி. டோம்னிக் கடாட்சதாஸ் (1994-1998)
18.அருட்பணி. லாரன்ஸ் (1998-2001)
19.அருட்பணி. சூசை ஆன்றனி (2001-2005)
20.அருட்பணி. ஜோசப் ஜஸ்டஸ் (2005-2008)
21.அருட்பணி. வலேரியன் (2008-2013)
22.அருட்பணி. ஜாண் கென்னடி (2013-2014)
23.அருட்பணி. சேவியர் லாரன்ஸ் (2014-2017)
24.அருட்பணி. பிரபுதாஸ் (2017-2021)
25. அருட்பணி. ஜார்ஜ் கபிரியல் கிஷோர் (2021-2023)
26. அருட்பணி. சகாய சுனில் (2023......
பழைமையும் புதுமையும் நிறைந்த கோவளம் புனித இஞ்ஞாசியார் ஆலயத்திற்கு வாருங்கள்... இறைவனின் ஆசியை பெற்றுச் செல்லுங்கள்...
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குதந்தை அருட்பணி. த. சகாய சுனில் அவர்கள்.





















