புனித அந்தோனியார் ஆலயம்
இடம்: பிள்ளையார்குளம், முனைஞ்சிப்பட்டி அஞ்சல்
மாவட்டம்: திருநெல்வேலி
மறைமாவட்டம்: தூத்துக்குடி
மறைவட்டம்: சாத்தான்குளம்
நிலை: கிளைப்பங்கு
பங்கு: புனித சவேரியார் ஆலயம், சி. சவேரியார்புரம்
பங்குத்தந்தை அருட்பணி. ரெமிஜியுஸ் S. லியோன்
குடும்பங்கள்: 20
மாதத்திற்கு ஒருமுறை செவ்வாய் மாலை 07:00 மணி
திருவிழா: மே மாதத்தில்
வழித்தடம்: முனஞ்சிபட்டி -பேய்குளம் வழித்தடத்தில் பிள்ளையார்குளம் அமைந்துள்ளது.
Map location: St Antony's Church, Pillaiyarkulam
https://maps.app.goo.gl/dJNev8zwiLxrCBM49
வரலாறு:
பிள்ளையார்குளம் ஊரின் கிழக்கு திசையில், 1927 ஆம் ஆண்டில் புனித அந்தோனியார் பெயரின் பனை ஓலையால் வேயப்பட்ட குடிசை ஆலயம் அமைக்கப்பட்டு, சோமநாதபேரி பங்கின் கீழ் செயல்பட்டு வந்தது. 1950 ஆம் ஆண்டு சிந்தாமணி தனிப் பங்காக உருவானபோது, பிள்ளையார்குளம் அதன் கிளைப் பங்காக மாற்றப்பட்டது.
சிந்தாமணி பங்குத்தந்தை அருட்பணி. ஞானப்பிரகாசம் அவர்களது பணிக்காலத்தில் கல் கட்டிடத்தால் ஆன சிற்றாலயம் கட்டப்பட்டு, மேதகு ஆயர் அம்புரோஸ் அவர்களால் 21.06.1977 அன்று அர்ச்சிக்கப்பட்டது.
1999 ஆம் ஆண்டில் சி.சவேரியார்புரம் தனிப்பங்காக உருவானபோது, பிள்ளையார்குளம் அதன் கிளைப் பங்காக மாற்றப்பட்டது.
ஆலயமானது பராமரிப்பின்றி பழுதடைந்த நிலையில் இருந்ததால், 2006 ஆம் ஆண்டு சி.சவேரியார்புரம் பங்குதந்தை அருட்பணி. ஆரோக்கியதாஸ் அவர்களின் முயற்சியால் ஆலயமானது புதுப்பிக்கப்பட்டு, ஆலயத்தின் முன்புறம் மண்டபம் அமைக்கப்பட்டது.
தற்போது இந்த ஆலயத்தில் மாதத்திற்கு ஒருமுறை திருப்பலியும், திருவிழா மற்றும் பண்டிகை நாட்களில் சிறப்புத் திருப்பலியும் நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை மறைக்கல்வி வகுப்புகளும், கோடை விடுமுறையில் விடுமுறை வேதாகம வகுப்புகளும் அருட்சகோதரிகளால் சிறப்புற நடத்தப்பட்டு வருகிறது.
தகவல்கள்: பங்குதந்தை அருட்பணி. ரெமிஜியுஸ் எஸ். லியோன் அவர்கள்.
புகைப்படங்கள்: சகோதரர். ஜிம் எலியட் பிரேம்குமார், பாளையங்கோட்டை.


