1006 கிறிஸ்து அரசர் ஆலயம், கீழ பனைக்குளம்

      

கிறிஸ்து அரசர் ஆலயம்

இடம்: கீழ பனைக்குளம்

மாவட்டம்: தூத்துக்குடி

மறைமாவட்டம்: தூத்துக்குடி

மறைவட்டம்: சாத்தான்குளம்

நிலை: கிளைப்பங்கு

பங்கு: புனித சவேரியார் ஆலயம், சி.சவேரியார்புரம்

பங்குத்தந்தை அருட்பணி. ரெமிஜியுஸ் S. லியோன்

குடும்பங்கள்: 50

ஞாயிறு திருப்பலி காலை: 09:00 மணி

மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை மாலை 07:00 மணி திருப்பலி. தொடர்ந்து அசனம் (அன்பு விருந்து).

திருவிழா: மே மாதம் இரண்டாவது புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி பத்து நாட்கள்.

வழித்தடம்: பேய்குளம் -சாத்தான்குளம் வழித்தடத்தில், பேய்குளத்திலிருந்து 1கி.மீ தொலைவில் கீழ பனைக்குளம் அமைந்துள்ளது.

Location map: CHRIST THE KING CHURCH

https://maps.app.goo.gl/SmK8XHU3VeVvDgJLA

வரலாறு:

தொடக்க காலத்தில் (சுமார் 1950 ஆம் ஆண்டுக்கு முன்னர்) கீழபனைக்குளத்தில் உள்ள ஒருசில குடும்பத்தினர், பேய்குளம் புனித தோமையார் ஆலயத்திற்குச் சென்று இறைவனை வழிபட்டு வந்தனர். அதன் பிறகு இந்த ஊரில் உள்ள பல குடும்பத்தார் ஒன்றிணைந்து, இப்போது இருக்கும் ஆலயத்தின் வடக்குப் பகுதியில் ஒரு ஓலைக்குடிசை ஆலயம் அமைத்து வழிபட்டு வந்தனர். பின்பு அருட்தந்தை. தனிஸ்லாஸ் பாண்டியன் (1953-1959) அவர்கள் சிந்தாமணி பங்குத் தந்தையாகப் பணிபுரிந்த காலத்தில், அவரின் பெருமுயற்சியால் இங்கு புதிய ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. அடுத்துப் பொறுப்பேற்ற சிந்தாமணி பங்குத் தந்தை அவர்களால் ஆலயத் திறப்பு விழா நடத்தப்பட்டது.

1999 ஆம் ஆண்டு சவேரியார்புரம் தனிப்பங்காக உருவானபோது கீழபனைக்குளம் ஆலயம், சவேரியார்புரம் பங்கோடு இணைக்கப்பட்டது. அருட்பணி. எட்வர்ட் J. அடிகளார் அவர்களால் ஓடாக இருந்த ஆலய மேற்கூரையானது கான்கீரிட் கூரையாக மாற்றி புதுப்பிக்கப்பட்டு, 25.05.2000 அன்று அர்ச்சிக்கப்பட்டது. 

அருட்பணி. சகாய ஜஸ்டின் அடிகளார் அவர்களால் மணிக்கூண்டு கட்டப்பட்டு 19.05.2011 அன்று திறந்து வைக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2-வது வாரத்தில் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழாவானது வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. 50க்கும் மேற்பட்ட கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பங்கள் இவ்வூரில் உள்ளனர். அன்று முதல் இன்றுவரை ஆலயத்தில் ஞாயிறுதோறும் திருப்பலியும், அனைத்து ஆன்மீகக் காரியங்களும் இறைமக்களின் முழு ஈடுபாட்டுடன் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

தகவல்கள்: பங்குப் பணியாளர் அருட்பணி. ரெமிஜியுஸ் S. லியோன் அவர்கள்.

ஆலய வரலாறு: சி.சவேரியார்புரம் பங்கு ஆலய வெள்ளிவிழா மலர் 2024.

புகைப்படங்கள்: சகோதரர். ஜிம் எலியட் பிரேம்குமார், பாளையங்கோட்டை.