1024 வியாகுல அன்னை திருத்தலப் பேராலயம், மதுரை

                                        

வியாகுல அன்னை திருத்தலப் பேராலயம்

இடம்: கீழவாசல், மதுரை, 625001

மாவட்டம்: மதுரை

மறைமாவட்டம்: மதுரை உயர் மறைமாவட்டம்

மறைவட்டம்: மதுரை தெற்கு

நிலை: திருத்தலப் பேராலயம்

கிளைப்பங்குகள்:

1. புனித சூசையப்பர் ஆலயம், அனுப்பானடி

2. புனித அந்தோனியார் ஆலயம், பழையகுயவர் பாளையம்

3. புனித அந்தோனியார் ஆலயம், சந்தைப்பேட்டை

4. புனித ஆரோக்கிய மாதா ஆலயம், காமராஜ புரம்

5. புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், போக்குவரத்து நகர்

6. புனித பாத்திமா அன்னை ஆலயம், கீரைத்துறை

7. புனித செபஸ்தியார் ஆலயம், செபஸ்தியார் புரம்

8. புனித அந்தோனியார் ஆலயம், சூசையப்பர் புரம்

9. புது மீனாட்சி நகர்

10. மேல அனுப்பானடி ஹவுஸிங் போர்டு

11. புனித சவேரியார் ஆலயம், சவேரியார் சாவடி

12. பராசக்தி நகர்

13. மீனாட்சி நகர்

14. மதர் செட்

அதிபர் & பங்குத்தந்தை அருட்தந்தை. ஹென்றி ஜெரோம், SJ

உதவி பங்குத்தந்தையர்

அருட்தந்தை. ஜோ லிவிங்ஸ்டன், SJ

அருட்தந்தை. பெனிட்டோ, SJ

குடும்பங்கள்: 1600

அன்பியங்கள்: 43 

திருவழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி காலை 06:00 மணி, காலை 07:45 மணி, மாலை 06:00 மணி

ஞாயிறு மாலை 05:00 மணி திருப்பலி (ஆங்கிலம்)

நாள்தோறும் திருப்பலி காலை 06:00 மணி மற்றும் மாலை 06:00 மணி

செவ்வாய் மாலை 06:00 மணி புனித அந்தோனியார் நவநாள் திருப்பலி

வெள்ளி மாலை 06:00 மணி திருஇருதய ஆண்டவர் நவநாள் திருப்பலி

சனி மாலை 06:00 மணி வியாகுல மாதா நவநாள் திருப்பலி

மாதத்தின் முதல் சனி மாலை 06:00 மணி தேர்பவனியுடன் கூடிய ஜெபமாலை, நவநாள் திருப்பலி, நற்கருணை ஆசீர்

முதல் வெள்ளி காலை 06:00 மணி திருப்பலி, நற்கருணை ஆசீர் 

காலை 11:30 மணி திருப்பலி, குணமளிக்கும் வழிபாடு, நற்கருணை ஆசீர் 

மாலை 06:00 மணி திருஇருதய ஆண்டவர் நவநாள் சிறப்பு திருப்பலி, குணமளிக்கும் வழிபாடு, எண்ணெய் பூசுதல், அன்பின் விருந்து 

திருவிழா: செப்டம்பர் மாதம் 17-ம் தேதியை மையமாகக் கொண்டு பத்து நாட்கள்

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி. V. கில்பர்ட் கமிலஸ், SJ

2. அருட்பணி. B. வின்சென்ட் சேகர், SJ

3. அருட்பணி. I. ஜான் சேவியர் ராஜ், தெலசால் சகோதரர்கள சபை

4. அருட்பணி. தோனி வியாகுலா, SJ

5. அருட்பணி. செபாஸ்டின் முத்துராஜ், SDB

6. அருட்பணி. D. அந்தோணி பிரிட்டோ, SAC

7. அருட்பணி. A. தர்மராஜ், தூய பிரான்சிஸ்கன் சபை

8. அருட்பணி. சகாயராஜ் விஜயன், SJ

9. அருட்சகோ. I. ஜான் விக்டர், தூய பிரான்சிஸ்கன் சபை

10. அருட்சகோ. விக்டர் சகாயராஜ், மரியின் சபை

11. திருத்தொண்டர். விவேக், SJ

மற்றும் பல அருட்சகோதரிகள்...

ஆலய இன்ஸ்டாகிராம்: https://www.instagram.com/st_marys_church_madurai...

வழித்தடம்: மதுரை -கீழவாசல் திருமலை நாயக்கர் மகால் அருகில்.

Church Map location: St. Mary's Cathedral

https://maps.google.com/?cid=3579706940444026233&entry=gps

வரலாறு:

திருத்தலப் பேராலயப் பழம் பெருமை:

உலகளாவிய பேராலயங்களின் வரிசையில் அமைந்துள்ள ஓர் இந்தியப் பேராலயம்.

500 ஆண்டுகள் வரலாற்றை உள்ளடக்கும் ஆலயம்.

16ம் நூற்றாண்டு முதல் இந்திய நாட்டின் தென்பகுதியில் திருமறை வளர, வேராக நின்று விழுதுகளைப் பரப்பிய ஆலயம்.

5000 ஆண்டுகள் பழமைவாய்ந்த மதுரையில், 500 ஆண்டுகள் வரலாற்றைத் தாங்கும் கோவிலாக நின்று, இம்மாமதுரைக்கு ஓர் அன்னை ஆலயமாக இருந்து, தன் சேவை நிறுவனங்கள் மூலம் மக்களுக்கு அறப்பணி செய்து வரும் ஆலயம்.

நம்வாழ்வோடு இணைந்த வியாகுலம் என்னும் வாழ்வியல் சிந்தனையை மிக ஆழமாகச் சொல்லும் ஆலயம்.

தென்னிந்திய மண்ணில் கல்வி மற்றும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்திய சேசுசபை குருமார்கள், 450 ஆண்டுகளாக இவ்வாலய வளாகத்தை மையமாக வைத்தே பணி செய்கின்றனர்.

இராபர்ட் டி நோபிலி, வீரமாமுனிவர் போன்ற சேசுசபை குருக்கள் ஆன்மிகத் தொண்டும், தமிழ்த் தொண்டும், இலக்கியத்தொண்டும், மறைத்தொண்டும், கல்வித் தொண்டும் சமூகத்தொண்டும் ஆற்ற தூண்டுகோலாய் இருந்த ஆலயம். ஜான் டி பிரிட்டோ, அகஸ்டஸ் கப்பல்லி போன்ற எத்தனையோ குருக்கள் தங்கள் உயிரையே தியாகம் செய்து வாழ்ந்த புனித வாழ்விற்கு சாட்சியாக நிற்கும் ஆலயம். ஆன்மீகம், அழகு, வரலாற்றுச் சேவை இம்மூன்றையும் உள்ளடக்கும் சரணாலயம்.

ஹீப்ரு கட்டிடக் கலை முதல், கோத்திக் கட்டிடக்கலை வரை, ஐரோப்பாவின் அனைத்துக் கட்டிடக் கலைகளையும் உள்ளடக்கும் ஆலயம்.

திருமலை மன்னரின் (1623-1659) சிறப்பான ஆட்சிக்கு உறுதுணையாக இருந்து, ஆன்மிகம், கல்வி, மற்றும் சமூகம் சார்ந்த முன்னேற்றங்களுக்குக் காரணமாயிருந்தது இவ்வாலயம் சார்ந்த அமைப்புகளும், இங்கு தங்கிப்பணி செய்த சேசுசபை குருக்களும். புனித தோமையாரை இந்திய மண்ணிற்குக் கொண்டு வந்தது அகஸ்டஸ் காலத்து உரோமைப் பேரரசு. அவரை இந்திய மண்ணிற்கு வரச் செய்தது பாண்டிய நாடும், அதன் தலைநகரமான மதுரையும். இம் மதுரை மண்ணில் மக்கள் பணியில் மையமாக நின்று இன்றுவரை செயல்படும், இவ்வாலயத்தில் வீற்றிருக்கும் "மரியன்னை" இம்மாமதுரைக்கும் ஓர் அன்னையே. ஆலய அறப்பணிகளைச் செய்த வீரப்பநாயக்க மன்னர் 1592-ல் மரியன்னைக்கு ஆலயம் எழுப்ப உதவிபுரிந்து மதுரைக்கு அன்னையாக்கினார்.

வரலாற்றுச் சிறப்புகள்:

புனித தோமையார் வருகை : 

புனித தோமையார் இந்திய நாட்டிற்கு வருவதற்கு முன்பே, பாண்டிய நாட்டோடு உரோமானியர்கள் வியாபாரத் தொடர்பு வைத்திருந்தனர். மதுரையில் வைகை நதிக்கரையில், உரோமானியர்களின் குடியிருப்பு அமைந்திருந்தது. மேலும் அவர்கள் இங்கு தங்கி வியாபாரம் செய்தனர். காவலர்களாகப் பணி செய்தனர் என்பதற்கும் சான்றுகள் உள்ளன. இந்தச் சூழ்நிலையை வைத்தே புனித தோமையார் கி.பி.52 முதல் கி.பி. 72 வரை பாண்டிய நாட்டில் வாழ்ந்து, மறைபணிசெய்து, சாந்தோம் பகுதியில் வேதசாட்சியாக மரித்தார். தோமையார்காலத்து மதுரை, மேற்குகடற்கரைத் துறைமுகத்தையும், (முசிறியையும்) கிழக்கு கடற்கரையில் அமைந்த சாந்தோமையும் இணைத்தது. எனவே The Mediterranean Emporium of Madurai என்ற பெயரால் உரோமானியர்கள் மதுரைக்கு முக்கியத்துவம் அளித்தார்கள்.

போர்த்துக்கீசியர் வருகை : 

1498-ல் வாஸ்கோடகாமா

இந்தியாவிற்குக் கடல்வழி கண்டுபிடித்தபின், கிறிஸ்தவமறை 1514-ல் கோவாவில் கோவா மிஷன் என்றும், 1542-கிழக்குக் கடற்கரைப் பகுதியில் சவேரியன் பேர்ல் ஃபிஷரி மிஷன் என்றும், 1579 முதல் பேரரசர் அக்பர் ஆதரவோடு, தி கிராண்ட் மொகல்மிஷன் என்றும், 1592-ல் மதுரையில் மதுரை மிஷன் என்றும் வேரூன்றியது. அருட்திரு கொன்சாலோ ஃபேர்னான்டஸ் சே.ச மதுரையின் முதல் பங்குத்தந்தை ஆவார்.

இராபர்ட் டி நோபிலியின் வியத்தகு பணிகள்:

கி.பி.1606, நவம்பர் திங்கள் 15-ம் நாள் மதுரை வந்த இராபர்ட் டி நோபிலி என்னும் சேசுசபைக்குரு 36 ஆண்டுகள் இப்பேராலயப் பகுதியை தலைமை இடமாக வைத்து திருநெல்வேலி, திருச்சி, இராமனாதபுரம், கரூர், ஈரோடு, கோயம்புத்தூர் மேலும் ஆந்திரா, மைசூர் பகுதிகளில் பணிசெய்ய தானே ஓர் இந்தியமுறையைப் பின்பற்றிய கிறிஸ்தவ சன்னியாசியாக மாறினார். மேலும் திருமலை மன்னரின் அவைப் புலவராயிருந்து, தகவமைப்பு ADAPTATION என்ற முறையைப்பின்பற்றி ஆன்மிகப்பணி, கல்விப்பணி, சமயப்பணி செய்தார். இவரது முயற்சியால் நாடெங்கிலும் 10,000 மாணவர்கள் கல்வி பயின்றுள்ளனர். 1710லிருந்து 1714 வரை பெஸ்கி என்ற வீரமாமுனிவர் இங்கு தங்கிப் பணி செய்தார். இக்கோவில் பணிகள் அனைத்தும் திருமலை நாயக்கரின் பேராதரவைப் பெற்றது என்பதற்கு, அது அரண்மனைக்கு மிக அருகாமையிலிருப்பதே ஒரு சான்றாகும். இந்த அரண்மனையை வடிவமைத்தவர் இராபர்ட் டி நோபிலியோடு தொடர்புடைய இத்தாலியர். இவர் அரசர், அந்தணர், ஆதீனம் இவர்களோடு வைத்திருந்த நெருங்கிய உறவு திருமறை வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது. தமிழ்நாடு, மைசூர், ஆந்திரா ஆகிய பகுதிகளில் திருமறை வளர்த்த பெருமை மதுரை மிஷனையே சாரும்.

அருட்திரு பெர்டினன்ட் மற்றும் கார்னியர் இவர்களது பணிகள்: 

1840-ம் ஆண்டு இந்த ஆலய விரிவாக்கத்திற்கான நிலங்கள் வாங்கப்பட்டது. 1856-ல் அருட்திரு திரிங்கால் சே.ச அவர்களால் 60 மாணவர்களுக்கான (33 உள்விடுதி மாணவர்கள்) பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. 1857-ல் முதல் ஆலயத் திருவிழா ஊர்வலம் நடைபெற்றது. 1916-ல் அருட்திரு பிளாஞ்சார்டு சே.ச. அவர்களால் தற்போதைய புதிய ஆலயத்தின் பின்பகுதி கட்டிமுடிக்கப்பட்டது. பிறகு தற்போதைய ஆலயத்தின் முன்பகுதி 1963-ல் ஆரம்பிக்கப்பட்டு, அருட்திரு T.M. மத்தாய் சே.ச., K.S. அருளானந்தம் சே.ச., X.M. அடைக்கலம் சே.ச. இவர்கள் முயற்சியால் கட்டிமுடிக்கப்பட்டு 1969 ஜூலை 13ம் நாள் இவ்வாலயம் பேராலயமாக உயர்த்தப்பட்டது. தற்போது 2024 முதல் உள்ள சேசு சபை குருக்களும், மக்களும் இதை திருத்தலமாக உயர்த்த முயற்சி செய்து வந்ததன் பயனாக 30.11.2025 அன்று திருத்தலப் பேராலயமாக உயர்த்தப்பட்டது. இதுவரை இங்கு நூறுக்கும் மேற்பட்ட  அருட்பணியாளர்கள் பணிபுரிந்துள்ளனர். தற்போதும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.

கட்டிடக்கலை அம்சங்கள்:

இவ்வாலயம் ஹீப்ரூ, கிரேக்கம், ரோமன், கோதிக், ஜெர்மன், வெனிஸ், ஸ்பெயின், மொனாட்டிக் ஆகிய கட்டிடக்கலை அம்சங்களை உள்ளடக்கியது. கலையழகு மிகுந்த உலக தேவாலயங்களில் இதுவும் ஒன்று. மேற்கூரை (Upper Roof) கீழ் கூரை (Lower Roof) என இருதளங்களைக் கொண்டது. கூரைகளின் உச்சியில் PINNACLES என்ற அழைக்கப்படும் 164 சிறிய கோபுரங்கள் அழகு செய்கின்றன. இங்கு 56 மேல் வளைவுகளும், 336 உள்வளைவுகளும் உள்ளன.

ஸ்டீபிள் ஹீப்ரூ கலையைப் பின்பற்றி கிரேக்க டாரிக்துண்கள், ரோமன் தூண்கள், கோத்திக் தூண்கள் என மூன்று வகைகள் இணைந்த 100 தூண்கள் இக்கோயிலைத் தாங்கி நிற்கின்றன. லத்தீன் சிலுவை (Latin Cross) வடிவில் அமைக்கப்பட்ட இக்கோவில் 9 சிலுவை வடிவங்களை உள்ளடக்கியுள்ளது. பல நிறக்கண்ணாடிகள் பொருத்தப்பட்ட 80 ஜன்னல்களும், 4 அழகிய ரோஸ் கண்ணாடி ஜன்னல்களும் இங்கு உள்ளன. ஆலயத்தின் கோபுரங்கள் ஜெர்மன் கோபுரங்களாகும். அவற்றிற்குள் KINGS BOLD என்று அழைக்கப்படும் ரஷ்ய வகையைச் சார்ந்த இரண்டு மணிகள் பொருத்தப்பட்டுள்ளன. லியோனர்டோ டாவின்சியின் கடைசி இரவு உணவு சுரூபம், மைக்கில் ஆஞ்சலோவின் பியட்டா (Pieta), ரபேல் என்பவரின் மடோனா (Madonna), ஜியோவான் பெல்லியின் உத்தரிய மாதா சுரூபங்களின் மாதிரிகள் இங்கு உள்ளன.

ஆன்மீகம்:

இங்கு புனித வியாகுல அன்னையின் வாழ்வியல் ஆன்மீகமும், சிலுவை ஆன்மீகமும் வளரும் வகையில் பேராலய சுரூபங்கள் அமைந்துள்ளன. விழுதலும், எழுதலும் மற்றும் கலங்குவதும் கரை சேருவதும் என்ற சிந்தனையைத் தூண்டும் வியாகுல அன்னயிைன் சுரூபம் நம்மை வியக்கவைக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும் இது மக்களுக்கு ஏழு ஆன்மீக  சிந்தனைகளைக் கொடுக்கும் அர்த்தமுள்ள சுரூபமாக இருக்கிறது. இதுபாடுகளின் பாதையில் நற்செய்தி சொல்லும் தேவாலயம். பீடத்தில் இறைவன், தூயஆவி, மரியாள், இயேசு, அப்போஸ்தலர், குருக்கள், மக்கள், இவர்கள் வழியாக பாடுகளின் பாதை அமைந்துள்ளதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. பெரிய சனிக்கிழமை புதுமையை விளக்கும் இயேசுவின் புனிதத் துணியில் பதிந்த அவரது உண்மைப்படங்களும் இக்கோவிலில் இடம் பெற்றுள்ளன.

ஒரு வருடத்திற்கு குறைந்தது 1,00,000 பேர் இவ்வாலயத்தை தரிசிக்க வருகின்றனர். கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட நாட்களில் ஏறத்தாழ 50,000 பேரும் சாதாரண நாட்களில் 100 முதல் 200 பேர்கள் மற்றும் வெளிநாட்டினரும், பிற சமயத்தினரும், இவ்வாலயத்திற்கு வந்து வரங்கள் பெற்றுச் செல்லுகின்றனர். பங்குபேரவை, பக்த சபைகள், 43 அன்பியங்கள், சமூக முன்னேற்ற குழுக்கள் இதர செயற்குழுக்கள் என பலவிதமான இயக்கங்களின் செயல்பாடுகளில் இவ்வாலயத்தின் பங்கு மக்கள் ஈடுபட்டுள்ளனர். 2011ம் ஆண்டு பங்குப்பேரவையின் பொன்விழா கொண்டாடப்பட்டு, அதன் நினைவாக நற்கருணை ஆராதனை கூடம் அமைக்கப்பட்டது. மேலும் பங்குமக்கள் பொருள் உதவி செய்ய, பங்குத் தந்தையர்களின் முயற்சியால் ஆலயக் கூரை ஒலி- ஒளி அமைப்பு, வெண்கலக் கொடிமரம் இவை அமைக்கப்பட்டன.

மரிவலம்:

பேராலயத்தை சுற்றி அன்னையின் பல்வேறு பெயர்களில் விளங்கும் 21 கெபிகள் நிறுவப்பட்டு, 31.05.2025 சிவகங்கை மறைமாவட்ட ஆயர் மேதகு லூர்து ஆனந்தம் அவர்களால் மந்திரிக்கப்பட்டது.

பங்கில் உள்ள இல்லங்கள்:

1. புனித தெரசா இல்லம் 

2. நிமல நிக்கேதன் இல்லம் 

3. அமலவை சபையின் தலைமையகம் 

4. புனித வளனார் இல்லம் 

5. நேயகம் இல்லம்

6. பாத்திமா இல்லம்

7. ஐடியாஸ் இல்லம் 

8. டாக்கா இல்லம் 

9. இயேசு சபை இல்லங்கள்

பங்கில் உள்ள கல்வி நிறுவனங்கள்:

1. St. Mary's Primary School

2. St. Mary's Higher Secondary School

3. Nirmala Girls Hr sec school

4. Justin BEd college 

5. Fatima High School

6. St Joseph's Girls Hr sec school 

7. St Joseph's Matric Hr sec school 

8. St Joseph's Primary school 

9. RC Girls high school

10. Carmel Catherine Primary and Nursery SCHOOL 

11. TWIN SCHOOL

12. Britto Hostel

பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:

1. பங்குப்பேரவை

2. குடும்ப நல்வாழ்வு இயக்கம்

3. புனித பிரான்சிஸ்கன் பொதுநிலையினர் 3-ம் சபை

4. பெண்கள் பணிக்குழு

5. புனித மரியன்னை சமூக நல மன்றம்

6. புனித வின்சென்ட் தே பவுல் சபை

7. மரியாயின் சேனை

8. புனித வளனார் சான்றோர் இயக்கம்

9. நற்செய்தி பணிக்குழு

10. இளையோர் இயக்கம்

11. பாலர் சபை

12. பீடச்சிறார்

13. மறைக்கல்வி

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:

1. அருட்தந்தை. ஜே.பி. திரிங்கால், SJ (1854-1879)

2. அருட்தந்தை. பிளான்ச், SJ (1879-1921)

3. அருட்தந்தை. கபிரியேல் கோமஸ், SJ (1921-1941)

4. அருட்தந்தை. விக்டர் அல்லார்டு, SJ (1941-1946)

5. அருட்தந்தை. ஆர். ஞானபிரகாசம், SJ (1946-1947)

6. அருட்தந்தை. அருள் குழந்தைசாமி, SJ (1947-1948)

7. அருட்தந்தை. பிளாஞ்சார்டு, SJ (1948-1949)

8. அருட்தந்தை. போனூர், SJ (1949-1953)

9. அருட்தந்தை. ஏ. மரிய மிக்கேல், SJ (1954-1956)

10. அருட்தந்தை. ராயப்பா அலெக்ஸாண்டர், SJ (1956-1958) 

11. அருட்தந்தை. இக்னேசியஸ் இருதயம், SJ (1958-1961)

12. அருட்தந்தை. எக்ஸ். எம். அடைக்கலம், SJ (1961-1968)

13. அருட்தந்தை. டி. டயஸ், SJ (1968-1970)

14. அருட்தந்தை. எஸ். ஆரோக்கியசாமி, SJ (1970-1974)

15. அருட்தந்தை. டி. குழந்தைராஜ், SJ (1974-1981)

16. அருட்தந்தை. ஏ. அம்புரோஸ், SJ (1981-1986)

17. அருட்தந்தை. எம்.ஜே. விக்டர், SJ (1986-1991)

18. அருட்தந்தை. எஸ். இரோணிமுஸ், SJ (1991-1994)

19. அருட்தந்தை. ஜோசப் நெடுங்காட், SJ (1994-1998)

20. அருட்தந்தை. பி. ஆரோக்கியராஜ், SJ (1998-1999)

21. அருட்தந்தை. எம். இலாரன்ஸ் கபிரி, SJ (1999-2002)

22. அருட்தந்தை. மரிவளன், SJ (2002-2005)

23. அருட்தந்தை. ஏ. பெலிக்ஸ் ஜோசப், SJ (2005-2008)

24. அருட்தந்தை. மௌண்ட் ஜோ, SJ (2008-2010)

25. அருட்தந்தை. பி.எஸ். அருள், SJ (2010-2013)

26. அருள்தந்தை. ர. ஆரோக்கியராஜ், SJ (2013-2017)

27. அருட்தந்தை. ச. எரோணிமுஸ் (பொறுப்பு) (டிசம்பர் 2017 -மே 2018)

28. அருட்தந்தை. சா. மரியநாதன், SJ (2018-2024)

29. அருள்முனைவர். V. ஹென்றி ஜெரோம், SJ (2024—

புனித மரியன்னையின் பரிந்துரையில் பல்வேறு அற்புதங்கள் நாள்தோறும் நடந்து வருகிறது. நீங்களும் வாருங்கள்.... அன்னையின் வழியாக வரங்களையும், அற்புதங்களையும் பெற்றுச் செல்லுங்கள்...

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குதந்தை ஹென்றி ஜெரோம், SJ அவர்களின் அனுமதியுடன், உதவி பங்குத்தந்தை ஜோ லிவிங்ஸ்டன், SJ அவர்கள்.