புனித அந்தோனியார் ஆலயம்
இடம்: மல்லிகாபுரம், உத்திரமேரூர் P.O, 603406
மாவட்டம்: காஞ்சிபுரம்
மறைமாவட்டம்: செங்கல்பட்டு
மறைவட்டம்: பள்ளியாகரம்
நிலை: பங்குத்தளம்
கிளைப்பங்கு:
1. புனித ஆரோக்கிய மாதா ஆலயம், கருவேப்பம்பூண்டி மடம்
2. புனித ஆரோக்கிய மாதா ஆலயம், மருதம்
பங்குத்தந்தை அருட்பணி. S. வினோத் ராஜ்
தொடர்புகொள்ள: +91 98426 71435
குடும்பங்கள்: 300
அன்பியங்கள்: 6
வழிபாட்டு நேரங்கள்:
ஞாயிறு திருப்பலி காலை 07:30 மணி
திங்கள், புதன், வியாழன் திருப்பலி காலை 07:00 மணி
செவ்வாய், வெள்ளி திருப்பலி மாலை 06:00 மணி
மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை காலை 11:00 மணி திருப்பலி, ஆராதனை, எண்ணெய் பூசுதல். மாலை 06:00 மணி தேர்பவனி, ஆராதனை, எண்ணெய் பூசுதல் (நோய்கள் குணமாகவும், பேய் தொல்லையிலிருந்து விடுபடவும்)
திருவிழா: ஜூன் 13-ம் தேதி
மண்ணின் இறையழைத்தல்கள்:
1. அருட்பணி. வெனிஸ் ராஜ், SJ
2. அருட்பணி. வசந்த், SJ
3. திருத்தொண்டர். ஜெய்சங்கர், செங்கல்பட்டு மறைமாவட்டம்
4. அருட்சகோதரி. ஆரோக்கிய செல்வி
வழித்தடம்:
சென்னை -செங்கல்பட்டு -புக்கதுறை -உத்திரமேரூர் -மல்லிகாபுரம்.
காஞ்சிபுரம் -உத்திரமேரூர்..
மதுராந்தகம் -எண்டத்தூர் -உத்திரமேரூர்
Church Map location:
https://share.google/HcSfgaZaJdF4CSVyh
வரலாறு:
இறையேசுவில் அன்பிற்கினிய புனித அந்தோணியார் பக்தர்களே...!!! மல்லி புனிதர் பதுவை அந்தோணியார் திருநாமத்திலே அனைவரையும் வரவேற்று, இந்த புனித அந்தோணியார் திருத்தலத்தைப் பற்றியும், இங்கு கூடி வாழும் கிராம மக்களின் ஆன்மீக நம்பிக்கை பற்றியும், திருத்தல வரலாறாக தங்கள் முன் சமர்ப்பிக்கின்றோம்.
பொலிவுடன் உயர்ந்து நிற்கும் புனித அந்தோணியார் ஆலயம் 1937-ம் ஆண்டு கட்டப்பட்டு, மேதகு ஆயர். கோலாஸ் D.D. அவர்களால் புனிதப் படுத்தப்பட்டது. ஆலயம் கட்டுவதற்கு முன்பாக இந்த கிராம மக்கள் ஈச்சகங்காடு, மல்லியங்கரணை, களத்துமேடு போன்ற இடங்களில் விவசாயத்திற்காகவும், ஆடு, மாடு மேய்ச்சலுக்காகவும் அங்கேயே தங்கி வாழ்க்து வந்தனர். அதன் பிறகு பாண்டிச்சேரி உயர் மறைமாவட்ட குருக்களின் சீரிய முயற்சியால், காஞ்சிபுரம் கீழ்ரோடு பேருந்து வழித்தடம் ஏற்பட்ட பிறகு, கிராம பெரியோர்களும் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்டதே மல்லி புனித அந்தோணியார் ஆலயமாகும். ஓங்கூர் பங்கில் இருந்து குருக்கள், மல்லிகாபுரம் ஆலயத்தை நிர்வாகம் செய்து வந்தனர். அதன் பிறகே நாளடைவில் மல்லிகாபுரம் புனித அந்தோணியார் பங்காக அறிவிக்கப்பட்டது. தனி குருவானவர் நியமனம் செய்யப்பட்டு; மல்லிகாபுரம், உத்திரமேர், மருதம், கருவேப்பம் பூண்டி மடம், அழிசூர், குன்னவாக்கம் போன்ற கிராமங்களை உள்ளடக்கிய பங்காக 1970-ம் ஆண்டு முதல் செயல்படத் துவங்கியது.
மல்லி புனித அந்தோணியார் ஆலயமானது மறைமாவட்ட குருக்கள், சேசு சபை குருக்கள், நற்செய்தி தூதுவர் சபை குருக்களால் நிர்வாகம் செய்யப்பட்டு வந்தது. இதுவரை 19 குருக்கள் பங்கினை அலங்கரித்துள்ளனர். 19-வது பங்குத்தந்தையாக தற்போது அருட்பணி. வினோத்ராஜ் அவர்கள் பணிபுரிந்து வருகிறார்.
பங்கின் வளர்ச்சி:
அருட்பணி. G. சூசைநாதர் சுவாமிகள், R. ராஜா சுவாமிகள் ஆகியோர் ஊர் கட்டமைப்பை சதுரவடிவில் அமைக்கப் பெரிதும் பாடுபட்டவர்கள் ஆவர்.
அருட்பணி. ராஜா சுவாமிகள் நினைவாக உருவாக்கப்பட்ட ஊரே R.C. ராஜாநகர் என்கின்ற, குட்டக்கரை பகுதியாகும்.
அருட்பணி. செல்வராஜ், அருட்பணி. ஜார்ஜ் ஜோசப் ஆகியோர் ஒன்றிணைந்து, "புதிய வானம் - புதிய பூமி" என்ற யேசுபிரானின் வாழ்வை நாடக வடிவில் தமிழ்நாடு முழுவதும் சென்றடைய வைத்த குருக்கள் ஆவர். இந்த நாடகத்தில் மல்லிகாபுரம் ஊர் மக்களே நாடக கலைஞர்களாக நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அருட்பணி. அகஸ்டின், சேசு சபை அவர்களால் கட்டப்பட்டது தான், மக்கள் இன்றளவும் பயன்படுத்தி வருகிற பேராயர் கசிமீர் பல்நோக்கு சமுதாயக் கட்டிடம்.
அருட்பணி. ஜெரி அவர்கள் "புதிய சமுதாயம்" என்ற போர் முழக்கம் மூலம் குருக்கள் -பொதுமக்கள் இடைவெளியை குறைத்து, மக்களுக்காகவே குருக்கள் என்ற உயரிய கருத்தை விதைத்து, விழிப்புணர்வுடன் வாழ கற்றுத் கொடுத்தார்.
அருட்பணி. தாமஸ் அவர்கள் புனித அந்தோணியார் கெபியை அமைத்து, அங்கேயே திருப்பலி நடைபெறவும், மக்கள் அமர்ந்து வழிபடவும் ஏற்பாடுகள் செய்தார்.
அருட்பணி. வசந்தராஜ் அவர்களின் சீரிய முயற்சியால் பொதுமக்கள் ஆதரவுடன், 14-சிலுவைப் பாடுகளின் ஸ்தலங்கள் அமைக்கப்பட்டது. மேலும் புனித அந்தோணியார் கெபி கட்டப்பட்டு, 10.09.2021 அன்று பேரருட்பணி. பாக்கிய ரெஜிஸ் அவர்களால் புனிதப்படுத்தப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
அருட்பணி. ஜெயராஜ் அவர்களின் சீரிய முயற்சியால், மிகவும் பழுதடைந்திருந்த ஆலயத்தை புதியதாக உருவாக்கம் செய்து, 2009 ஜூன் மாதத்தில் மேதகு ஆயர் நீதிநாதன் அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது. ஆலயத்தைச் சுற்றிலும் பூங்காக்கள் அமைத்து பராமரித்து செயல்படுத்தினார்.
அருட்பணி. மைல்கேல் அவர்கள் ஆலய பீடத்தை மாற்றியமைத்தும், பங்கு குருவானர் தங்குவதற்கு அறைகளும் கட்டி முடித்தார்கள்.
அருட்பணி. வினோத் ராஜ் அவர்களால், மல்லி புனித அந்தோணியார் சுரூபம் அறிமுகப்படுத்தப்பட்டு, முன்னாள் குருகுல முதல்வர் பேரருட்பணி. ஜாண் போஸ்கோ அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
ஆலயத்தின் முன்பக்கம், பின்பக்கம் டைல்ஸ் அமைத்து பராமரிப்பு செய்தும், பேராயர் கசிமீர் சமுதாயக் கூட்டத்தை புதுப்பொலிவுடன், புதிய வடிவில் பராமரித்தும், மேலும் புதிதாக லூர்து அன்னை கெபியை கட்டி முடித்து, வழிபாட்டு தலமாக மேற்கொண்டு நடைமுறை படுத்தி வருகிறார்கள். யூபிலி ஆண்டு 2025 நினைவாக புதிய கல்வாரி மலை கட்டப்பட்டு, 11.04.2025 அன்று அருட்பணி. ஆனந்த் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
தன்னலங்கருதாமல் பல்வேறு குருக்களால், மல்லிகாபுரம் பல்வேறு வளர்ச்சி நிலைகளைக் கண்டு மென்மேலும் வளர்ந்து வருவது குறித்து பேராயர் நீதிநாதன் அவர்களும் மகிழ்கின்றார், மல்லிகாபுரம் மக்களும் மனம் மகிழ்ந்து வருகின்றனர். இவ்வாறாக ஆலயம் கட்டப்பட்டு 88 ஆண்டுகளைக் கடந்து வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருகின்றது மல்லிகாபுரம் இறைசமூகம்.
திருப்பயணிகள் திருயாத்திரை திருத்தலம்:
இங்கே தொடர்ந்து நடைபெறும் திருப்பலிகள், பக்தி முயற்சிகள், பங்கு மக்கள் பங்களிப்பு இவைகளாலேயே, 2025 யூபிலி ஆண்டின் நினைவாக இந்த ஆலயமானது, திருப்பயணிகள் திருயாத்திரை திருத்தலமாக உயர்த்தப்பட்டு, அருட்பணி. ஜெயராஜ் (ஆயரின் தனி பதில் குரு) அவர்கள் தலைமையில், பள்ளியாகரம் மறைவட்ட குருக்கள், பங்குதந்தை அருட்பணி. வினோத் ராஜ், இறைமக்கள் முன்னிலையில் 01.04.2025 அன்று விழாவாக கொண்டாடியதை குறித்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றனர் மல்லி இறைசமூகத்தினர்.
பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:
மரியாயின் சேனை
புனித அந்தோணியார் பஜனை குழு
இளையோர் குழு
மறைக்கல்வி
கெபி மற்றும் சிறப்புகள்:
தூய லூர்து அன்னை கெபி
புனித அந்தோணியார் புதுமை கூடாரம்
14 சிலுவைப் பாதை நிலைகள்
ஆயர் கஷ்மீர் பல்நோக்கு சமுதாய கூடாரம்
அடைக்கல அன்னை கிளினிக்
பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:
01. Rev. Fr. Susai .G, Mylapore 1970-1972
02. Rev. Fr. Raja .R C, Mylapore 1972-1973
03. Rev. Fr. Rayanna P, Mylapore 1973-1974
04. Rev. Fr. Selvaraj S M, SJ 1974-1981
05. Rev. Fr. Alexis Fernando, SJ, 1981-1984
06. Rev. Fr. George Joseph, SJ, 1984-1987
07. Rev. Fr. Jerry, SJ 1987-1989
08. Rev. Fr. Augustine, SJ, 1989-1998
09. Rev. Fr. Jayaraj Elangeshwaran, SJ 1998-1999
10. Rev. Fr Thomas, SJ 1999-2001
11. Rev. Fr. Irudaya Raj, SJ 2001
12. Rev. Fr. Arockiasamy, SJ 2002
13. Rev. Fr. Michael Raj, Chingleput, 2003-2008
14. Rev. Fr. Jayaraj, HGN 2008-2012
15. Rev. Fr. John Bosco, HGN, 2012-2014
16. Rev. Fr. Anthony Muthu Chinnappa, HGN, 2014-2018
17. Rev. Fr. Arul Vasanth HGN, 2018-2021
18. Rev. Fr. Benjamin HGN, 2021-2022
19. Rev. Fr. Vinoth Raj, Chingleput, 2022...
பதுவை புனிதர் மல்லி புனித அந்தோனியார் நம்மையும், நம்மை சுற்றியுள்ள கிராமங்களையும் காத்து, இங்கு வந்து செல்வோர் அனைவரையும் காத்து நமக்கு அருள் மழை பொழிவாராக ஆமென்.
தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குதந்தை அருட்பணி. வினோத் ராஜ் அவர்கள்.











